'எங்க போனாலும் இனி தப்ப முடியாது'.. சென்னை போலீசை கண்காணிக்க வந்தது பிரத்யேக ஆப்!
தினசரி ரோந்து செல்லும் சென்னை போலீஸார் தங்களுக்கு ஒதுக்கப்ட்ட பகுதியில் தான் ரோந்து செல்கிறார்களா என்பதை கண்காணிக்க பிரத்யேக செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
சென்னை: தினசரி ரோந்து செல்லும் போலீஸார் தங்களுக்கு ஒதுக்கப்ட்ட பகுதியில் தான் ரோந்து செல்ல வேண்டும். அவர்கள் குறிப்பிட்ட பகுதிக்கு ரோந்து சென்றார்களா இல்லையா என்பதை கண்காணிக்க காவல்துறை புதிதாக ஒரு ஆப்பை உருவாக்கி உள்ளது. இதன் சம்பந்தப்பட்ட ரோந்து போலீஸார் எத்தனை முறை அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்துக்குச் சென்றார் என வாரம், மாதம் வாரியாக துல்லியமாகக் கணக்கிட முடியும்.
சென்னையில் குற்றச் செயல்களை தடுக்க ரோந்து பணிகளில் போலீசார் தீவிரம் காட்டுகிறார்கள். தினசரி இரவு நேரத்தில் தீவிர வாகன சோதனை நடக்கிறது. பகலிலும் அடிக்கடி வாகன சோதனைகள் நடக்கிறது. முக்கியமான சாலைகளில் போலீசாரின் ரோந்து வாகனங்களை அடிக்கடி பார்க்க முடியும். 24 மணி நேரமும் ரோந்து பணிகளை மேற்கொள்கிறார்கள்.
சென்னையின் முக்கிய சாலைகளில் மட்டுமின்றி, சிறிய தெருக்களில் கூட செல்கிறதார்கள். பல்வேறு தெருக்கள், அடுக்குமாடிக் குடியிருப்புகள், வணிக வளாக பகுதிகள் வழியாகவும் போலீசாருக்கு ரோந்து செல்கிறார்கள். அதற்கான அறிவுறுத்தல்களை காவல்துறை மேலிடம் வழங்கி உள்ளது.சிறிய சாலைகளில் செல்லும் வகையில்ரோந்து வாகனங்கள் போலீசாருக்கு வழங்கப்பட்டுள்ளன.

எப்படி
காவல்துறையினர் சரியாக ரோந்து செல்கிறார்களா என்பதை கண்காணிப்பதற்காக வங்கி ஏடிஎம்கள், மருத்துவமனைகள், முக்கியப் பகுதிகள், அலுவலகங்களில் காவல் துறை சார்பில் 'பட்டா புத்தகம்' வைக்கப்பட்டிருக்கிறது. ரோந்து சென்றதை உறுதிப்படுத்தும் வகையில் அதில் தேதி, நேரத்தைக் குறிப்பிட்டு கையெழுத்து போடுவார்கள்.

பட்டாபுத்தகம்
இந்நிலையில் சில போலீஸார் குறிப்பிட்ட நேரத்தில் ரோந்து செல்லாமல், சம்பந்தப்பட்ட பட்டாபுத்தகத்தை மொத்தமாக நிரப்பி வருவதாக புகார்களும் வருகின்றன. குறிப்பாக சில போலீசார் ரோந்துக்கு தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்திற்கு செல்லாமல், சாலையோரம் ரோந்து வாகனத்தை நிறுத்திவிட்டு அதிலேயே ஓய்வு எடுப்பதாகவும் புகார்கள் வந்தன.

காவலர்கள் செயலி
இதையடுத்து இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் ரோந்து போலீஸாரை கண்காணிக்க சென்னை காவல் துறை சார்பில் செல்போன் ஆப்பை போலீசார் உருவாக்கி உள்ளனர். இந்த ரோந்து ஆப் எப்படி இருக்கும் என்பது குறித்து போலீசார் கூறும் போது, "ரோந்து போலீஸார் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்துக்குச் சென்று அங்கு நின்றவாறே அவர்களது செல்போனில் ரோந்துக்கான பிரத்யேக ஆப்பை டவுன்லோடு செய்யப்பட்ட நிலையில் அதனைதொட வேண்டும். இப்படி எத்தனை இடங்களுக்குச் செல்கிறார்களோ அங்கு வைத்து ஆப்பில் தொட வேண்டும். இதன் மூலம் அவர்கள் ரோந்து சென்றது உறுதி செய்யப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.

சென்னையில் அறிமுகம்
ரோந்து போலீசாரின் செயல்களை இந்த ஆப் மூலம், போலீஸ் அதிகாரிகள் கண்காணிப்பார்கள். புதிய ஆப் மூலம் சம்பந்தப்பட்ட ரோந்து போலீஸார் எத்தனை முறை அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்துக்குச் சென்றார் என வாரம், மாதம் வாரியாக துல்லியமாகக் கணக்கிட முடியும் என்கிறார்கள் காவல்துறை உயர் அதிகாரிகள், ஒருவேளை போலீஸார் ரோந்து செல்லாமல் வேறு இடத்தில் இருந்தால் காட்டிக் கொடுத்துவிடும். எனவே ரோந்து போலீஸார் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களுக்குச் சென்றே ஆகவேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. தற்போதைய நிலையில் அறிமுக முயற்சியாக சென்னை அடையாறு காவல் மாவட்டத்தில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த செல்போன் செயலியின் செயல்பாடு திருப்பி அளித்தால் தமிழகம் முழுவதும் கொண்டுவரப்படும் என்கிறார்கள் காவல்துறை உயர் அதிகாரிகள்.
-
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications