சென்னை கேகே நகரில் காதலை கைவிட்ட காதலன்.. நடுரோட்டில் விரட்டி விரட்டி வெளுத்த இளம் பெண்
சென்னை: சென்னை கேகே நகரில் தோழி மற்றும் தோழன் இடையே சண்டையில் நடுரோட்டில் விரட்டி விரட்டி இளம் பெண் வெளுத்தார். அவரது தோழியும் சேர்ந்து தாக்கியுள்ளார். முதலில் தோழன் தாக்கிய நிலையில், அதன் பின்னர் இருவரும் தாக்கினார்களாம். 18 முதல் 20 வயது வயது மதிக்கதக்க ஆண், பெண் இருவரும் நின்று பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது வாக்குவாதம் முற்றிய நிலையில், அந்த பெண், தோழியுடன் சேர்ந்து தோழனை தாக்கி உள்ளார். இந்த வீடியோ சமூக ஊடங்களில் வெளியாகி உள்ளது. இது பற்றி நெட்டிசன்கள் பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
இன்றைய 2 கே கிட்ஸில் சிலர், கண்டதும் காதல், உடன் படிப்பவருடன் காதல், ஹீரோ போல் பந்தா செய்தால் காதல், மோட்டார் சைக்களில் ரேஸ் ஓட்டுவது போல் சென்றால் காதல், ஸ்டைலாக உடை அணிந்தால் காதல் என்று எதையும் ஆராயாமல் காதலிக்கிறார்கள். அவர்களின் குணம், அவரின் கல்வி தகுதி, அவருடைய சம்பளம் எவ்வளவு, குற்ற வழக்கில் தொடர்பு உடையவரா, நல்ல வேலையில் உள்ளாரா, நல்ல வேலைக்கு போக வாய்ப்பு உள்ளதா என எதையும் பார்ப்பது இல்லை.

கழட்டி விடும் காதலன்
பார்த்த உடன், பேசி பழகிய உடன் காதலிக்கிறார்கள். ஆனால் சிலர் காதலிப்பது போல் பெண்ணிடம் ஜாலியாக இருந்து கழட்டி விடுகிறார்கள். சில இளைஞர்களுக்கு பழகி ஜாலியாக சுற்றிய பின்னரே பெண்ணின் குணம் பற்றி தெரிய வருகிறது. இறுதியில் அந்த பெண்ணை கழட்டிவிடும் சம்பவமும் நடக்கிறது. காதலன் கழட்டிவிடுவதை தாங்கி கொள்ள முடியாத இளம் பெண்கள் சிலர் தவறான முடிவெடுக்கிறார்கள். சிலர் துணிச்சலாக போலீசில் புகார் அளிக்கிறார்கள். சிலர் வீட்டு வாசலில் தர்ணா போராட்டம் நடத்துகிறார்கள். சிலர் நடுரோட்டில் ஓட விட்டு அடிக்கிறார்கள். இதில் கடைசியாக சொன்னது தான் சென்னை கேகே நகர் பகுதியில் நடந்துள்ளது.
காதலனை தாக்கிய பெண்
சென்னை கேகே நகரில் தோழன் மற்றும் தோழி இடையே நட்பு முறிந்த நிலையில் இருவரும் சண்டை போட்டுள்ளனர். அந்த இளம் பெண்ணின் தோழியும் சேர்ந்து தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. 18 முதல் 20 வயது வயது மதிக்கதக்க ஆண், பெண் இருவரும் சாலையோரத்தில் நின்று சண்டை போட்டிருக்கிறார்கள். அந்த பெண் அசிங்கமான வார்த்தைகளை பேசினார். இந்த வீடியோ சமூக ஊடங்களில் வெளியாகி உள்ளது.
காதல் திருமணம்
இதுபற்றி நெட்டிசன்கள் பல்வேறு வகையான கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். ஒரு நெட்டிசன் கூறுகையில், "இந்த காதல் கல்யாணத்துக்கு சப்போர்ட் பண்ணி அலையுற ஒரு கூட்டம் .. எங்க போனீங்க... வந்து ரெண்டு பேரும் சேர்த்து கல்யாணம் பண்ணி உங்க இடத்துல வீடு கட்டி உங்கள் சொந்த காசுல ஒரு தொழில் பண்ணி வச்சு கொடுங்க.. எங்க போயிட்டீங்க.. எல்லாரும் காதல் திருமணத்துக்கு சப்போர்ட் பண்ற கம்னாட்டிகளா.. உங்க பிள்ளையை முதலில் கட்டி கொடுத்து அப்புறம் வந்து பேசுங்கடா.. மத்த பொண்ண பத்தி" என்று காட்டமாக கூறியுள்ளார்.
பெண் ஆணை அடித்தால்
இன்னொரு நெட்டிசன் கூறுகையில், "பெண் ஆணை அடித்தால் அதை கேலியாகவும் விளையாட்டாகவும் உரிமையாகவும் நினைக்கும் சமூகம், இதே குற்றத்திற்கு ஒரு ஆண் பெண்ணை அடித்தால், அதை பெண்ணை அவமதிப்பதாகவும் எப்படி பெண்ணை அடிக்கலாம் என்கிற கேள்வியையும் இந்த சமூகம் முன்வைக்கிறது. இங்கே ஆணுக்கு ஒரு நியாயம் பெண்ணுக்கு ஒரு நியாயம் என்றபடி தான் உள்ளது" என்று கூறியுள்ளார். இப்படி பல்வேறு கருத்துக்களை நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications