சென்னையில் துயரம்.. வெறும் 70 ஆயிரம் கடனுக்காக வீட்டுக்கு பூட்டு.. அவமானத்தில் உயிரை விட்ட தொழிலாளி
சென்னை: சென்னை புளியந்தோப்பு, கே.பி.பார்க்கில் குடியிருந்து வந்த தொழிலாளியின் வீட்டை வெறும் ரூ.70 ஆயிரம் கடனை திருப்பி செலுத்தாததால், கடன் கொடுத்தவர் வீட்டுக்கு பூட்டி உள்ளார். இதனால் மனம் உடைந்த தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை புளியந்தோப்பு கே.பி.பார்க்கில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது. இந்த குடியிருப்பில் ஏராளமான மக்கள் வசித்து வருகிறார்கள். இந்த அடுக்குமாடி குடியிருப்பில் 9-வது தளத்தில் 27 வயதாகும் சியாம் சுந்தர் என்பவர் வசித்து வந்தார். சியாம் சுந்தர் எழும்பூரில் உள்ள டிராவல்ஸ் கம்பெனியில் லோடுமேனாக வேலை செய்து குடும்பத்தை நடத்தி வந்தார். இவருக்கு மீனாட்சி என்ற மனைவியும், கனிஷ்கா (4), கயல் (3) மற்றும் கனுஸ்ரீ (1) என 3 பெண் குழந்தைகளும் உள்ளார்கள்,

சியாம் சுந்தர், அதே பகுதியைச் சேர்ந்த அஸ்கர் அலி என்பவரிடம் குடும்ப செலவுக்காக கடந்த 8 மாதங்களுக்கு முன்பு ரூ.70 ஆயிரம் கடன் வாங்கினாராம். சியாம் சுந்தரால் கடனை திருப்பி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.. ஆனால் தான் கொடுத்த கடனை திரும்பக்கேட்டு அஸ்கர்அலி தொடர்ந்து சியாம் சுந்தரை வற்புறுத்தினாராம்.
இந்த சூழலில் ஞாயிற்றுக்கிழமை இரவு கொடுத்த கடனை கேட்பதற்காக சியாம் சுந்தர் வீட்டுக்கு அஸ்கர் அலி சென்றுள்ளார், அப்போது வீட்டின் கதவு மூடப்பட்டு அதில் பூட்டு தொங்கி இருக்கிறது. இதனால் கோபம் அடைந்த அஸ்கர் அலி, தன்னிடம் இருந்த மேலும் ஒரு பூட்டால், சியாம் சுந்தர் வீட்டை பூட்டிவிட்டு சென்றிருக்கிறார்.
வெளியே சென்றிருந்த மீனாட்சி, தனது மகள்களுடன் இரவு 10 மணியளவில் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் கதவில் 2 பூட்டுகள் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனால் கணவரை தேடி எழும்பூர் சென்றுள்ளார். அங்கும் அவர் இல்லாததால் அஸ்கர் அலி வீட்டுக்கு சென்று குழந்தைகளை வைத்துக்கொண்டு வெளியே தங்க முடியாது என்று கெஞ்சி உள்ளார். அத்துடன் பணத்தை கொடுக்க ஏற்பாடு செய்கிறேன் என்று கூறி அவரிடம் இருந்து சாவியை வாங்கி விட்டு வீட்டுக்கு வந்துள்ளார்
பின்னர் வீட்டின் பூட்டை திறந்து சென்று பார்த்தபோது, பூட்டிய வீட்டுக்குள் தனது கணவர் சியாம் சுந்தர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு கடும் அதிர்ச்சி அடைந்தார்.
இதுபற்றி பேசின் பிரிட்ஜ் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டத. உடனடியாக விரைந்து வந்த போலீசார், தூக்கில் தொங்கிய சியாம் சுந்தர் உடலை இறக்கினர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.
அப்போது தான் என்ன நடந்தது என்பது தெரியவந்துள்ளது. மீனாட்சி, அஸ்கர் அலி வீட்டிற்கு சென்று வீட்டின் சாவியை வாங்கும் முன்பே, சியாம் சுந்தர் தனது வீட்டிற்கு வந்துள்ளார். அங்கு வீட்டில் 2 பூட்டுகள் தொங்குவதை கண்ட சியாம் சுந்தர் இதுபற்றி அஸ்கர் அலியிடம் கேட்டார்.
பின்னர் சாவியை தரும்படி கேட்டிருக்கிறார் ஆனால் அஸ்கர் அலி மறுத்துவிட்டார். இதனால் விரக்தி அடைந்த சியாம் சுந்தர், தனது வீட்டின் பால்கனி வழியாக ஏறிகுதித்து பூட்டி இருந்த வீட்டுக்குள் சென்றுள்ளார்.அங்கு திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் என்பது விசாரணையில் தெரிய வந்தது.

வெறும் 70 ஆயிரம் கடனுக்காக மனைவி மற்றும் 3 பச்சிளம் பெண்களை குழந்தைகளை தவிக்கவிட்டு விட்டு சியாம் சுந்தர் உயிரை மாய்த்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையில் அஸ்கர் அலி பேசின் பிரிட்ஜ் போலீசில் சரணடைந்தார். அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தற்கொலை எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வாகாது. தற்கொலை எண்ணம் வந்தால் உடனே அரசின் 104 என்ற எண்ணிற்கு அழையுங்கள். தற்கொலை எண்ணத்தில் இருந்து தயவு செய்து விடுபடுங்கள்.
-
Chennai Expressway: சென்னை டூ பெங்களூர் எக்ஸ்பிரஸ்வே! ஸ்ரீபெரும்புதூரில் நிலத்தின் மதிப்பு கிடுகிடு! -
சென்னையில் 20 லட்சம் கொடுத்து ஆசை ஆசையாக லீசுக்கு குடியேறிய வீடு.. இப்படியும் ஏமாறலாம் மக்களே -
சென்னையில் ஓஎம்ஆர், தி நகரில் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி.. தேடி வந்து விதிக்கப்படும் அபராதம் -
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
தமிழகத்தில் ரெக்கார்டு பிரேக்கிங் தேர்தல் எது? சப்தமில்லாமல் சாதித்த ஜெயலலிதா! -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை












Click it and Unblock the Notifications