சென்னை மாம்பலத்தில் பேண்டில் கைவிட்ட பெண்.. சபலப்படும் ஆண்களுக்கு வலை.. மொத்தமாக சிக்கியது எப்படி?
சென்னை: சென்னை மாம்பலம் பகுதியில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி ஒருவரின் பேண்ட் பாக்கெட்டில் இருந்து பெண் ஒருவர் பணத்தை திருட முயற்சித்தாரம். இதை கண்ட அந்த நபர் உஷாராகி அந்தபெண்ணை கையும் களவுமாக பிடித்தார். அந்த பெண்ணுடன் வந்த 3 பெண்களையும் பொதுமக்கள் பிடித்தனர். அவர்களை போலீசார் விசாரித்த போது, அழகை காட்டி மயக்கி பணத்தை பறிக்கும் வடமாநில பெண்கள் என்பது தெரியவந்தது. அவர்கள் நான்கு பேரையும் போலீசார் கைது செய்தனர்.
சென்னை மாம்பலம் ரயில் நிலையம் அருகே உள்ள பகுதிகள் திநகர் ரங்கநாதன் தெருவும் சரி, அந்த பக்கம் மாம்பலம் பகுதியும் சரி, கூட்டமாகவே இருக்கும். இந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி சிலர் திருடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அவர்களை போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுப்பார்கள்.

மாம்பலம்
அந்த வகையில் சென்னை மாம்பலம் பகுதியில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி ஒரு இளைஞரின பேண்ட் பாக்கெட்டில் இருந்து நைசாக பணத்தை திருட பெண் ஒருவர் முயற்சித்திருக்கிறார். அந்த இளைஞர் உஷாராகி அந்த பெண்ணை மடக்கி பிடித்தார். அந்த பெண்ணோடு வந்திருந்த மேலும் 3 பெண்கள் தப்பியோட பார்த்துள்ளார்கள். அவர்களை பொதுமக்கள் உதவியோடு அந்த இளைஞர் மடக்கி பிடித்தார். 4 பெண்களும் மாம்பலம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
வடமாநில பெண்கள்
போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் 4 பேரும் மத்தியபிரதேச மாநிலத்தை சேர்ந்த 36 வயதாகும் சோனம் , 35 வயதாகும் நேகா, 36 வயதாகும் சாவித்ரி பாய் , 45வயதாகும் மோகினி பாய் என்று கண்டுபிடித்தனர். அவர்களை பற்றி விசாரித்த போலீசாருக்கு பல்வேறு தகவல்கள் கிடைத்தது. இதன்படி, கைதான 4 பேரும் கொள்ளையடிப்பதை வழக்கமாக கொண்டவர்களாம். இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களுக்கு சென்று இவர்கள் கைவரிசை காட்டியிருக்கிறார்கள் என்பது, கூட்ட நெரிசலில் நடந்து செல்பவர்கள் தான் இவர்களது குறி என்பதும் விசாரணையில் தெரியவந்தது. மேலும் ஆண்களை அழகு காட்டி மயக்கி அவர்களிடம் இருந்து பணத்தையோ அல்லது தங்க நகைகளையோ பறித்துக்கொண்டு தப்பி சென்று விடுவதை வழக்கமாக வைத்திருந்தார்களாம்.
சபலபுத்தி ஆண்கள்
சபலபுத்தி உள்ள ஆண்கள் ஏராளமான பேர் இவர்களிடம் நகை, பணத்தை இழந்துள்ளார்களாம். வயதான பெண்களை சில நிமிடங்களில் ஏமாற்றி இவர்கள் நகை-பணத்தை பறிப்பதையும் வழக்கமாக வைத்துள்ளார்கள். ரெயில் மூலம் சென்று கைவரிசையை காட்டிவிட்டு மீண்டும் சொந்த ஊர்களுக்கு சென்று விடுவார்களாம். இவர்கள் 4 பேர் மீதும் ஏராளமான வழக்குகள் பல்வேறு மாநிலங்களில் நிலுவையில் இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. சென்னைக்கு முதன் முதலாக கைவரிசை காட்ட வந்த போது தான், மாம்பலம் போலீசாரிடம் சிக்கி கொண்டதும் தெரியவந்தது.












Click it and Unblock the Notifications