7 தோட்டாக்களுடன் காணாமல் போன கை துப்பாக்கி.. சென்னையில் பரபரப்பு சம்பவம்.. போலீஸ் விசாரணை
சென்னை: சென்னை மதுரவாயலில் கை துப்பாக்கியை காணவில்லை என பெட்ரோல் பங்க் உரிமையாளர் ஒருவர் புகார் அளித்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை மதுரவாயல் பகுதியை சேர்ந்தார் கோபாலகிருஷ்ணன். இவர் சென்னையில் மதுரவாயல் உட்பட 5 இடங்களில் இவர் பெட்ரோல் பங்குகளை நடத்தி வருகிறார். தனது பாதுகாப்பிற்காக முறையான லைசன்ஸ் பெற்று இவர் துப்பாக்கி ஒன்றை வைத்து இருந்தார்.

தீபாவளி
பெட்ரோல் பங்க் உரிமையாளர் என்பதால் சக பெட்ரோல் பங்க் உரிமையாளர்களுக்கு நேற்று தீபாவளியை முன்னிட்டு இவர் இனிப்புகள் கொடுக்க காரில் சென்றுள்ளார். அதன்பின் நேற்று பிற்பகலில் அசோக் பில்லரில் உள்ள தனது நண்பர் அமர்நாத் என்பவரை பார்ப்பதற்காக தனது சொந்த காரில் தனது மைத்துனர் பகத்சிங் என்பவருடன் சென்றுள்ளார்.

போலீஸ்
அப்போது இவர் தனது காரின் முன் பக்கம் இருந்த பேனட்டில் லைசன்ஸ் பெற்ற துப்பாக்கியை வைத்து இருந்தார். பாதுகாப்பிற்காக இவர் துப்பாக்கியை எடுத்துச்சென்றுள்ளார். இதை காரிலேயே வைத்துவிட்டு நேற்று தூங்கியவர் இன்று காலை காரை திறந்து பார்த்ததும் துப்பாக்கி இல்லாததால் அதிர்ச்சி அடைந்துள்ளார். இன்று காலை 09.00 மணிக்கு லாக்கரில் வைப்பதற்காக காரில் தேடியபோது துப்பாக்கியை காணவில்லை.

விதி
இதையடுத்து உடனடியாக இவர் மதுரவாயல் போலீசாரிடம் புகார் அளித்தார். தனது கை துப்பாக்கியில் தோட்டாக்கள் நிரப்பி வைத்திருந்ததாகவும் அவர் கூறியுள்ளார். இதில் 7 குண்டுகள் இருந்துள்ளன. 32 NP bore pistol வகை துப்பாக்கி காணாமல் போய்விட்டதாகவும் அவர் புகாரில் குறிப்பிட்டுள்ளார். விதிமுறைப்படி லைசன்ஸ் துப்பாக்கி காணாமல் போனால் உடனடியாக போலீசில் புகார் அளிக்க வேண்டும்.

புகார்
இதனால் அவர் T4 மதுரவாயில் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேற்படி புகாரைப் பெற்று போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள். 7 குண்டுகளோடு துப்பாக்கி ஒன்று காணாமல் போன சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. போலீசார் இது தொடர்பாக தற்போது தீவிர விசாரணை நடத்திக்கொண்டு இருக்கிறார்கள். இவரின் கார் சென்ற இடங்களில் எல்லாம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
முதல்வர் விஜய் தொகுதியில் சூட்கேஸுக்குள் தலையில்லாத ஆண் சடலம்.. பெரம்பூர் ரயில் நிலையத்தில் ஷாக்! -
காலையில் கஞ்சா பால்.. இட்லிக்கு கஞ்சா சட்னி.. பெட் ரூம் முழுக்க 70 கஞ்சா செடிகள்.. மிரண்ட போலீஸ் -
திருச்சியில் கார் ஓட்டுநரால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. மது கொடுத்து பாலியல் தொல்லை! -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
தஞ்சையில் கள்ளக்காதல்.. நள்ளிரவில் புருஷன்- சொந்த அக்காவை தீயில் கொளுத்திய அமுதா -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
காதல் திருமணம் செய்துக்கொண்ட மகள்! பெட்ரோல் குண்டு வீசிய பாசக்கார தந்தை! நெல்லையில் ஷாக்! -
எய்ட்ஸ் பெண் டீ குடிக்க கூப்பிட்டாராம்.. உடனே கிளம்பிய முதியவர்.. லேப்டாப்பை திறந்த போலீசுக்கு ஷாக் -
தோசைக்கல்லை எடுத்து வந்த மனைவி.. அடுத்த நொடியே வாயடைத்து போன வடமதுரை.. திடுக் திண்டுக்கல் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ்












Click it and Unblock the Notifications