தாறுமாறாக போன.. ரேபிடோ பைக் டாக்சி டிரைவர்.. பிறந்த நாளிலேயே இறந்த பெண்.. சென்னையில் ஷாக்!
சென்னை: சென்னையில் ரேபிடோ பைக் டாக்ஸியில் பயணித்த பெண் ஒருவர் மரணம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பணியாற்றிய பெண் ஊழியர் சாலை விபத்தில் பலியானது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை, பெங்களூர் உள்ளிட்ட நகரங்களில் பைக் டாக்சி பிரபலமாக உள்ளது. கார், ஆட்டோவில் அதிக கட்டணம் வசூலிப்பதால் பைக் டாக்சியை மக்கள் அதிகம் விரும்புகிறார்கள்.

ஆனால் பெங்களூர், சென்னையில் பைக் டாக்சி இன்னும் சட்டப்படி அனுமதிக்கப்படவில்லை . அதாவது பைக்கை கமர்ஷியல் விஷயங்களுக்கு பயன்படுத்த முடியாது.
இதனால் பைக் டாக்சி என்பதே சட்ட விதிமீறல்தான். பைக் டாக்சிக்கள் இந்த விதி முறையையும் மீறித்தான் செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது. பல்வேறு மாநில அரசுகளும் இந்த பைக் டாக்சிகள் மக்களால் அதிகம் பயன்படுத்தப்படுவதால் பெரிதாக கண்டுகொள்ளப்படுவது இல்லை.
இந்த பைக் டாக்சி பெண்களால் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு வேகமாக செல்ல முடியும். இதற்கு பணம் மிக குறைவு,. அதேபோல் டிராபிக்கில் எளிதாக செல்ல முடியும்.
பெங்களூர் போன்ற டிராபிக் அதிகம் உள்ள, கேப்பிற்கு அதிகம் காசு கேட்கும் நகரங்களில் இந்த பைக் டாக்சிகள் அதிக உதவுகின்றன. இந்த நிலையில்தான் சென்னையில் ரேபிடோ பைக் டாக்ஸியில் பயணித்த பெண் ஒருவர் மரணம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பணியாற்றிய பெண் ஊழியர் சாலை விபத்தில் பலியானது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை வியாசர்பாடி கல்யாணபுரம் இரண்டாவது தெருவில் வசித்து வந்தார் சேவிகா. 34 வயதாகும் இவர் அண்ணா சாலையில் உள்ள தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பணியாற்றி வந்தார்.
இன்று சேவிகாவிற்கு பிறந்தநாள். இதையடுத்து பிறந்தநாளை கொண்டாட வேண்டும் என்று சேவிகா தனது தோழிகள் வீட்டிற்கு நேற்று இரவு சென்றுள்ளார். வியாசர்பாடியில் இருந்து தி நகருக்கு சேவிகா சென்றுள்ளார்.
இரவு முழுக்க பிறந்தநாள் கொண்டாட்டம் முடிந்த பின் அதிகாலை மீண்டும் வீட்டிற்கு திரும்ப சேவிகா பைக் டாக்சி புக் செய்துள்ளார். ரேபிடோ பைக் டாக்சியை அவர் புக் செய்ததாக கூறப்படுகிறது.
அவரை ஆனந்தன் என்பவர் பிக் அப் செய்துள்ளார். இந்த நிலையில் ஹெல்மெட் அணியாமல் சேவிகா பின் பக்கத்தில் அமர்ந்து இருந்தார். அதிகாலையிலேயே சேவிகா வீடு திரும்ப பைக் டாக்சி புக் செய்த நிலையில் சாலையில் டிராபிக் இல்லாத காரணத்தால் ஆனந்தன் வேகமாக பைக்கில் சென்றுள்ளார்.
அப்போது அண்ணா சாலை காமராஜர் அரங்கம் அருகே டிப்பர் லாரி மோதி சேவிகா - ஆனந்தன் இருவரும் தூக்கி வீசப்பட்டு உள்ளனர். இதில் ஆனந்தன் சிறு காயங்களுடன் தப்பித்தார். கை, கால்களில் சிராய்ப்புடன் தப்பித்தார்.
ஆனால் சேவிகா அங்கேயே தலையில் அடிபட்டு உயிருக்கு போராடி இருக்கிறார். அங்கே இருந்த மக்கள் அவரை உடனடியாக அழைத்துக்கொண்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். ஆனால் செல்லும் வழியிலேயே சேவிகா மரணம் அடைந்துவிட்டார்.
பைட் டாக்ஸி டிரைவரான ஆனந்தன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவர்கள் மீது மோதிய டிப்பர் லாரி சம்பவ இடத்தில் நிற்காமல் வேகமாக சென்றுள்ளது. சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
பைக் டாக்ஸி சேவையை தடை செய்ய வேண்டும் என்று ஆட்டோ மற்றும் டாக்சி ஓட்டுநர்கள் வலியுறுத்திக் கொண்டு இருக்கும் நிலையில்தான் இந்த சம்பவம் அங்கே நடந்து உள்ளது.
-
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
Rooster பொஷிஷனில் மனைவிக்கு ‘டார்ச்சர்'.. வீட்டுக்குள் சிறை வைத்து கணவர் செய்த வெறிச்செயல் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications