சென்னை மதுரவாயலில் சின்ன டிரக்கில், 62 லட்சம் சம்பாதித்த பிரபல நிறுவனத்தின் மேனேஜர்.. பெரிய ட்விஸ்ட்
சென்னை: தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்த கோவில்ராஜ் சென்னை மதுரவாயலில் தனியார் நிறுவன ஷோரூமில் மேலாளராக பணியாற்றி வந்துள்ளார். இவர் ஒரே நாளில் ரூ.62 லட்சம் மதிப்புள்ள செல்போன்களை திருடி விற்றுள்ளார். அவரை போலீசார் கைது செய்தனர். ஊரில் ஏராளமான கடனை வாங்கி வைத்திருந்த மேலாளர் கடனை அடைக்க திருடியது விசாரணையில் தெரியவந்தது. என்ன நடந்தது? எப்படி சிக்கினார் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
சிலர் வேகமாக பணக்காரன் ஆக விரும்புகிறார்கள். சிலர் எந்த வேலையும் செய்யாமல் ஆடம்பரமாக வாழ்க்கிறார்கள்.. அப்படி சொகுசாக வாழ்வதற்காக கடன் வாங்குகிறார்கள். அதேபோல் சிலர் தனிப்பட்ட பிரச்சனைக்காகவும் அதிக கடன் வாங்குகிறார்கள். அப்படி வாங்கிய கடனை உடனே அடைக்க வேண்டும் நினைக்கிறார்கள். அந்த கடனை அடைக்க குறுக்கு வழியில் யோசிக்கிறார்கள். அப்படியோசித்த மேனேஜர் குறுகிய காலத்திலேயே 62 லட்சம் சம்பாதித்து கடனை அடைக்க பார்த்துள்ளார். அவருக்கு நடந்தது பற்றி பார்ப்போம்.

சென்னை போரூர் சாலை
சென்னை போரூர், ஆற்காடு சாலையில் உள்ள பிரபல தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான எலக்ட்ரானிக் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் ஷோரூமின் பொது மேலாளரான தேவநாதன் என்பவர் பணியாற்றி வருகிறார். அவர் தங்கள் நிறுவனத்தில் நடந்த மோசடி தொடர்பாக மதுரவாயல் போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
மோசடி செய்த மேனேஜர்
அந்த மனுவில் அவர் கூறுகையில், "எங்களது ஷோரூமில் மேலாளராக 31 வயதாகும் கோவில்ராஜ் என்பவர் பணிபுரிந்து வந்தார். இவர் கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த விலை உயர்ந்த ஐபோன்களை திருடி விற்பனை செய்து வந்திருக்கிறார். கடந்த மார்ச் மாதம் கணக்குகளை சரி பார்த்தபோது 85 விலை உயர்ந்த செல்போன்களை திருடி விற்பனை செய்தது தெரியவந்தது.தலைமறைவாக உள்ள அவரை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
தனிப்படை கைது செய்தது
அதன்பேரில் மதுரவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மதுரவாயல் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் அருள்ராஜ் தலைமையில் தனிப்படைகள் அமைத்து தலைமறைவாக இருந்த கோவில்ராஜை அண்மையில் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்த கோவில்ராஜ, பட்டப்படிப்பு முடித்துள்ளார். படித்த உடனேயே சொந்தமாக தொழில் செய்து வந்திருக்கிறார். அதில் பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டதால் நிறுவனத்தை மூடினார். பின்னர் சென்னையில் உள்ள பிரபல எலக்ட்ரானிக் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் ஷோரூம் நிறுவனத்தின் ஷோரூமில் மேலாளராக கோவில்ராஜ் பணியில் சேர்ந்துள்ளார்.
தொழிலில் நஷ்டம்
குறிப்பிட்ட எலக்ட்ரானிக் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் நிறுவனத்தின் 3 கிளைகளில் மேலாளராக பணிபுரிந்து வந்துள்ளார். சொந்த தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் கடன் சுமை அதிகமானதால் அந்த கடனை அடைப்பதற்காக கோவில்ராஜ், நிறுவனத்துக்கு தெரியாமல் ஷோரூமில் இருந்து விற்பனைக்கு வைக்கப்பட்டு இருக்கும் ஐபோன்களை அவ்வப்போது திருடி விற்று வந்துள்ளார்.ஆனால் நிறுவனத்திற்கு இது தெரியாது. கணக்கு விவரங்கள் தவறாக இருந்துள்ளது.
62 லட்சம் சம்பாத்தியம் எப்படி
கணக்க விவரங்களை ஆடிட் செய்த போது தான் நிறுவனத்திற்கு நடந்த தவறுகள் தெரியவந்துள்ளது. மேலாளர் கோவில்ராஜ் இதுவரை சுமார் ரூ.62 லட்சம் மதிப்புள்ள 85 செல்போன்களை திருடி விற்றதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கைதான கோவில்ராஜிடம் போலீசார் மேலும் விசாரித்து வருகின்றனர். மேலும் இவருக்கு உடந்தையாக இருந்த மற்றொருவரை போலீசார் தேடி வருகின்றனர். இவர் திருடி விற்பனை செய்த செல்போன்களை பறிமுதல் செய்யும் நடவடிக்கையிலும் போலீசார் ஈடுபட்டிருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications