கள்ளக்காதலை கண்டித்ததால் ஆத்திரம்.. சென்னையில் கணவனை உயிருடன் எரித்துக் கொன்ற மனைவி
சென்னை: சென்னை மடிப்பாக்கம் பெரியார் நகரில் கள்ளக்காதலை கண்டித்ததால் ஆத்திரம் அடைந்த மனைவி, கணவன் மீது பெட்ரோல் ஊற்றி உயிருடன் எரித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தூங்கி கொண்டிருந்த கணவன் மீது நள்ளிரவில் பெட்ரோல் ஊற்றிய மனைவி, தீக்குச்சியை அவர் மீது கொளுத்திப்போட்டுள்ளார். அப்படியே அவர் அலறிக்கொண்டிருக்கையில், வெளிக்கதவை பூட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டார்
சென்னை மடிப்பாக்கம் பெரியார் நகர் கைவேலி பகுதியை சேர்ந்தவர் பாண்டி (42). இஸ்திரி போடும் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி பார்வதி (34). அதே பகுதியை சேர்ந்த ஒருவருடன் பார்வதிக்கு திருமணத்தை மீறிய உறவு இருந்து வந்துள்ளது.

உறவு நீடிப்பு
இதுபற்றி அறிந்த பாண்டி, தனது மனைவி பார்வதியை திட்டியதுடன் கடுமையாக கண்டித்துள்ளார். எனினும் பார்வதி தனது கள்ளக்காதலனை கைவிட மனது இல்லை. தொடர்ந்து உறவு நீடித்து வந்துள்ளது. இதனால் பார்வதிக்கும், பாண்டிக்கும் அடிக்கடி சண்டை வந்துள்ளது.

தீ வைத்து எரிப்பு
ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த மனைவி கணவனை கொன்றுவிட்டு கள்ளக்காதலனுடன் சேர முடிவு செய்தார். பார்வதி நேற்று முன்தினம் மாலை கணவன் வீட்டில் தூங்கியபோது, அவர் மீது பெட்ரோலை ஊற்றி தீவைத்து விட்டு அறையின் வெளி கதவையும் பூட்டியுள்ளார்.

மருத்துவமனையில் அனுமதி
உடல் முழுவதும் தீப்பற்றிய பாண்டி அலறி துடித்து கருகினார். சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், தீயை அணைத்து ஆபத்தான நிலையில் இருந்த பாண்டியை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

கணவன் வாக்குமூலம்
உயிருக்கு போராடிய அவரிடம் எழும்பூர் நீதிமன்ற நடுவர் வாக்குமூலத்தை பதிவு செய்தார். அதில், தனது மனைவி பார்வதி தன் மீது பெட்ரோல் ஊற்றி எரித்ததாக கூறியிருக்கிறார் இந்நிலையில் பாண்டி நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இதனையடுத்து, பார்வதி மீது கொலை வழக்கு பதிந்து போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
-
வேம்புலி செய்த வேலை.. தவெக நிர்வாகிகளுக்கு எப்போது ஒழுக்கத்தை சொல்லித் தருவார் முதல்வர் விஜய்? -
அரசு பேருந்து ஓட்டுநரை பட்டா கத்தியால் வெட்டிவிட்டு எஸ்கேப் ஆன தவெக நிர்வாகி கைது -
சட்டம் ஒழுங்கில் பெரிய ஓட்டை.. நாமக்கல்லில் தலைதூக்கிய துப்பாக்கி கலாச்சாரம்! 20 சவரன் நகை அபேஸ்! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்?












Click it and Unblock the Notifications