ரன்வேயில் ஓடத் தொடங்கிய போது அதிர்ச்சி.. சென்னை - அபுதாபி விமானம் திடீர் ரத்து.. அலறிய பயணிகள்!
சென்னை: சென்னையில் இருந்து அபுதாபி செல்லும் விமானம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. விமானம் பறக்கத் தொடங்குவதற்கு முன் இயந்திரக் கோளாறு கண்டறியப்பட்டதால் 170க்கும் மேற்பட்ட பயணிகள் உயிர் தப்பியுள்ளனர்.
சென்னையில் இருந்து அபுதாபி கிளம்ப இருந்த ஏர் அரேபியா ஏர்லைன்ஸ் விமானம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. அபுதாபி செல்லும் ஏர் அரேபியா விமானத்தில் 170க்கும் மேற்பட்ட பயணிகள் அமர்ந்திருந்தனர். விமானம், பறக்கத் தயாராக ஓடுபாதையில் பயணிக்கத் தொடங்கியது.

அப்போது, விமானத்தின் இயந்திரத்தில் கோளாறு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, உடனடியாக, விமானம் ஓடுபாதையிலேயே நிறுத்தப்பட்டது. உடனடியாக, பயணிகள் விமானத்தில் இருந்து இறக்கப்பட்டனர். தொடர்ந்து, விமானத்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறை சரிசெய்யும் பணியில் விமான ஊழியர்கள் ஈடுபடத் தொடங்கினர்.
விமான இயந்திரக் கோளாறை சரி செய்யும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளதால்,
சென்னையில் இருந்து அபுதாபி செல்லவிருந்த ஏர் அரேபியா ஏர்லைன்ஸ் விமானம் ரத்து செய்யப்பட்டது. விமானம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டதும், விமான நிறுவன அதிகாரிகளுடன் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, பயணிகள் சென்னையில் உள்ள பல்வேறு உயர்தர ஓட்டல்களில் தங்கவைக்கப்படுவார்கள் என உறுதி அளிக்கப்பட்டது. விமானம் ரத்து செய்யப்பட்ட நிலையில் 164 பயணிகள் ஓட்டல்களில் தங்கவைக்கப் படுகின்றனர். இயந்திரக் கோளாறு சரி செய்யப்பட்டு, நாளை அதிகாலையில் சென்னையில் இருப்து அபுதாபி விமானம் கிளம்பும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விமானம் பறக்கத் தொடங்குவதற்கு முன் இயந்திரக் கோளாறு கண்டறியப்பட்டதன் காரணமாக, உடனடியாக விமானம் நிறுத்தப்பட்டதால், 170க்கும் மேற்பட்ட பயணிகளின் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. இந்த நிகழ்வு, சென்னை விமான நிலைய வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications