ஜெகஜால ஜெயமாலா எங்கே.. 3 பேரை சுட்டு பொசுக்கிய பெண்.. வலைவீசி தேடியும் இன்னும் சிக்காத மர்மம்
3 பேரை சுட்டுக் கொன்ற கொலையாளிகளிடம் விசாரணை நடத்தப்படுகிறது
சென்னை: "நோயாளி புருஷனை ஏன் எனக்கு கட்டி வெச்சீங்க" என்று கேட்டு, மாமனாரின் காதிலேயே சுட்டு கொன்ற ஜெயமாலாவை காணோம்.. அதனால் அவர் வேறு மாநிலத்துக்கு தப்பி சென்றிருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்துள்ளது.
சவுக்கார்பேட்டையில் நடந்த கொலையின் அதிர்ச்சி இன்னும் யாருக்குமே விலகவில்லை.. சொத்துக்காக, மாமனார், மாமியார், கணவன் என 3 பேரையும் நிறுத்தி நிதானமாக சுட்டு தள்ளினார் மருமகள் ஜெயமாலா.. மாமனாரை மட்டும் காதிலேயே சுட்டுள்ளார்.. மற்றவர்களை நெற்றிப்பொட்டில் சுட்டு கொன்றார்.
இதையடுத்து, புனேவுக்கு தப்பி சென்ற ஜெயமாலா & கோவை பிடிக்க நம் போலீசாரும் பின்னாடியே துரத்தி சென்றனர்.. அதில், ஜெயமாலா அண்ணன் கைலாஷ், அவரது நண்பர்கள் ரவீந்தரநாத், விஜய் உத்தம் கமல் ஆகிய 3 பேரையும் கைது செய்து, நீதிமன்ற காவலில் வைத்துள்ளனர்.

மகாராஷ்டிரா
ஆனால், இது எல்லாவற்றிற்கும் காரணமான ஜெயமாலாவை காணோம்.. கைதான அவரது அண்ணன், போலீசாரிடம் சொல்லும்போது, ஜெயமாலா புனேவில்தான் இருப்பதாக சொன்னார்.. அதனால்தான் மகாராஷ்டிரா மாநிலத்தில் முகாமிட்டு அவரை இந்த 4 நாட்களாக தேடி வந்தனர்.. ஆனால் அவரை எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

உதவி
அதனால், ஜெயமாலா வேறு மாநிலத்துக்கு தப்பிச் சென்றிருக்கலாம் என்ற சந்தேகம் தனிப்படை போலீஸாருக்கு எழுந்துள்ளது... எனவே ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, ராஜஸ்தான் உள்ளிட்ட பிற மாநில போலீஸாரின் உதவியையும் சென்னை போலீஸார் நாடியுள்ளனர்... விரைவில் ஜெயமாலாவையும், கொலைக்கு உதவிய மற்ற கூட்டாளிகளையும் விரைவில் கைது செய்வோம் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கி
இதற்கிடையில், கொலைக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி எந்தமாநிலத்தில் இருந்து, யாரிடமிருந்து வாங்கி வரப்பட்டது என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது... மேலும் கைதான 3 பேருக்கு 10 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க சென்னை ஹைகோர்ட் அனுமதி வழங்கியுள்ளது... அவர்களை போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரிக்கவுள்ளதாக தெரிய வந்துள்ளது.

விசாரணை
கைது செய்யப்பட்டவர்களுக்கும் புனேவில் பதுங்கியுள்ளவர்களுக்கும் என்ன தொடர்பு, அவர்கள் எங்கே பதுங்கி உள்ளனர். கொலை செய்வதற்கு என்னென்ன விதமான திட்டங்களை திட்டினர், என்பது பற்றியெல்லாம் விசாரிக்கவே இப்போது இவர்களை காவலில் எடுத்துள்ளதால், விரைவில் அனைத்து தகவல்களும் வெளிவரும் என தெரிகிறது.
-
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications