42 வயசுல விபச்சாரம்.. வாடகைக்கு வீடு எடுத்து அட்டகாசம்.. சென்னை ஆதம்பாக்கம் வீட்டில் நுழைந்த போலீஸ்
சென்னை: தலைநகர் சென்னையில் முறைகேடாக செயல்பட்டு வரும் ஸ்பா சென்டர்கள், போலியாக செயல்பட்டு வரும் மசாஜ் சென்டர், சலூன்களில், பாலியல் தொழில் நடத்தப்படுவதாக மாநகர போலீசாருக்கு ரகசிய தகவல்கள் அடிக்கடி வருகின்றன. அவ்வாறு வரும் தகவல்களின் அடிப்படையில் போலீசார் சோதனைகளை மேற்கொண்டு, சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.. அந்தவகையில், சென்னை ஆதம்பாக்கத்தில் வாடகைக்கு வீடு எடுத்து விபச்சாரம் நடைபெற்றுள்ளது. இதுகுறித்து சென்னை காவல்துறை செய்திக்குறிப்பு ஒன்றையும் வெளியிட்டிருக்கிறது.
தமிழகத்தில் பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன.. ஓட்டல்கள், தங்கும் விடுதிகள் மட்டுமல்லாமல், வாடகைக்கு குடியிருப்பது போல வீட்டில் தங்கியிருந்து சிலர் விபச்சாரம் மேற்கொண்டு வருகிறார்கள்.

குடியிருப்புகள்
அப்பார்ட்மென்ட்களில் இது இன்னும் அதிகமாகவே நடக்கிறது. இதனால் குடியிருப்பு பகுதிகளிலுள்ள பொதுமக்களே, போலீசாருக்கு நேரடியாக புகார்களை அனுப்பிவிடுகிறார்கள்.. இந்த புகார்களை விசாரணை செய்யும் போலீசார், தயவுதாட்சண்யமின்றி பெண்களை வைத்து விபச்சாரம் செய்யும் நபர்களை கைது செய்து, பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படும் பெண்களை மீட்டும் வருகிறது.
அதுமட்டுமல்லாமல், முறையான அனுமதி இல்லாமல், அல்லது லைசென்ஸ்களை புதுப்பிக்காமல், செயல்பட்டு வரும் ஸ்பா சலூன்களையும் இழுத்து பூட்டி சீல் வைத்து வருகிறது. இதுபோன்ற இடங்களில் பிழைப்புக்காக சென்று சிக்கிக் கொள்ளும் அப்பாவி பெண்களை, பாதுகாப்பாக மீட்டு அரசு காப்பகங்களிலும் போலீசார் ஒப்படைத்து வருகின்றனர்..
ஆதம்பாக்கம் வாடகை வீடு
இந்நிலையில், ஆதம்பாக்கம் பகுதியில் வீட்டை வாடகைக்கு எடுத்து பாலியல் தொழில் நடத்திய நபர் கைது செய்யப்பட்டார், ஒரு பெண் மீட்கப்பட்டார். இது குறித்து காவல்துறை செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது.
அதில், "சென்னை பெருநகர காவல், விபச்சார தடுப்புப் பிரிவு-2 (Immoral Traffic Prevention Unit-2) காவல் ஆய்வாளர் தலைமையிலான தனிப்படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், தனிப்படையினர் நேற்று மதியம், ஆதம்பாக்கம், V.V.காலனி தெருவில் உள்ள ஒரு வீட்டை ரகசியமாக கண்காணித்தபோது, அங்கு பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தியது உறுதி செய்யப்பட்டது.
வீட்டில் சோதனைகள்
அதன்பேரில், பெண் காவலர்கள் உள்ளிட்ட தனிப்படையினர் மேற்படி வீட்டில் சோதனைகள் மேற்கொண்டு, அங்கு பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்திய கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த சம்சுதீன் என்பவரை கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்து 1 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், மேற்படி இடத்தில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதற்கு தங்க வைத்திருந்த ஒரு பெண் மீட்கப்பட்டார்.
விசாரணையில் கைது செய்யப்பட்ட சம்சுதீன் மேற்படி வீட்டை வாடகைக்கு எடுத்து பாலியல் தொழில் நடத்தியதும், இவர் மீது ஏற்கனவே பாலியல் தொழில் நடத்திய குற்றத்திற்காக 2 வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது.
அதிரடி கைது
கைது செய்யப்பட்ட சம்சுதீன் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மீட்கப்பட்ட பெண் அரசு மகளிர் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்" எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்படித்தான் சமீபத்தில் வளசரவாக்கம், வெங்கட சுப்பிரமணி நகர், 12 வது குறுக்கு தெருவில் உள்ள ஒரு வீட்டை கண்காணித்தபோது, அங்கு பெண்ணை வைத்து பாலியல் தொழில் நடத்தியது உறுதி செய்யப்பட்டது. பெண்ணை வைத்து பாலியல் தொழில் நடத்திய ஆவடி சுரேஷின் மனைவி விஜயலட்சுமி (42) என்பவரை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
