சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் டாக்டர் வி.சாந்தா (93) காலமானார்
சென்னை: சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் டாக்டர் வி. சாந்தா (வயது 93) காலமானார்.

சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவராக சுமார் 68 ஆண்டுகாலம் பணியாற்றியவர் டாக்டர் வி. சாந்தா. புற்றுநோயால் பாதிக்கப்பட்டோருக்கு இலவசமாகவும், குறைந்த செலவிலும் அடையாறு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

டாக்டர் வி. சாந்தாவின் மருத்துவ சேவையை பாராட்டி அவருக்கு மத்திய அரசின் பத்ம விபூஷண் உள்ளிட்ட பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. மூச்சுதிணறல் காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் டாக்டர் சாந்தா அனுமதிக்கப்பட்டார்.
மே.வங்கம்:மமதா தளபதி பிகே வியூகம் தவிடுபொடி? அன்று சிங்கிள்..இன்று டிரிபிள் டிஜிட் இடங்களில் பாஜக?
அப்பல்லோவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். மகத்தான சேவைபுரிந்த டாக்டர் வி. சாந்தாவின் உடல் அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களை மீட்டெடுக்கும் பணியை தவமாய் கருதி செயல்பட்ட டாக்டர் வி. சாந்தாவின் மறைவுக்கு பல்வேறு தலைவர்கள், அமைப்புகளின் நிர்வாகிகள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.