இதுதான் சென்னை மெட்ரோ.. நம்ம சிட்டியின் பெருமிதம்.. விமான சாகச தினத்தில் ஸ்மார்ட்டாக எடுத்த 3 முடிவு
சென்னை: சென்னையில் இன்று விமான சாகச நிகழ்ச்சி நடந்தது. இந்திய விமானப் படை 92 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், அதைக் கொண்டாடும் வகையில் சென்னை மெரினாவில் விமான சாகச நிகழ்ச்சிக்கு இன்று ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த நாளில்.. சென்னை மெட்ரோ நிர்வாகம் இந்த நிகழ்வை மிக சிறப்பாக கையாண்டு உள்ளது.
பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில்.. இன்று நடந்த நிகழ்வில் 12-15 லட்சம் பேர் கலந்து கொண்டனர். இன்று காலை 11 மணிக்கு இந்த விமான சாகச நிகழ்ச்சிகள் தொடங்கியது. இந்த நிலையில், மதியம் 1 மணி வரை இது நடந்தது. சென்னை மட்டுமன்றி தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் விழாவை காண மக்கள் கூட்டம் கூட்டமாக வந்திருந்தனர்.

எதிர்பார்த்தது கிட்டத்தட்ட 10 லட்சம் பேர் என்றால் இன்று கிட்டத்தட்ட 15 லட்சத்திற்கும் மேல் வந்தனர். இந்த விமான சாகச நிகழ்ச்சிகளை காண தமிழக ஆளுநர் ரவி, முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் வந்து இருந்தனர். பொதுமக்களும் இதைக் காண மெரினாவில் குவிந்தனர். 15க்கும் மேற்பட்ட பார்க்கிங் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன.
கூட்டத்தை எதிர்கொள்ள மெட்ரோ போட்ட திட்டம்: இன்று கூட்டத்தை எதிர்கொள்ள சென்னை மெட்ரோ சிறப்பாக திட்டங்களை வகுத்து இருந்தது.
ஸ்மார்ட் முடிவு 1: இன்று மக்கள் கூட்டத்தை எதிர்பார்த்து சரியாக 3 நிமிடத்திற்கு ஒரு முறை மெட்ரோ ரயில் இயக்கப்பட்டது. வண்ணாரப்பேட்டை மெட்ரோ & ஏஜி டிஎம்எஸ் மெட்ரோ இடையே மெட்ரோ ரயில்கள் 3.5 நிமிட இடைவெளியில் இயக்கப்பட்டது.. மேலும் காரிடார்-1 பிரிவில் (விம்கோ நகர் டிப்போ மெட்ரோ- விமான நிலைய மெட்ரோ) 7 நிமிட அலைவரிசை பின்பற்றப்படும். மக்கள் பலரும் சென்னையின் பிற பகுதிகளில் இருந்து அரசினர் தோட்டம் நோக்கியே சென்றனர். இதன் காரணமாக அந்த திசையை நோக்கி சென்னையின் பல பகுதிகளில் இருந்து 3 நிமிட இடைவெளியில் மெட்ரோ இயக்கப்பட்டது.
வழக்கம் போல், பசுமை வழித்தடத்தில் (புரட்சி தலைவர் டாக்டர். எம்.ஜி. ராமச்சந்திரன் மத்திய மெட்ரோ - செயின்ட் தாமஸ் மவுண்ட்) 7 நிமிட அதிர்வெண்ணில் ரயில்கள் இயக்கப்படுகின்றன.
மேலே குறிப்பிட்டுள்ள சேவை நேர மாற்றம், மக்கள் கூட்டம் மெட்ரோ ரயில் நிலையங்களில் (06-10-2024) வழங்குவதற்குப் பொருந்தும்.
ஸ்மார்ட் முடிவு 2: இது போக மெட்ரோவில் உள்ளே செல்ல டிக்கெட் யாரிடமும் வாங்கப்படவில்லை. மக்கள் கூட்டத்தை சமாளிக்க .. மக்கள் வரிசையில் நிற்பதை சமாளிக்க டிக்கெட்டை எடுக்க வேண்டாம். ரயிலில் ஏறிய பின் இறங்கும் முன்.. டிக்கெட்டை எடுக்க மக்கள் அனுமதிக்கப்பட்டனர். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் இறங்கிய பின்பும் கூட.. மக்கள் க்யூ ஆர் கோடை ஸ்கேன் செய்ய வெறுமனே பாதுகாவலர்களிடம் காட்டினால் போதும் என்று கூறி மக்களின் கூட்டம் வேகமாக வெளியேற வழி செய்து கொடுக்கப்பட்டது. மக்கள் பலரும் இதனால் மெட்ரோவின் செயலை பாராட்டி வருகின்றனர்.
ஸ்மார்ட் முடிவு 3: மெட்ரோ முழுக்க இன்று பாதுகாப்பு அதிகளவில் கொடுக்கப்பட்டதாக மக்கள் தெரிவித்து உள்ளனர். முக்கியமாக ஆங்காங்கே மயங்கி விழுந்த நிலையில் அவர்களை வீல் சேரில் மெட்ரோ பாதுகாவலர்கள் அழைத்து சென்றனர். மக்கள் பலரும் இதனால் மெட்ரோவின் செயலை பாராட்டி வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications