இந்தியாவிலேயே ஒரே ஏர்போர்ட்! நேரம் தவறாமையில் சென்னைதான் பெஸ்ட்! உலக அளவில் என்ன ரேங்க் தெரியுமா?
சென்னை: உலகளவில் நேரம் தவறாமை மற்றும் இதர பிறகு வசதிகளை கொண்ட விமான நிலையங்களில் சென்னை விமான நிலையம் 8 வது இடத்தை பிடித்து இருக்கிறது.
விமான போக்குவரத்து, விமானத்துறை, விமான நிலையங்கள், விமான நிறுவனங்கள், அதன் வருவாய் தொடர்பான விபரங்களை வழங்கி வருகிறது சிரியம் என்ற ஆய்வு நிறுவனம். இந்த நிறுவனம் உலகளவில் இயங்கி வரும் பெரிய விமான நிலையங்களின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டு கடந்த ஜனவரி மாதம் முடிவுகளை வெளியிட்டது.

சென்னை விமான நிலையத்துக்கு 8 வது இடம்
இந்த பட்டியலில் அமெரிக்காவின் மியாமி விமான நிலையம் முதலிடத்தை பிடித்துள்ளது. அமெரிக்காவின் ஃபுகுவோகா விமான நிலையம் 2 வது இடத்தையும் ஜப்பானின் ஹனேஜா விமான நிலையம் 3 வது இடத்தையும் பிடித்துள்ளன. இதில் சென்னை விமான நிலையம் 8 வது இடத்தை பிடித்து இருக்கிறது.

இந்தியாவிலேயே சென்னைதான் பெஸ்ட்
70 சர்வதேச விமான பாதைகளை ஆய்வு செய்த சிரியம் அதில் சென்னை விமான நிலையத்தில் 89.32% சரியான நேரத்தில் விமானங்க 70 சர்வதேச விமான பாதைகளை ஆய்வு செய்த சிரியம் அதில் சென்னை விமான நிலையத்தில் 89.32% சரியான நேரத்தில் விமானங்கள் புறப்படுவதாக தெரிவித்து உள்ளது. சிரியம் வெளியிட்டு இருக்கும் இந்த பட்டியலில் இந்தியாவிலேயே சென்னை விமான நிலையம் மட்டுமே இடம்பிடித்து உள்ளது. இந்த ஆய்வு முடிவுகள் வெளியானவுடன் சென்னை விமான நிலைய அதிகாரிகள் கேக் வெட்டி கொண்டாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ள் புறப்படுவதாக தெரிவித்து உள்ளது. சிரியம் வெளியிட்டு இருக்கும் இந்த பட்டியலில் இந்தியாவிலேயே சென்னை விமான நிலையம் மட்டுமே இடம்பிடித்து உள்ளது. இந்த ஆய்வு முடிவுகள் வெளியானவுடன் சென்னை விமான நிலைய அதிகாரிகள் கேக் வெட்டி கொண்டாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

விமான நிலைய இயக்க முறையே காரணம்
இதுகுறித்து சென்னை விமான நிலைய இயக்குநர் ஷரத் குமார் தெரிவிக்கையில், "எங்கள் விமான நிலைய இயக்க முறையே இந்த நற்பெயருக்கு காரணம். பங்குதாரரின் ஈடுபாடு, கூட்டு முடிவு, வாடிக்கையாளர் நலன் மற்றும் தொழில்துறையினரின் நம்பிக்கையை பெற்றது எங்கள் வெற்றிக்கு காரணமாக இருக்கிறது. விமான நிலையத்தின் தரத்தையும், வசதிகளையும் மேம்படுத்த தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்.

மேம்படுத்தப்படும் சென்னை ஏர்போர்ட்
பயணிகளுக்கு உதவும் வகையில் விமான நிலைய இயக்க முறையை மேம்படுத்தவும் முயற்சித்து வருகிறோம். கார் பார்க்கிங் வசதியை வரும் மாதங்களில் மேம்படுத்தவும், ஒருங்கிணைந்த டி2 முனையத்தை செயல்படுத்தவும் உள்ளோம். ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை விமான நிலைய இயக்கக முறையை திட்டமிடும் வகையில் புதிய வசதிகள் கொண்டு வரப்பட உள்ளன." என்றார்.

கொரோனா பரவலில் அரும்பணியாற்றிய சென்னை ஏர்போர்ட்
கடந்த 2020 ஆம் ஆண்டு பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் காரணமாக பன்னாட்டு விமான சேவைகள் துண்டிக்கப்பட்டன. சென்னை விமான நிலைய பணிகளும் முடங்கின. அதே நேரம் வெளிநாட்டில் சிக்கித் தவித்த இந்திய தொழிலாளர்களை மீட்பதற்காக சென்ற சிறப்பு விமானங்களும் நேரம் தவறாமல் சென்னை விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு மக்களின் நற்பெயரை பெற்றன.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications