சென்னை விமான நிலையம் திருசூலம் ஜிஎஸ்டி சாலை சுரங்கப்பாதையா இது.. மழையால் இப்படி ஆகிடுச்சே
சென்னை: சென்னை விமான நிலையம் திருசூலம் ஜிஎஸ்டி சாலை சுரங்கப்பாதை என்பது, சென்னை விமான நிலையம் மற்றும் மெட்ரோ நிலையம் மற்றும் ரயில் நிலையத்திற்கான இணைப்பாக உள்ளது. இந்த பாதையில் வெள்ளநீர் சுழ்ந்துள்ளது. இந்த தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
சென்னையில் நேற்று கனமழை வெளுத்து வாங்கிய நிலையில், சென்னையின் புறநகர் பகுதிகளிலும் மழை அதிக அளவு கொட்டியது. பூந்தமல்லி, செம்பரம்பாக்கம், தாம்பரம், வண்டலூர், ஊரப்பாக்கம், புழல், செங்குன்றம், மாதவரம் உள்ளிட்ட இடங்களில் அதிக அளவு மழை பெய்தது. இதனால் செம்பம்பாக்கம், புழல் போன்ற ஏரிகளுக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அடையாறு மற்றும் கூவம் ஆற்றில் தண்ணீர் அதிக அளவு திறந்துவிடப்பட்டுள்ளது.

வழக்கமாக பருவமழை தீவிரமாக இருந்தாலே சென்னை தாங்காது. ஏனெனில் சென்னை மேடு பள்ளங்களுடன் கூடிய ஊர் அல்ல. மிக சமதளமான பகுதியாகும். பெரிதாக எங்குமே ஏற்ற இறக்கத்துடன் இல்லை. இதனால் தான் சென்னை மழைக்கு தாங்குவது இல்லை. இன்னொரு காரணமும் இருக்கிறது. சென்னையில் அதீதமான கட்டிடங்கள், நீர்வழித்தடங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள் மற்றும் கட்டிங்களும் தான் சென்னை இப்போது சந்தித்துள்ள நிலைக்கு காரணம் ஆகும். சென்னையில் நேற்று மழை பெய்த நிலையில் இன்றும் மழைக்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாகவே வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
அதிலும் வங்கக்கடலில் நிலவும் தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாக மாற இருப்பதால், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வருகிற 2-ந்தேதி (சனிக்கிழமை) மற்றும் 3-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மிக கனமழை வரை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, மேலும் 4 நாட்களுக்கு மழை தொடர வாய்ப்பு இருப்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடக்கிவிட சென்னை மாநகராட்சிக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
@Chief_Secy_TN @tnsdma @rnadh @ChennaiRains @Tnsdma_cpt
— Dayanand Krishnan (@dayatiger197312) November 30, 2023
Chennai Airport Tirusulam GST ROAD SUBWAY flooded connection to Chennai Airport and Metro station and Railway Station.
Kindly take action sir immediately pic.twitter.com/4aA223riPq
அதிகாரிகள் அமைச்சர்கள் என அனைவரையும் சென்னைக்கு வர சொல்லி இருக்கிறார். சென்னையில் இந்த முறை வழக்கத்தைவிட அதிகமான மழை பெய்யும் போது இயல்பை விட பாதிப்பும் அதிகமாக இருக்கும் என்தால் அடுத்த 4 நாட்களுக்கு கவனமாக மக்கள் இருக்க வேண்டும் என்று தனியார் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்து வருகிறார்கள்.
சென்னையில் நேற்று பெய்த மழையால் பல்வேறு சுரங்கப்பாதைகளில் தண்ணீர் தேங்க தொடங்கியது. அதேநேரம் அரசின் தீவிர நடவடிக்கை காரணமாக சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 20 சுரங்கப்பாதைகளில், ரங்கராஜபுரம் 2-சக்கர வாகன சுரங்கப்பாதை தவிர, மற்ற அனைத்து சுரங்கப்பாதைகளிலும் மழைநீர் வடிந்து போக்குவரத்து சீராகி உள்ளது. அதேநேரம் சென்னையின் புறநகர் பகுதிகளில் உள்ள சுரங்கப்பாதைகளில் தண்ணீர் தேங்கி உள்ளது. அதனை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
சென்னை விமான நிலையம் திருசூலம் ஜிஎஸ்டி சாலை சுரங்கப்பாதை என்பது, சென்னை விமான நிலையம் மற்றும் மெட்ரோ நிலையம் மற்றும் ரயில் நிலையத்திற்கான இணைப்பாக உள்ளது. இந்த பாதையில் வெள்ளநீர் சுழ்ந்துள்ளது. இந்த தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என விமான நிலையம் செல்லும் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications