சென்னையில் பயங்கரம்.. பிரபல மதுபான விடுதி இடிந்து விழுந்ததில் 3 பேர் பலி.. மீட்பு பணி தீவிரம்
சென்னை: சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள பிரபல தனியார் பப்பின் (மதுபான விடுதி) மேற்கூரை திடீரென்று இடிந்து விழுந்ததில் 3 பேர் பலியாகி உள்ளனர். மற்றவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
சென்னை ஆழ்வார்பேட்டையில் பிரபலமான ஷேக்மேட் ‛பப்' (மதுபான விடுதி) உள்ளது. தற்போது ஐபிஎல் போட்டி நடந்து வருகிறது. இதனால் இந்த பப்பில் ஐபிஎல் போட்டிக்கான சலுகைகள் வழங்கப்பட்டு வந்தது. இதனால் மாலை நேரத்தில் பப்பில் கூட்டம் என்பது அலைமோதும்.

இந்நிலையில் தான் வழக்கம்போல் இன்றும் பப் செயல்பட்டு வந்தது. ஊழியர்கள், பணியாளர்கள் வேலையில் இருந்தனர். இந்நிலையில் தான் இன்று இரவில் திடீரென்று பயங்கர சத்தத்துடன் ‛பப்' மேற்கூரை இடிந்து விழுந்தது.
இதில் ‛பப்'பில் இருந்தவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கினர். இதை பார்த்தவுடன் அந்த பகுதியில் உள்ளவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதுபற்றி போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனடியாக தீயணைப்பு வீரர்கள், போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஜேசிபி வாகனம் மூலம் இடிபாடுகள் அகற்றப்பட்டு மீட்பு பணி நடந்ததும். மேலும் தேசிய பேரிடர் மீட்பு படையினரும் வரவழைக்கப்பட்டனர். அப்போது இடிபாடுகளுக்குள் சிக்கி 3 பேர் இறந்தது தெரியவந்தது. இவர்கள் பப்பில் வேலை செய்து வந்த நிலையில் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கி இறந்துள்ளனர்.
இதில் 2 பேர் மணிப்பூரை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. 3 பேரின் உடல்களை மீட்ட மீட்பு படையினர் பிரேத பரிசோதனைக்காக அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கட்டட இடிபாடுகளுக்குள் யாராவது சிக்கி உள்ளனரா? என்பது தொடர்பாக தேடும் பணி நடந்து வருகிறது.
மேலும் விபத்துக்கான காரணம் என்ன? என்பது உடனடியாக தெரியவில்லை. இருப்பினும் மெட்ரோ சுரங்க பணியால் விபத்து நடந்ததா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதாவது பப் அமைந்துள்ள இடத்தின் சற்று தொலைவில் மெட்ரோ சுரங்க பாதைக்கான பணி நடந்து வருகிறது. இந்த பணியின் காரணமாக ஏற்பட்ட அதிர்வால் பப் மேற்கூரை இடிந்து விழுந்ததா? என்பது பற்றியும் விசாரணை தொடங்கி உள்ளது. இதுபற்றி சென்னை அபிராமபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications