சென்னையில் விவிஐபிக்கள் ஏரியாவில்.. டிடிகே சாலை டூ போயஸ் கார்டன்.. ஸ்டாலின் போட்ட அதிரடி உத்தரவு
சென்னை: சென்னை மாநகராட்சி சார்பில் ஆழ்வார்பேட்டையில் ஜெயம்மாள் சாலை, இளங்கோ சாலை குறுக்கு தெரு, இளங்கோ சாலை, போயஸ் ரோடு, வெங்கடரத்தினம் சாலை, ராஜகிருஷ்ணா ரோடு, நல்லான் போயஸ் ரோடு, வரதராஜபுரம் பிரதான சாலை, ஸ்ரீமான் ஸ்ரீனிவாசன் ரோடு மற்றும் டி.டி.கே. சாலை ஆகிய 10 தெருக்களில் மழைநீர் வடிகால்கள் சுமார் 2.16 கிலோ மீட்டர் நீளத்திற்கு ரூ.8.21 கோடியில் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை முதல்வர் ஸ்டாலின் நேற்று திடீரென ஆய்வு செய்தார். மேலும் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
சென்னையில் விஐபி ஏரியா சொல்லப்படும் ஆழ்வார்பேட்டையில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்குவது இருக்கிறது. இத்தனைக்கு முதல்வர் ஸ்டாலின், மறைந்த முன்னாள் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், தனுஷ், நயன்தாரா உள்பட பல விஐபிக்கள் அந்த பகுதியில் தான் வசிக்கிறார்கள். இங்கு கடந்த முறை வெள்ளம் வந்த போது சற்று பாதிப்பு இருந்தது.

இந்நிலையில் பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் ஆழ்வார்பேட்டை டி.டி.கே. சாலையில் மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்று வருகிறது. சென்னை குடிநீர் வாரியத்தால் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள குடிநீர் குழாய்களை மாற்றி 200 மீட்டர் நீளத்திற்கு புதிய குடிநீர் குழாய்கள் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதனை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.
இதேபோல் கடந்த மழைக்காலத்தில் வீனஸ் காலனி 1-வது தெரு, 2-வது தெரு, சீமான் சீனிவாசன் தெரு, வரதராஜபுரம் பிரதான சாலை, கஸ்தூரி எஸ்டேட் 1-வது தெரு, சேஷாத்திரி தெரு மற்றும் முரேஷ் கேட் சாலை ஆகிய தெருக்களில் தண்ணீர் தேங்கும் நிலை ஏற்பட்டு வந்தது.
இதையடுத்து இந்த தெருக்களில், மழைக்காலங்களில் தண்ணீர் தேங்காத வகையில், ஜெயம்மாள் சாலை, இளங்கோ சாலை குறுக்கு தெரு, இளங்கோ சாலை, போயஸ் ரோடு, வெங்கடரத்தினம் சாலை, ராஜகிருஷ்ணா ரோடு, நல்லான், போயஸ் ரோடு, வரதராஜபுரம் பிரதான சாலை, ஸ்ரீமான் ஸ்ரீனிவாசன் ரோடு மற்றும் டி.டி.கே. சாலை ஆகிய 10 தெருக்களில் மழைநீர் வடிகால்கள் சுமார் 2.16 கிலோ மீட்டர் நீளத்திற்கு ரூ.8.21 கோடியில் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த முறை தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட அதிகமாக பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக சென்னை புறநகரில் மழை பலமாக இருக்கும் என கணிப்புகள் வந்துள்ளன. இதையடுத்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் சென்னை முழுக்க விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். அத்துடன் பணிகளை மிக விரைந்து முடிக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
சென்னையில் தற்போது மழை நீர் வடிகால்வாய் பணிகள் மேற்கொள்ளப்பட்டு தேங்கும் மழை நீரை எல்டாம்ஸ் சாலை, சி.பி.ராமசாமி சாலை, லஸ் சர்ச் சாலை மற்றும் சி.ஐ.டி. காலனி ஆகிய 4 வழியாக வெளியேற்ற வழிவகை செய்யப்பட்டு வருவதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications