சென்னை டூ புதுவை வரை நீல நிறத்தில் மின்னும் கடல் அலைகள்! ஃப்ளோரசென்ட் வேவ்ஸ் ஏற்பட காரணம் என்ன?
சென்னை: சென்னை கிழக்கு கடற்கரைச் சாலை, மரக்காணம், புதுவை ஆகிய இடங்களில் உள்ள கடற்கரைகளில் இரவு நேரங்களில் கடல் அலைகள் நீல விளக்குகளை எரியவிட்டது போல் வருவது காண்போரை கொள்ளை கொள்கிறது. இதற்கு பெயர் பயோலுமினென்சென்ஸ் அல்லது ப்ளோரசன்ட் அலைகள் என்றும் அழைப்பதுண்டு.
சென்னை திருவான்மியூரில் உள்ள கடற்கரையில் இரவு நேரத்தில் கடல் அலைகள் நீல விளக்குகளை ஒளியவிட்டது போல் வருகின்றன. இதை காண அப்பகுதியை சேர்ந்த மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து செல்போனில் செல்பி எடுத்துவிட்டு சென்றனர்.

இதே போல் மரக்காணம், புதுவையில் உள்ள கடற்கரைகளிலும் இரவு நேரத்தில் பயோலுமினென்சென்ஸ் என்ற நீல அலைகள் நிகழ்வு நடந்து வருகிறது. பயோலுமினென்சென்ஸ் என்பது பாக்டீரியா, பூஞ்சை, பாசிகள், பூச்சிகள் போன்ற நீர் வாழ் உயிரினங்களால் ஏற்படுகிறது.

இது இந்த உயிரினங்களுக்குள் நிகழும் ஒரு வகையான வேதியியல் எதிர்வினை. மேற்கண்ட உயிரினங்கள் கரைக்கு அடித்து வரும் போது இது போல் கடலின் அலைகளின் நிறம் நீல நிறத்தில் இருக்கும். அந்தமானில் உள்ள ராதா நகர் கடற்கரையில் ஹேவ்லாக் தீவு அமைந்திருக்கும் கடலில்தான் இது போல் ஏற்படும். அது போல் லட்சத்தீவு பகுதிகளில் உள்ள பங்காரம் கடற்கரையிலும் இப்படி நடக்கும். இங்கு பாசி, ஜெல்லிமீன்களால் இது போன்று நீல நிறத்தில் ஒளிர்கின்றன.
அது போ் கோவாவில் உள்ள பலோலம் கடற்கரையிலும் இது போன்ற அற்புத காட்சி நிகழ்கிறது. உடுப்பியில் உள்ள மட்டு கடற்கரை, மும்பையில் உள்ள ஜூஹு கடற்கரை, திருவான்மியூரில் உள்ள ஈசிஆர் கடற்கரை உள்ளிட்டவை இது போல் நீல நிறத்தில் ஜொலிக்கும். இரவு நேரத்தில் இதை காண நிறைய பேர் வருவதுண்டு. இது போன்ற நிகழ்வுகள் ஜூன் முதல் செப்டம்பர் வரை நிகழும் என கூறப்படுகிறது. பாலவாக்கம் கடற்கரையில் கூட இது போன்ற நிகழ்வு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications