Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னையில் அண்ணா மேம்பாலம் அருகே வெடிகுண்டு வீச்சு... பெரும் பரபரப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் அண்ணா மேம்பாலத்தில் சென்ற மர்ம நபர் ஒருவர் திடீரென கீழ்நோக்கி வெடிகுண்டை வீசி சென்றார். இந்த குண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Recommended Video

    சென்னையில் அண்ணா மேம்பாலம் அருகே வெடிகுண்டு வீச்சு

    சென்னையின் இதயம் என்றால் அண்ணா மேம்பால பகுதியை சொல்லிவிடலாம். ஏனெனில் அங்குதான் அமெரிக்க தூதரகம், வங்கி தலைமை அலுவலகங்கள், முக்கிய நிறுவனங்களின் தலைமை அலுவலகங்கள் உள்ளன.

    இதேபோல் சுமார் நடந்து போகும் தூரத்தில் தான் வருமான வரித்துறை அலுவலகம், தாஜ் நட்சத்திர ஓட்டல், பார்க் ஓட்டல் என முக்கிய நட்சத்திர விடுதிகள் உள்ளன, அத்துடன் அண்ணா மேம்பாலத்தில் இருந்து மெரினா செல்லும் சாலையில் சென்னையின் முக்கிய கல்லூரியான ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி, விஜபிகள் வீடுகள் நிறைந்த போயஸ் கார்டன் பகுதியும் உள்ளது.

    வெடிகுண்டு

    வெடிகுண்டு

    இப்படி முக்கியமான இந்த அண்ணா மேம்பாலம் வழியாக பாரிஸ் கார்னர், தி நகர், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், வடபழனி, தேனாம்பேட்டை, திருவல்லிக்கேணி, என சென்னையின் முக்கிய பகுதிகளை அடைய முடியும். இதனால் எப்போதுமே மிகவும் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படும். இந்நிலையில் இன்று (செவ்வாய்கிழமை மாலை) 4..30 மணி அளவில் அண்ணா மேம்பாலத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற மர்ம நபர் நாட்டு வெடிகுண்டை வீசி சென்றார்.

    வெடித்ததில் பலத்த சத்தம்

    வெடித்ததில் பலத்த சத்தம்

    அவர் மேம்பாலத்தில் இரு சக்கர வாகனத்தில் ஏறியபடி வண்டியைவிட்டு இறங்காமல் வீசிச்சென்ற நாட்டு வெடிகுண்டு தேனாம்பேட்டை செல்லும் சென்னை அண்ணா சாலையில் உள்ள காமராஜர் அரங்கத்திற்கு அருகே கீழே விழுந்து பலத்த சத்தத்துடன் வெடித்திருக்கிறது. இந்த வெடிச்சத்தத்தின் காரணமாக அருகில் இருந்த கார் கண்ணாடிகள் உடைந்திருக்கின்றன.

    தேனாம்பேட்டை காவல் நிலையம்

    தேனாம்பேட்டை காவல் நிலையம்

    இவ்வளவு பெரிய சத்தத்துடன் என்ன வெடிக்கிறது என அருகில் உள்ள கடைகளில் உள்ள நபர்கள் எட்டிப்பார்த்து அதிர்ச்சி அடைந்தார்கள்.. இந்நிலையில் தேனாம்பேட்டை காவல்நிலையத்திற்கு 10 அடி தொலைவில் இந்த சம்பவம் நடந்திருந்தது. இதையடுத்து உடனே அங்கு விரைந்து வந்த காவல்துறை உயர்அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். அந்த மர்ம நபர் வீசி சென்றது நாட்டு வெடிகுண்டு என்பதை உறுதி செய்தனர்.

    கார் ஷோரும் கண்ணாடி

    கார் ஷோரும் கண்ணாடி

    இதற்கிடையே நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் அருகில் இருந்து பிரபல கார் ஷோருமின் கண்ணாடிகள் அதிர்ச்சியில் உடைந்துள்ளது. தேனாம்பேட்டை காவல்துறை உதவி ஆணையர் கோவிந்தராஜ் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை செய்தார். அண்ணா மேம்பாலத்தின் மேலிருந்து அடுத்தடுத்து 2 வெடிகுண்டுகளை மர்ம நபர் வீசிவிட்டு தப்பி ஓடிய சிசிடிவிகளை அவர் ஆய்வு செய்தார். இந்த சிசிடிவி காட்சிகளை வைத்து நாட்டு வெடிகுண்டுகளை வீசி சென்ற மர்ம நபரை தேனாம்பேட்டை போலீசார் தேடி வருகிறார்கள்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+