சென்னையில் எஸ்ஐ செய்த எக்குத்தப்பான வேலை.. மெக்கானிக்கின் பார்வை பறிபோனது.. பக்கா ஸ்கெட்ச்
சென்னை: சென்னையில் நிலத்தகராறில் ரவுடியை அனுப்பி மெக்கானிக்கை தீர்த்து கட்ட திட்டமிட்டதாக சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் வக்கீல் உள்பட 3 பேரை செங்குன்றம் காவல்துறையினர் கைது செய்தனர். ரவுடி தாக்கியதால் கார் மெக்கானிக் பார்வை பறிபோனது.
சென்னை பேசின்பிரிட்ஜ் தங்கசாலை பகுதியை சேர்ந்த 27 வயதாகும் தீபேஷ், செங்குன்றத்தை அடுத்த தண்டல் கழனி பகுதியில் கார் மெக்கானிக் கடை நடத்தி வருகிறார்.

கடந்த ஆகஸ்ட் 4-ந்தேதி குடிபோதையில் வந்த 2 பேர் தீபேசை கொடூரமாக தாக்கி உள்ளார்கள்.என்ன காரணத்திற்காக தாக்கினார்கள் என்பது தெரியவில்லை.
தீபேஷ்க்கு வலது கண்ணில் பலத்த காயம் ஏற்பட்டது. இதற்காக சென்னையில் உள்ள தனியார் கண் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார். ஆனால் மருத்துவர்கள் சிகிச்சை அளித்த போதும், தீபேஷ்க்கு கண் பார்வை பறிபோய்விட்டது.
இதுபற்றி சென்னை செங்குன்றம் காவல் ஆய்வாளர் ஜெகநாதன் வழக்குப்பதிவு செய்தார்கள். கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். மர்மநபர்கள் வந்த மோட்டார் சைக்கிள் பதிவு எண்ணை வைத்து ரவுடி சந்திரன்(28) என்பவரை கைது செய்தனர்.
விசாரணையில்,அண்ணாநகர் போக்குவரத்து பிரிவில் சப்-இன்ஸ்பெக்டர் ஏற்பாட்டில் ரவுடி வந்து தீபேசை தாக்கி உள்ளதாக தெரியவந்தது.
மெக்கானிக் தீபேசுக்கும், அவருடைய உறவினரான சென்னை அண்ணாநகர் போக்குவரத்து பிரிவில் சப்-இன்ஸ்பெக்டராக வேலை செய்து வரும் 52 வயதாகும் ஜெயக்குமார் என்பவருக்கும் தண்டல் கழனியில் உள்ள நிலம் சம்பந்தமாக தகராறு இருந்தது.
நிலத்தகராறு விஷயத்தில் பிரச்சனை தீராத காரணத்தால தீபேஷை தீர்த்துகட்ட ஜெயக்குமாரும் அவரது நண்பரான வக்கீல் ஜமீத் ரபி என்பவரும் முடிவு செய்தார்கள். இதன்படியே ரவுடி சந்திரன் உள்பட 2 பேரை அனுப்பி தீபேசை தாக்கச்சொன்னதாக கூறப்படுகிறது.
இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார், வக்கீல் ஜமித் ரபி ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். ரவுடியுடன் வந்து தாக்கிவிட்டு தலைமறைவான நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
-
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications