சென்னை அண்ணாசாலையில் போறீங்களா.. குட்நியூஸ்.. போக்குவரத்து போலீஸ் எடுத்த அதிரடி முடிவு
சென்னை: சென்னை அண்ணா சாலையில் பெருகி வரும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் விதமாக அண்ணாலை- ஜி.பி. சாலை சந்திப்பில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. இதன்படி, ஜி.பி. சாலையில் இருந்து அண்ணாசாலை நோக்கி வரும் வாகனங்கள் ஜி.பி.சாலை சந்திப்பில் அனுமதிக்கப்படாமல் இடதுபுறம் திருப்பிவிடப்பட்டு எல்.ஐ.சி. எதிரில் 'யு' டர்ன் அனுமதிக்கப்பட்டு டேம்ஸ் சாலை நோக்கி செல்ல அனுமதிக்கப்படும் என்று சென்னை மாநகர போக்குவரத்து போலீசார் அறிவித்துள்ளனர்.
சென்னை அண்ணா சாலையில் போக்குவரத்து நெரிசல் மிக அதிகமாகி வருகிறது. மெட்ரோ ரயில் பணிகளின்போது முடங்கி இருந்த அண்ணா சாலை, அதன்பிறகு புத்துயிர் பெற்று மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. அண்ணா சாலையில் பொதுவாக போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும். குறிப்பாக எல்லா வாகனங்களும் சைதாப்பேட்டை சின்னமலை தொடங்கி தேனாம்பேட்டை, ஆயிரம் விளக்கு, எல்ஐசி, அரசினர் தோட்டம் வரை இணைந்து செல்வதால் கடும் நெரிசல் ஏற்படுவது இயல்பான ஒன்றாக உள்ளது. இதில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மேம்பாலம் அமைப்பது, சிக்னல்களை குறைத்து யூடர்ன் அமைப்பது போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. அந்த வகையில் ஜிபி சாலை சந்திப்பில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

சென்னை போக்குவரத்து போலீசார் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறுகையில், "சென்னை அண்ணாசாலையில் பெருகி வரும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க அண்ணாலை- ஜி.பி. சாலை சந்திப்பில் போக்குவரத்து மாற்றம் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது. தற்போது ஜி.பி. சாலையில் இருந்து அண்ணாசாலை நோக்கி வரும் வாகனங்கள் அண்ணாசாலை- ஜி.பி.சாலை சந்திப்பில் கடந்து செல்வதால் அண்ணாசாலையில் உள்வரும் மற்றும் வெளியே செல்லும் வாகனங்கள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே கீழ்க்கண்டவாறு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது.
* ஜி.பி. சாலையில் இருந்து அண்ணாசாலை நோக்கி வரும் வாகனங்கள் ஜி.பி.சாலை சந்திப்பில் அனுமதிக்கப்படாமல் இடதுபுறம் திருப்பிவிடப்பட்டு எல்.ஐ.சி. எதிரில் 'யு' டர்ன் அனுமதிக்கப்பட்டு டேம்ஸ் சாலை நோக்கி செல்ல அனுமதிக்கப்படும்.
* அண்ணாசாலை-வாலாஜா சந்திப்பு (அண்ணா சிலையில்) இருந்து வரும் அனைத்து வாகனங்களும் வழக்கம் போல் ஜி.பி. சாலையில் இடதுபுறம் அனுமதிக்கப்பட்டு ராயப்பேட்டை மணிக்கூண்டு வழியாக செல்லலாம்.
* அண்ணா மேம்பாலத்தில் இருந்து ஜி.பி. சாலையை நோக்கி செல்லும் வாகனங்கள் ஜி.பி. சாலையை அடைய மவுண்ட் ரோடு தர்கா அருகே 'யு' டர்னில் அனுமதிக்கப்படும்.
அண்ணாசாலையில் போக்குவரத்து நெரிசலை குறைத்து வாகனங்கள் தங்கு தடையின்றி செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
வேளச்சேரி ஷாக்.. பாட்டியுடன் சென்ற 4 வயது குழந்தை பட்டப்பகலில் காரில் கடத்தல்.. இறுதியில் ட்விஸ்ட்! -
3 லட்சம் சதுரடி! வருது 13 மினி மால்.. சென்னை மெட்ரோ 2ம் கட்ட ஸ்டேஷன்களில் சுவாரசியம்! தரமான பிளானிங் -
நள்ளிரவு ‘பவர் கட்’.. சென்னையில் தொடர் மின்தடைக்கு பின்னணியில் இருக்கும் 3 ‘ஷாக்’ காரணங்கள்! -
1 BHK வீடு கட்டும் செலவில் கட்டிமுடிக்கப்பட்ட எழும்பூர் ரயில் நிலையம்.. இப்போ புத்தம் புதுசா மாறப்போகுது! -
சென்னை மக்களே! ரேஷன் அட்டையில் திருத்தம் செய்யணுமா? செம சான்ஸ்.. இன்னைக்கு மிஸ் பண்ணாதீங்க! -
சென்னை முழுக்க மினி மால்.. அடி தூள்.. இனி வீட்டு பக்கத்திலேயே ஷாப்பிங், தியேட்டர், ஆபீஸ்! -
சென்னையில் சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்து.. தாம்பரம் அருகே பரபரப்பு -
4 மணி நேர மின்வெட்டு.. சென்னை ஆவடியில் கொந்தளித்த மக்கள்! சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு! -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்!












Click it and Unblock the Notifications