ஞானசேகரனின் போலீஸ் காவல் இன்றுடன் நிறைவு.. 2 மணி நேர குரல் டெஸ்ட் அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல்?
சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரனின் போலீஸ் காவல் இன்றுடன் நிறைவடைகிறது. இதையடுத்து, அவர் மீண்டும் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் பலத்த பாதுகாப்புடன் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், சென்னை கோட்டூர்புரத்தைச் சேர்ந்த ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். அவருக்கு மட்டுமே இவ்வழக்கில் தொடர்பு உள்ளது என்று காவல்துறையும் திட்டவட்டமாக தெரிவித்தது.

ஆனால், இந்த வழக்கின் பின்னணியில் வேறுசில முக்கிய பிரமுகர்கள் உள்ளதாகவும், அவர்களை காப்பாற்ற அரசும், காவல் துறையும் முயல்கிறது என்றும் அதிமுக, பாஜக, பாமக உள்பட பல்வேறு அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டின.
தாமாக முன்வந்து விசாரித்த ஹைகோர்ட்
இதனிடையே, இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரித்த சென்னை ஹைகோர்ட்ட வழக்கை விசாரிக்க 3 பெண் அதிகாரிகள் கொண்ட சிறப்பு குழுவை அறிவித்தது. அதன்படி, அண்ணாநகர் துணை கமிஷனர் சிநேக பிரியா தலைமையிலான 3 பெண் ஐ.பி.எஸ். அதிகாரிகளை கொண்ட சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது.
இந்த குழுவினர் குற்றச்சாட்டுக்கு உள்ளான ஞானசேகரனின் வீட்டில் சோதனை மேற்கொண்டு முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றினார்கள்.. மேலும், கைது செய்யப்பட்டிருந்த ஞானசேகரனிடமும் விசாரணை நடத்தினர். அதேபோல், அவரிடமிருந்து ஏற்கெனவே பறிமுதல் செய்யப்பட்ட செல்போனை சைபர் க்ரைம் போலீஸாரிடம் வழங்கி அதில் சேமித்து வைத்திருந்த வீடியோக்களையும் கைப்பற்றினர்.
நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு
தொடர்ந்து, சைதாப்பேட்டை 9-வது கோர்ட்டில் ஞானசேகரனை 7 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு மனு தாக்கல் செய்தனர். இதனையடுத்து, ஞானசேகரனை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கி மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.
குற்றவாளி ஞானசேகரனை எழும்பூரில் உள்ள சிறைத்துறை அலுவலகத்தில் வைத்து சிறப்புப் புலனாய்வுக் குழு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே, ஞானசேகரனுக்கு 3 மணி நேரம் குரல் பரிசோதனையும் செய்யப்பட்டது.
இன்றுடன் காவல் முடிவு
இந்த நிலையில், 11 நாட்கள் நீதிமன்ற காவல் முடிவடைந்த நிலையில், ஞானசேகரன் கடந்த 7ம் தேதி, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, ஞானசேகரனை பிப்ரவரி 21ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
அதன்படி இன்று ஞானசேகரனுக்கு நீதிமன்றகாவல் முடிவடைகிறது. இன்றைய தினம், ஞானசேகரனின் குரல் மாதிரி பரிசோதனை தொடர்பான அறிக்கையை தடய அறிவியல் துறை அதிகாரிகள் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தாக்கல் செய்வார்கள் என தெரிகிறது. போலீஸ் காவல் முடிவதையொட்டி, இன்று சைதாப்பேட்டை கோர்ட்டில் ஞானசேகரன் ஆஜர்படுத்தப்பட்டு, மீண்டும் சிறையில் அடைக்கப்படுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
-
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு!












Click it and Unblock the Notifications