Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கோயம்பேடு வாடகை வீட்டில் வில்லங்க காதல்! சென்னை அரும்பாக்கம் போலீசுக்கு போன திருமணமான பெண்! அப்பறம்?

Subscribe to Oneindia Tamil

சென்னை அரும்பாக்கத்தில் வாடகைக்கு குடியிருக்கிறார் அந்த பெண்.. திருமணமாகி 18 வருடங்கள் ஆகிவிட்டது.. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்புதான் இந்த அப்பார்ட்மென்ட்டுக்கு வாடகைக்கு குடிவந்துள்ளார்.. அப்போதுதான் அங்கு குடியிருக்கும் இளைஞரின் அறிமுகமும் கிடைத்தது. இப்போது இவர்களின் விவகாரம் போலீஸ் ஸ்டேஷன் வரை சென்றுள்ளது. இது தொடர்பாக விசாரணையும் நடந்து கொண்டிருக்கிறது. என்ன நடந்தது?

சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த , அந்த 35 வயது பெண்ணுக்கு திருமணமாகிவிட்டது.. கணவருடன் சூளைமேடு பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.. இந்த வீட்டின் மாடியில் தமிழ்ச்செல்வன் என்ற 30 வயது இளைஞரும் குடியிருக்கிறார்.. ஒரே வீடு என்பதால், பெண்ணுக்கும், தமிழ்ச்செல்வனுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் நட்பாக பழகி வந்தனர். ..

Chennai Koyambedu police

திடீர்னு வந்த காதல்

ஆனால், நாளடைவில் அந்த பெண்ணின் பேச்சிலும், அழகிலும் விழுந்துவிட்டார் அந்த இளைஞர்.. திருமணமான பெண் என்று தெரிந்தும்,

ஒருகட்டத்தில் அப்பெண்ணை ஒருதலையாய் காதலிக்கவும் துவங்கினார்.. ஒருநாள் தன்னுடைய விருப்பத்தையும் அந்த பெண்ணிடம் சொல்லி, "உன் புருஷனை விட்டுவிட்டு வந்துவிடு, நாம 2 பேரும் எங்காச்சும் போய் சந்தோஷமாக வாழலாம்" என்று தமிழ்ச்செல்வன் சொல்லியிருக்கிறார்.

பெண்ணின் அட்வைஸ்

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அந்தபெண் இளைஞருக்கு அட்வைஸ் செய்துள்ளார்.. "திருமணமான பெண்ணிடம் இப்படியெல்லாம் பேசக்கூடாது.. உன் வீட்டில் பெற்றோரிடம் சொல்லி, பிடித்த பெண்ணாக பார்த்து திருமணம் செய்து கொள்" என கூறியிருக்கிறார்..

இதற்கு பிறகு தமிழ்ச்செல்வனுடன் பேசுவதையும் அந்த பெண் நிறுத்தி விட்டதாக தெரிகிறது. இது தமிழ்ச்செல்வனுக்கு கோபத்தையும், ஆத்திரத்தையும் தந்தது..

ஏன் என்னுடன் பேசுவதில்லை

அந்த பெண்ணின் வீட்டுக்கே சென்று, "ஏன் என்னுடன் முன்புபோல் பேசுவதில்லை என்று கேட்டு தகராறு செய்திருக்கிறார்.. அத்துடன் பெண்ணை தாக்கியும் இருக்கிறார். இதற்கு மேல் பொறுமையிழந்த அந்த பெண், அரும்பாக்கம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தார்...

தன்னுடைய கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில், வீட்டுக்கு வந்த தமிழ்ச்செல்வன், எனக்கு வீட்டில் திருமணத்துக்கு பெண் பார்க்கிறார்கள். ஆனால், எனக்கு நீதான் வேண்டும். என்னை திருமணம் செய்து கொள், என கூறி என்னிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். நான் மறுத்ததால், என்னை அவர் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார்.

அடுத்தவர் மனைவி

இந்த புகாரின்பேரில் போலீசாரும், தமிழ்ச்செல்வனை ஸ்டேஷனுக்கு அழைத்து விசாரித்தனர். அப்போதுதான், திருமணமான பெண் மீது அளவுக்கு அதிகமாக பாசத்தையும், காதலையும் தமிழ்ச்செல்வன் வைத்திருப்பது போலீசாருக்கு தெரியவந்தது.. அந்த பெண்ணுக்கு தாலி கட்டி, வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்றெல்லாம் கனவுகளை வைத்திருக்கிறார் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.

எனவே போலீசார் தமிழ்ச்செல்வனிடம், "நீ திருமணம் செய்து கொள்ள விரும்பும் பெண்ணுக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது. அடுத்தவரின் மனைவி மீது ஆசைப்படுவது தவறு. இதனால், அந்த பெண்ணின் குடும்ப வாழ்க்கையே பாதிக்கப்பட்டுவிடும். எனவே அந்த பெண்ணை விட்டு, விலகி சென்றுவிடு என்று அட்வைஸ் தந்துள்ளனர்.

கண்ணீர் வடித்த தமிழ்ச்செல்வன்

ஆனாலும், தமிழ்ச்செல்வன் மனம் மாறவில்லை.. "அந்த பெண்ணை என்னால் மறக்க முடியாது. மறக்கவும் முடியவில்லை.. ஏற்கனவே கல்யாணம் ஆகியிருந்தாலும் அதை பற்றியெல்லாம் எனக்கு கவலையில்லை.

அந்த பெண் இல்லாமல் எனக்கு வாழ்க்கையே இல்லை.. எப்படியாவது எங்களுக்கு கல்யாணம் செய்து வைத்துவிடுங்கள் சார் என்று கெஞ்சியிருக்கிறார்.. பிறகு கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.. பிறகு ஸ்டேஷனில் ரகளையும் செய்திருக்கிறார். இறுதியில் போலீசார், அந்த பெண்ணை தாக்கியதாக வழக்குப்பதிவு செய்து தமிழ்ச்செல்வனை கைது செய்து விசாரித்து கொண்டிருக்கிறார்களாம்.

உறவு சிக்கல்கள் அதிகரிப்பு

இளைஞரின் இந்த விநோத செயல் பலரது கவனத்தையும் பெற்று வருகிறது.. காரணம், சமீப காலமாகவே, உறவுசிக்கல்கள் அதிகரித்து வருவதாக மனநல நிபுணர்கள் கூறுகிறார்கள்.. . புரிதல் குறைபாடு உள்ளிட்ட காரணங்களால், விவாகரத்துகள் அதிகரிப்பதாகவும், நீதிமன்றங்கள் கவலை தெரிவித்து வருகின்றன..

ஏற்கனவே சமூகக் கட்டமைப்பில், பிறர் மனைவியுடன் உறவு கொள்வது என்பது தவறான நடத்தையாகவும், சமூக விதிமுறைகளுக்கு எதிராகவும் கருதப்பட்டு வரும்நிலையில், தொடர்ந்து இதுபோன்ற ஒழுக்கக்கேடான விஷயங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன..

திருமண உறவு என்பது ஒரு சமூக ஒப்பந்தம், இது ஒருவருக்கொருவர் விசுவாசமாகவும், அர்ப்பணிப்புடனும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறது... இதில் பிறருடைய மனைவியுடன் உறவு கொள்வது, அந்த உறவை சீர்குலைப்பது மட்டுமல்லாமல், சமூகத்தின் நம்பிக்கையையும், ஒழுக்கத்தையும் பாதிக்க செய்துவிடும் என்பதை மறுக்க முடியாது.

கவுன்சிலிங் தேவை

மேற்கண்ட இளைஞர் தமிழ்ச்செல்வன் விவகாரத்தை பொறுத்தவரை, ஒருதலை காதலாகவே இது பார்க்கப்படுகிறது.. திருமணமான பெண் என்று தெரிந்தும், அவரை உயிருக்குயிராக நேசித்திருக்கிறார்.. அப்பெண்ணையே திருமணமும் செய்ய முடிவு செய்துள்ளார்.. இதைத்தான் போலீசாரிடமும் கண்ணீருடன் சொல்லி உள்ளார்.. ஆனால், சம்பந்தப்பட்ட பெண்ணின் விருப்பத்தை பெறாமலேயே , இத்தனை முடிவுகளையும் எடுத்துள்ளார்.. அத்துடன் அத்துமீறி அப்பெண்ணை தாக்கியும் உள்ளார்..

ஒரு பெண்ணின் விருப்பமின்றி செய்யப்படும் எத்தகைய விஷயமும் ஏற்க முடியாததே. அந்தவகையில், அந்த இளைஞன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பதுடன், சிகிச்சைக்கு உட்படுத்தப்பட வேண்டிய நபராகவே கருதப்படுகிறார் என்று இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

அதுமட்டுமல்ல, இதில் பரிதாபத்துக்குரியவர் அந்த பெண்தான்.. தமிழ்ச்செல்வன் போன்ற நபர்களால் நன்றாக இருக்கும் குடும்பங்களில் பிளவுகளும் ஏற்பட்டு விடுகின்றன.. ஆண்களுடன் பெண்கள் சகஜமாக பேசினாலே, இப்படியான பிரச்சனைகள் வந்துவிடுமோ? என்ற அச்சத்தையும் தமிழ்ச்செல்வன் போன்றோர் ஏற்படுத்தி விடுவதாகவும் கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+