Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆசனவாயில் மாணவனுக்கு நோய்த்தொற்று.. வக்கிரம் பிடிச்ச தமிழ் ஆசிரியர்.. சென்னை அசோக் நகர் பள்ளியில்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பெண் குழந்தைகளை மட்டுமல்ல, சிறுவர்களையும் சேர்த்து காப்பாற்ற வேண்டிய கட்டாயம் இன்று ஏற்பட்டுள்ளது.. ஆசிரியர் ஒருவரால் பாதிக்கப்பட்ட மாணவனுக்கு தொடர் சிகிச்சை நடந்து கொண்டிருக்கிறது. ஆனால், சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க, மாணவனின் பெற்றோர் மிகப்பெரிய போராட்டத்தையே நடத்தியிருக்கிறார்கள். என்ன நடந்தது சென்னையில்?

நம்முடைய நாட்டில் பெண்களுக்கு எதிராகவும், பெண் குழந்தைகளுக்கு எதிராகவும் வன்முறைகள் பெருகி வருகின்றன. இந்த குற்றங்களை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன..

Chennai Ashok Nagar School Tamil Teacher

முக்கியமாக, பெண்களின் நலன் காப்பதற்காகவே போக்சோ உள்ளிட்ட எண்ணற்ற சட்டங்களும் அமலில் உள்ளன.. அனைத்துக்கும் மேலாக, பாலியல் வக்கிரங்களை அரங்கேற்றுபவர்களை தண்டிக்க நீதிமன்றங்களும் துணை நிற்கின்றன..

ஆனாலும்கூட, பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு என்பதே கேள்விக்குறியாகிவிட்டது... சமீபகாலமாக , சிறுவர்களுக்கும் பாதுகாப்பின்மை நிலவுவது அதிர்ச்சியையும், வேதனையையும் தந்து கொண்டிருக்கிறது.. அதிலும் பெண்களே போக்சோவில் கைதாகி வருவது, வருத்தத்தையும், பீதியையும் ஏற்படுத்தி வருகிறது.. இதில் கைதாகும் பெண்கள், ஆசிரியைகள் என்பது அதைவிட வேதனையான விஷயமாகும். இதோ நம்முடைய தலைநகர் சென்னையில் ஒரு ஆசிரியர் போக்சோவில் கைதாகி உள்ளார்.. இவர் ஒரு தமிழ் ஆசிரியராம்.

சென்னை அசோக் நகரில் உள்ள தனியார் பள்ளியில், மேற்கு மாம்பலத்தை சேர்ந்த 9ம் வகுப்பு மாணவன் படித்து வருகிறார்... இவருக்கு கடந்த ஒரு மாத காலமாகவே, உடம்பு சரியில்லாமல் இருந்துள்ளது.. இதனால், மாணவனுக்கு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ஆபரேஷன் செய்யும் அளவுக்கு நிலைமை சென்றது.

ஆசனவாய் நோய்தொற்று

இதுகுறித்து மாணவனிடம் அவரது பெற்றோர் விசாரித்திருக்கிறார்கள்.. அப்போதுதான், பள்ளியில் தமிழ் ஆசிரியர் சுதாகர், மாணவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததும், இதனால் மாணவனுக்கு நோய்த்தொற்று ஏற்பட்டு உடல் நலக்குறைவு ஏற்பட்டதும் தெரியவந்தது...

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக, தமிழ் ஆசிரியர் மீது புகார் அளித்தனர். ஆனால் பள்ளி நிர்வாகம் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்ததாம்.. இதனால் பெற்றோர் , குமரன் நகர் போலீசில் புகார் தந்திருக்கிறார்கள்.

இரவோடு இரவாக போலீஸ் அதிரடி

ஆனால், அந்த புகாரின்படியும் போலீசார் முதலில் சரியாக விசாரணை நடத்தவில்லையாம்.. இதனால் கொதிப்படைந்த மாணவனின் பெற்றோரும், உறவினர்களும், குமரன்நகர் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். இதற்கு பிறகுதான், மாணவனுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை ஆவணங்கள் மற்றும் மாணவன் அளித்த வாக்குமூலத்தின்படி, தமிழ் ஆசிரியர் சுதாகர் மீது போலீசார் போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்ததுடன், இரவோடு இரவாக அவரை கைது செய்தனர்.

ஆனால், புகார் தந்தும் பள்ளி நிர்வாகம், தமிழ் ஆசிரியர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? என்று பாதிக்கப்பட்டவர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.. அதுமட்டுமல்ல, காவல் துறையை வைத்து தங்களை மிரட்டிய பள்ளி தலைமையாசிரியர் மீதும், பள்ளி தாளாளர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

போராட வேண்டிய அவசியம்

உடல்நிலை பாதிக்கப்பட்டு ஒரு மாதம் ஆகிவிட்ட நிலையில், தங்கள் மகனுக்கு சிகிச்சை நடப்பதாகவும், ஆனால், நடந்த சம்பவங்களால கடுமையான மனஅழுத்தத்திற்கு தங்கள் மகன் ஆளாகியிருப்பதாக கண்ணீர் மல்க கூறும் பெற்றோர், பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு பிறப்புறுப்பு ஆசனவாய் உள்ளிட்ட இடங்களில் பாதிப்பு ஏற்படும் வகையில் செய்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்காமல் போலீஸார் ஏன் தயங்கினர்? அதனால்தான் போராட வேண்டிய தேவை ஏற்பட்டது" என்றும் வேதனை தெரிவித்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+