தன்னுடைய செல்போனை எடுத்து விற்று அதில் மது விருந்து.. நண்பனை கழுத்தை நெரித்து கொன்ற டிரைவர்
சென்னை: சென்னை அசோக் நகரில் தன்னுடைய செல்போனை எடுத்து விற்று அதில் மது விருந்து வைத்த நண்பனை, ஆட்டோ ஓட்டுனர் கழுத்தை இறுக்கி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை தியாகராய நகர் எம்.ஆர் சாலையில் வசிப்பவர் தனசேகரன். ஆட்டோ ஓட்டுனர். இவருக்கு ரோகிணி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். தனசேகரன் தினமும் குடித்துவிட்டு வீட்டில் தகராறு செய்து வந்துள்ளார். இதனால் மனைவி கணவனை பிரிந்து, தனது மகன்களுடன் வளசரவாக்கத்திலுள்ள தன் தாய் வீட்டில் வசித்து வருகிறார்.
இந்நிலையில், தனசேகரனும் அசோக் நகர் 7வது அவென்யூவில் வசிக்கும் விக்டர் மற்றும் வியாசர்பாடியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் ரமேஷ் ஆகியோர்கள் நண்பர்கள் ஆவர். இவர்கள் மூன்று பேரும் முன்தினம் இரவு மது அருந்திவிட்டு அங்கேயே தூங்கிவிட்டார்கள். மறுநாள் காலை விக்டர் எழுந்து பார்த்தபோது, தனது நண்பர் தனசேகரன் இறந்து கிடந்துள்ளார். ஆனால், நண்பரான ரமேஷ் அங்கிருந்து மாயமாகிவிட்டார். அவரது செல்போனும் சுவிட்ச்ஆஃப் ஆகியிருந்துள்ளது.

கழுத்தியில் கயிறு தடம்
அதிர்ச்சியடைந்த விக்டர், அசோக் நகர் போலீசுக்கு தகவல் கொடுத்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து இறந்துக் கிடந்த தனசேகரனின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக சென்னை ஓமந்தூரர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். உயிரிழந்த தனசேகரனின் கழுத்தில் தூக்கு கயிறு மாட்டிய அடையாளம் இருந்தது. ஆனால் அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான எந்த தடயமும் இல்லை. இந்நிலையில் தனசேகரனின் மனைவி ரோகினி அசோக் நகர் காவல் நிலையத்தில் தன் கணவரை யாரோ கொன்றுவிட்டதாக புகார் கொடுத்தார். இதையடுத்து போலீசார் சந்தேக மரணம் என்ற பிரிவில் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

கொலை செய்தது அம்பலம்
போலீசார் தலைமறைவாக இருந்த ஆட்டோ ஓட்டுனர் ரமேஷை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது தனசேகரை அளவுக்கதிகமாக மது குடிக்க வைத்து வயர் கொண்டு கழுத்தை இறுக்கிக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

தனசேகர் நக்கல்
தனது மொபைல் போனை வாங்கி பயன்படுத்திவிட்டு திருப்பித் தருவதாகக் கூறி எடுத்துச்சென்ற தனசேகர் , அன்று இரவு கேட்டபோது அதை விற்ற பணத்தில்தான் நாம் மது குடித்துக் கொண்டிருக்கிறோம் என தனசேகர் நக்கலாகக் கூறினாராம்.

விசாரணை
இதனால் கோபமடைந்த ரமேஷ் மதுபோதையில் தூங்கிக்கொண்டிருந்த தனசேகரை வயர் மூலம் கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டார் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து ஆட்டோ ஓட்டுனர் ரமேஷை போலீசார் கைது செய்தனர்.
-
சென்னை பெருங்குடி ஹாஸ்டலில் குளித்த 29 வயது பெண்.. மறைந்திருந்த இளைஞருக்கு மறக்க முடியாத சம்பவம் -
கார் விற்பனையில் மாஸ் காட்டும் கொங்கு மண்டலம்.. கோவை, பொள்ளாச்சி, திருப்பூர்காரங்க வேற ரகம் பாஸ்..! -
சென்னையில் இரவு நேரங்களில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவது ஏன்? அதிகாரிகளுக்கு மட்டுமே தெரிந்த உண்மை -
பெங்களூருக்கு வேட்டு! இந்தியாவிலேயே அதிக சம்பள உயர்வு கிடைக்கும் நகரம் எது தெரியுமா? -
இதுதான் மாற்றமா? சென்னை அரசு மருத்துவமனையில்.. இளம்பெண்ணுக்கு நடந்த சோகம்! மக்கள் ஷாக் -
வரலாறு படைக்கும் Zoho.. டேட்டா சென்டர்களுக்கு உதவ புது சர்வர் உருவாக்கிய சென்னை நிறுவனம்! -
சென்னை ஃபுல்லா மாறப் போகுது.. போக்குவரத்து நெரிசலுக்கு பெரும் தீர்வு! ஐடிஎஸ்-ஐ கையிலெடுத்த ஆபீசர்ஸ் -
டமால் டுமீல் தான்.. 4 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகுது கனமழை! மார்க் செய்த வானிலை ஆய்வு மையம்! -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா?












Click it and Unblock the Notifications