சாத்தியமே இல்லையே.. 2 மணி நேரத்தில் பெங்களூர் - சென்னை பயணமா? மத்திய அரசு சொன்னது உண்மையா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை பெங்களூர் இடையே அமைக்கப்பட உள்ள சாலை மூலம் 2 மணி நேரத்தில் பயணம் செய்ய முடியும் என்று மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார். அவரின் இந்த கூற்று சாத்தியமா என்று கேள்வி எழுந்துள்ளது.

பெங்களூர் - சென்னை இடையிலான அமைய உள்ள எக்ஸ்பிரஸ் வே அதிக கவனம் பெற்றுள்ளது. சென்னை பெங்களூர் இடையே அமைக்கப்பட உள்ள சாலை இந்த வருட இறுதிக்குள் முடிந்து ஜனவரி மாதம் தொடங்கப்படும் என்று மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்து இருப்பது விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.

Chennai Bangalore Expressway: Can traveling in 2 hours possible between these major cities?

சென்னை பக்கம் இன்னும் சாலை பணிகள் பல இடங்களில் தொடங்கவே இல்லை. இன்னும் பல இடங்களில் 10 சதவிகிதம் மட்டுமே பணிகள் நடந்து உள்ளன. அப்படி இருக்கும் போது எப்படி இங்கே சாலை பணிகள் இந்த வருட இறுதிக்குள் முடியும். அதற்கு வாய்ப்பு இல்லவே இல்லையே என்கிறார்கள். அரைகுறையாக பணிகளை முடித்துவிட்டு சாலையை இதனால் திறக்க போகிறார்களோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

2 மணி நேரம்; முக்கியமாக தற்போது சென்னை பெங்களூர் இடையே பயணம் செய்ய 7 மணி நேரம் ஆகிறது. இந்த விரைவுச்சாலை வரும் பட்சத்தில் போக்குவரத்து 2 மணி நேரமாக குறையும். இதனால் மக்கள் இன்னும் வேகமாக, எளிதாக பயணம் செய்ய முடியும் என்று மத்திய நிதி அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார் .

ஆனால் இது சாத்தியமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக தேசிய நெடுஞ்சாலை வட்டாரத்தில் விசாரித்ததில், இத்திட்டத்தின்படி பெங்களூர் கோலாருக்கு அருகில் இருந்துதான் எக்ஸ்பிரஸ் வே கணக்கு துவங்குகிறது. அதேபோல் இந்த பக்கம் சென்னை காஞ்சிபுரம் எல்லை அருகே அருகே எக்ஸ்பிரஸ் வே தொடங்குகிறது . இது பசுமையான நேரான சாலையாக இருப்பதால், எக்ஸ்பிரஸ் வழியில் சுமார் 240 கிமீ தூரம் மட்டுமே.

இதில் ஒரு மணி நேரத்தில் 100- 120 கிலோ மீட்டர் வேகத்தில் வாகனங்கள் எளிதாக செல்லலாம். இதனால் இந்த சாலையில் மட்டுமே 2 மணிநேரம் சாத்தியமாகும். ஆனால் சென்னை சிட்டி, பெங்களூர் சிட்டி உள்ளே செல்ல மேலும் 3 மணி நேரங்கள் ஆகலாம். அதனால் இந்த எக்ஸ்பிரஸ் வே பயணம் 2 மணி நேரம் மட்டுமே. மொத்த பயணம் ஆனால் 5 மணி நேரம் இருக்கும் என்கிறார்கள்.

திட்டத்தின் பின்னணி; சென்னை பெங்களூர் விரைவுச்சாலை ரூ.18 ஆயிரம் கோடி செலவில் இந்த திட்டம் தொடங்கப்பட்டு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மொத்தம் 258 கி.மீட்டர் தூரத்துக்கு இந்த மிக நீண்ட சாலை அமைக்கப்பட உள்ளது. தென் இந்தியாவின் தமிழகம், ஆந்திரா, கர்நாடகம் வழியாக இந்த சாலை 4 வழிச்சாலையாக உயர் தரத்தில் அமைக்கப்படுகிறது. இந்தியாவின் மிகப்பெரிய பசுமை வழி சாலைகளில் இதுவும் ஒன்றாகும்.

வருகிறது பாலம்: இந்த நிலையில்தான் இந்த சாலையில் சுமார் 23 கிமீ தூரத்திற்கு கண்ணை மூடிக்கொண்டு செல்லும் அளவிற்கு நீண்ட உயர் மட்ட சாலை ஒன்று அமைக்கப்பட உள்ளது. சென்னை பெங்களூரை இணைக்கும் சாலையில் உள்ள உயர் மட்ட சாலைகளாக அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. அதன் ஒரு கட்டமாக 23.2 கிமீ நீளமுள்ள மதுரவாயல்-ஸ்ரீபெரும்புதூர் இடையேயான மேம்பாலப் பணி இந்த நிதியாண்டு இறுதிக்குள் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

Chennai Bangalore Expressway: Can traveling in 2 hours possible between these major cities?

வருகிறது பாலம்: இந்த நிலையில்தான் இந்த சாலையில் சுமார் 23 கிமீ தூரத்திற்கு கண்ணை மூடிக்கொண்டு செல்லும் அளவிற்கு நீண்ட உயர் மட்ட சாலை ஒன்று அமைக்கப்பட உள்ளது. சென்னை பெங்களூரை இணைக்கும் சாலையில் உள்ள உயர் மட்ட சாலைகளாக அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. அதன் ஒரு கட்டமாக 23.2 கிமீ நீளமுள்ள மதுரவாயல்-ஸ்ரீபெரும்புதூர் இடையேயான மேம்பாலப் பணி இந்த நிதியாண்டு இறுதிக்குள் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் (NHAI) வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்த ஆண்டுக்கான வேலைத் திட்டத்தில் இந்த திட்டம் சேர்க்கப்பட்டுள்ளது. ₹3,500 கோடி மதிப்பில் இந்த உயர்மட்ட சாலை அமைக்கப்பட உள்ளது. அதாவது 23.2 கிமீ நீளமுள்ள மதுரவாயல்-ஸ்ரீபெரும்புதூர் இடையே ஒரே நீளமாக பாலம் அமைக்கப்படும். இந்த பகுதியை இப்போது கடக்க 30 நிமிடம் குறைந்தபட்சம் ஆகிறது. பாலம் கட்டப்பட்டால் 10 -15 நிமிடத்தில் இந்த பகுதியை கடக்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+