சென்னை: நாட்டின் இரு முக்கிய நகரங்களான சென்னை- பெங்களூரை இணைக்கும் எக்ஸ்பிரஸ் சாலை கட்டுமானம் தொடர்ச்சியாகத் தாமதமாகி வருகிறது. இதற்கிடையே சென்னை பெங்களூர் எக்ஸ்பிரஸ் சாலை தொடர்பாக சில முக்கிய தகவல்களை மத்திய அரசு லோக்சபாவில் பகிர்ந்துள்ளது. இந்தளவுக்குத் தாமதம் ஆனது ஏன்! இதன் பின்னணி என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
தென்னிந்தியாவின் இரு முக்கிய நகரங்களான சென்னை- பெங்களூரை இணைக்கும் வகையில் எக்ஸ்பிரஸ் சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இந்தச் சாலை 2 ஆண்டுகளுக்கு முன்பே முடியும் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், இந்தச் சாலை கட்டுமானத்தில் தொடர்ச்சியாகப் பல்வேறு தாமதங்கள் ஏற்பட்டதால் இன்னும் கட்டுமானம் முடியவில்லை.
சென்னை பெங்களூர் எக்ஸ்பிரஸ் சாலை
இதற்கிடையே, இந்த சென்னை பெங்களூர் எக்ஸ்பிரஸ் சாலை தொடர்பாக சில முக்கிய தகவல்களை மத்திய அரசு லோக்சபாவில் பகிர்ந்துள்ளது. அதாவது சட்ட சிக்கல்கள், தொழில்நுட்ப மற்றும் நிதிச் சிக்கல்கள் காரணமாகவே சென்னை பெங்களூர் எக்ஸ்பிரஸ் சாலை அமைக்கும் பணிகள் இரண்டு ஆண்டுகள் வரை தாமதமானதாக மத்தியச் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி மக்களவையில் தெரிவித்தார். குறிப்பாக, தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்படும் மூன்றாம் கட்டப் பணிகளில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
தென் சென்னை திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் எழுப்பிய கேள்விக்கு அவர் இந்தப் பதிலை அளித்தார். இது தொடர்பாக நிதின் கட்கரி அளித்த எழுத்துப்பூர்வப் பதிலில், "அரக்கோணம்- காஞ்சிபுரம் பகுதியில் ஒப்பந்ததாரர் பிரச்சினை இருக்கிறது. எனவே, அந்தப் பகுதியைத் தவிர மற்ற பணிகள் அனைத்தும் ஜூன் 2026க்குள் நிறைவடையும்" என்றார்.
தாமதம்
சென்னை பெங்களூர் எக்ஸ்பிரஸ் சாலையைப் பொறுத்தவரை கர்நாடகப் பகுதியின் 71 கிமீ சாலை ஏற்கனவே நிறைவடைந்து மக்கள் போக்குவரத்திற்காகத் திறக்கப்பட்டுவிட்டது. ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டில் நடக்கும் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டப் பணிகளில் தான் தாமதம் ஏற்பட்டு வருகிறது. தமிழ்நாடு மற்றும் ஆந்திராவில் இந்தச் சாலை 191.8 கிமீ செல்லும் நிலையில், அங்கு தான் கட்டுமானம் முடியாமல் இழுத்துக் கொண்டே போகிறது.
தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் மொத்தம் ₹13,247 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டு இருந்தது. இதில் ஏற்கனவே ₹9,126 கோடிக்கு மேல் செலவிடப்பட்டுவிட்டதாம். 2025 நவம்பர் 30 நிலவரப்படி, ஆந்திராவில் 87% மற்றும் தமிழ்நாட்டில் 79% கட்டுமானம் முடிந்துள்ளது.
சிக்கல் எங்கே
இந்த இரு பகுதிகளிலும் கூட தமிழகத்தில் தான் பல்வேறு சிக்கல்களும் உள்ளதாம். குடிபாலா- வாலாஜாப்பேட்டை பகுதியில் கட்டுமானம் 92 சதவீதம் முடிந்துள்ளது. இங்கு வில் ஸ்ட்ரிங் கர்டர் சாலை மேம்பாலத்திற்கு ஒப்புதல் தர ரயில்வே தாமதித்தது மற்றும் அதிக அளவில் கடினமான பாறைகள் இருந்தது கட்டுமானத்தைத் தாமதப்படுத்தியது. அதேபோல வாலாஜாப்பேட்டை- அரக்கோணம் பகுதி கட்டுமானமும் மின் கம்பிகள் மற்றும் ரயில்வே கட்டிடங்களை மாற்றுவதில் ஏற்பட்ட தாமதங்களால் பாதிக்கப்பட்டது.
இதில் குறிப்பாக அரக்கோணம்- காஞ்சிபுரம் பகுதி தான் மிக மோசமான நிலையில் இருக்கிறது. அங்கு வெறும் 54% மட்டுமே கட்டுமானம் முடிந்துள்ளது. இந்த பகுதியை அமைக்க ஒப்பந்தம் எடுத்திருந்த ஒப்பந்ததாரர் ன் நிதி நெருக்கடியில் சிக்கியதால் 2025 மே முதல் பணிகள் அப்படியே நின்றுபோயின. கட்டுமான பணிகள் நடக்காததால் ஒப்பந்தத்தை ரத்து செய்ய மத்திய அரசு கடந்த நவம்பர் 11ல் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அங்கு ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு, மீண்டும் புதிய ஒப்பந்தம் கோரப்பட்டு கட்டுமானம் நடக்கும் என தெரிகிறது.
எப்போது நிறைவடையும்
அதேபோல ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள இணைப்புச் சாலை பணிகளும் வெறும் 24% மட்டுமே நடந்துள்ளன. ஒப்பந்ததாரரின் மோசமான செயல்பாடுகள், டிசைன் மாற்றங்கள், மழை ஆகியவை இந்தத் தாமத்திற்குக் காரணமாக இருக்கிறது. மறுபுறம் ஆந்திராவைப் பொறுத்தவரை அங்கு பெத்தம்ங்களா-பைரெட்டிபள்ளி பகுதி (96% நிறைவு) பைரெட்டிபள்ளி- பங்காரூபாளையம் பகுதி (80% நிறைவு) சிறப்பாகவே இருக்கிறது. அங்குத் தேசிய வனவிலங்கு வாரிய நிபந்தனைகள், அதி உயர் அழுத்த மின்கம்பிகள் இடமாற்றத்தால் ஏற்பட்ட தாமதம் ஆகியவை கட்டுமானத்தைப் பாதித்து இருந்தது.
அரக்கோணம்- காஞ்சிபுரம் பகுதியைத் தவிர மற்ற பணிகள் அனைத்தும் ஜூன் 2026க்குள் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Bangalore Chennai Expressway has been delayed by nearly two years (சென்னை பெங்களூர் எக்ஸ்பிரஸ் சாலையில் தாமதம்): Chennai Bangalore delay latest news in tamil.சென்னை: நாட்டின் இரு முக்கிய நகரங்களான சென்னை- பெங்களூரை இணைக்கும் எக்ஸ்பிரஸ் சாலை கட்டுமானம் தொடர்ச்சியாகத் தாமதமாகி வருகிறது. இதற்கிடையே சென்னை பெங்களூர் எக்ஸ்பிரஸ் சாலை தொடர்பாகச் சில முக்கிய தகவல்களை மத்திய அரசு லோக்சபாவில் பகிர்ந்துள்ளது. இந்தளவுக்குத் தாமதம் ஆனது ஏன்! இதன் பின்னணி என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்.தென்னிந்தியாவின் இரு முக்கிய நகரங்களான சென்னை- பெங்களூரை இணைக்கும் வகையில் எக்ஸ்பிரஸ் சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இந்தச் சாலை 2 ஆண்டுகளுக்கு முன்பே முடியும் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், இந்தச் சாலை கட்டுமானத்தில் தொடர்ச்சியாகப் பல்வேறு தாமதங்கள் ஏற்பட்டதால் இன்னும் கட்டுமானம் முடியவில்லை.சென்னை பெங்களூர் எக்ஸ்பிரஸ் சாலை இதற்கிடையே, இந்த சென்னை பெங்களூர் எக்ஸ்பிரஸ் சாலை தொடர்பாகச் சில முக்கிய தகவல்களை மத்திய அரசு லோக்சபாவில் பகிர்ந்துள்ளது. அதாவது சட்டச் சிக்கல்கள், தொழில்நுட்ப மற்றும் நிதிச் சிக்கல்கள் காரணமாகவே சென்னை பெங்களூர் எக்ஸ்பிரஸ் சாலை அமைக்கும் பணிகள் இரண்டு ஆண்டுகள் வரை தாமதமானதாக மத்தியச் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி மக்களவையில் தெரிவித்தார். குறிப்பாக, தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்படும் மூன்றாம் கட்டப் பணிகளில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.தென் சென்னை திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் எழுப்பிய கேள்விக்கு அவர் இந்தப் பதிலை அளித்தார். இது தொடர்பாக நிதின் கட்கரி அளித்த எழுத்துப்பூர்வப் பதிலில், "அரக்கோணம்- காஞ்சிபுரம் பகுதியில் ஒப்பந்ததாரர் பிரச்சினை இருக்கிறது. எனவே, அந்தப் பகுதியைத் தவிர மற்ற பணிகள் அனைத்தும் ஜூன் 2026க்குள் நிறைவடையும்" என்றார்.தாமதம்சென்னை பெங்களூர் எக்ஸ்பிரஸ் சாலையைப் பொறுத்தவரை கர்நாடகப் பகுதியின் 71 கிமீ சாலை ஏற்கனவே நிறைவடைந்து மக்கள் போக்குவரத்திற்காகத் திறக்கப்பட்டுவிட்டது. ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டில் நடக்கும் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டப் பணிகளில் தான் தாமதம் ஏற்பட்டு வருகிறது. தமிழ்நாடு மற்றும் ஆந்திராவில் இந்தச் சாலை 191.8 கிமீ செல்லும் நிலையில், அங்கு தான் கட்டுமானம் முடியாமல் இழுத்துக் கொண்டே போகிறது.தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் மொத்தம் ₹13,247 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டு இருந்தது. இதில் ஏற்கனவே ₹9,126 கோடிக்கு மேல் செலவிடப்பட்டுவிட்டதாம். 2025 நவம்பர் 30 நிலவரப்படி, ஆந்திராவில் 87% மற்றும் தமிழ்நாட்டில் 79% கட்டுமானம் முடிந்துள்ளது.சிக்கல் எங்கேஇந்த இரு பகுதிகளிலும் கூட தமிழகத்தில் தான் பல்வேறு சிக்கல்களும் உள்ளதாம். குடிபாலா- வாலாஜாப்பேட்டை பகுதியில் கட்டுமானம் 92 சதவீதம் முடிந்துள்ளது. இங்கு வில் ஸ்ட்ரிங் கர்டர் சாலை மேம்பாலத்திற்கு ஒப்புதல் தர ரயில்வே தாமதித்தது மற்றும் அதிக அளவில் கடினமான பாறைகள் இருந்தது கட்டுமானத்தைத் தாமதப்படுத்தியது. அதேபோல வாலாஜாப்பேட்டை- அரக்கோணம் பகுதி கட்டுமானமும் மின் கம்பிகள் மற்றும் ரயில்வே கட்டிடங்களை மாற்றுவதில் ஏற்பட்ட தாமதங்களால் பாதிக்கப்பட்டது.இதில் குறிப்பாக அரக்கோணம்- காஞ்சிபுரம் பகுதி தான் மிக மோசமான நிலையில் இருக்கிறது. அங்கு வெறும் 54% மட்டுமே கட்டுமானம் முடிந்துள்ளது. இந்த பகுதியை அமைக்க ஒப்பந்தம் எடுத்திருந்த ஒப்பந்ததாரர் ன் நிதி நெருக்கடியில் சிக்கியதால் 2025 மே முதல் பணிகள் அப்படியே நின்றுபோயின. கட்டுமான பணிகள் நடக்காததால் ஒப்பந்தத்தை ரத்து செய்ய மத்திய அரசு கடந்த நவம்பர் 11ல் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அங்கு ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு, மீண்டும் புதிய ஒப்பந்தம் கோரப்பட்டு கட்டுமானம் நடக்கும் என தெரிகிறது.எப்போது நிறைவடையும்அதேபோல ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள இணைப்புச் சாலை பணிகளும் வெறும் 24% மட்டுமே நடந்துள்ளன. ஒப்பந்ததாரரின் மோசமான செயல்பாடுகள், டிசைன் மாற்றங்கள், மழை ஆகியவை இந்தத் தாமத்திற்குக் காரணமாக இருக்கிறது. மறுபுறம் ஆந்திராவைப் பொறுத்தவரை அங்கு பெத்தம்ங்களா-பைரெட்டிபள்ளி பகுதி (96% நிறைவு) பைரெட்டிபள்ளி- பங்காரூபாளையம் பகுதி (80% நிறைவு) சிறப்பாகவே இருக்கிறது. அங்குத் தேசிய வனவிலங்கு வாரிய நிபந்தனைகள், அதி உயர் அழுத்த மின்கம்பிகள் இடமாற்றத்தால் ஏற்பட்ட தாமதம் ஆகியவை கட்டுமானத்தைப் பாதித்து இருந்தது.அரக்கோணம்- காஞ்சிபுரம் பகுதியைத் தவிர மற்ற பணிகள் அனைத்தும் ஜூன் 2026க்குள் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.சென்னை: நாட்டின் இரு முக்கிய நகரங்களான சென்னை- பெங்களூரை இணைக்கும் எக்ஸ்பிரஸ் சாலை கட்டுமானம் தொடர்ச்சியாகத் தாமதமாகி வருகிறது. இதற்கிடையே சென்னை பெங்களூர் எக்ஸ்பிரஸ் சாலை தொடர்பாகச் சில முக்கிய தகவல்களை மத்திய அரசு லோக்சபாவில் பகிர்ந்துள்ளது. இந்தளவுக்குத் தாமதம் ஆனது ஏன்! இதன் பின்னணி என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்.தென்னிந்தியாவின் இரு முக்கிய நகரங்களான சென்னை- பெங்களூரை இணைக்கும் வகையில் எக்ஸ்பிரஸ் சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இந்தச் சாலை 2 ஆண்டுகளுக்கு முன்பே முடியும் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், இந்தச் சாலை கட்டுமானத்தில் தொடர்ச்சியாகப் பல்வேறு தாமதங்கள் ஏற்பட்டதால் இன்னும் கட்டுமானம் முடியவில்லை.சென்னை பெங்களூர் எக்ஸ்பிரஸ் சாலை இதற்கிடையே, இந்த சென்னை பெங்களூர் எக்ஸ்பிரஸ் சாலை தொடர்பாகச் சில முக்கிய தகவல்களை மத்திய அரசு லோக்சபாவில் பகிர்ந்துள்ளது. அதாவது சட்டச் சிக்கல்கள், தொழில்நுட்ப மற்றும் நிதிச் சிக்கல்கள் காரணமாகவே சென்னை பெங்களூர் எக்ஸ்பிரஸ் சாலை அமைக்கும் பணிகள் இரண்டு ஆண்டுகள் வரை தாமதமானதாக மத்தியச் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி மக்களவையில் தெரிவித்தார். குறிப்பாக, தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்படும் மூன்றாம் கட்டப் பணிகளில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.தென் சென்னை திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் எழுப்பிய கேள்விக்கு அவர் இந்தப் பதிலை அளித்தார். இது தொடர்பாக நிதின் கட்கரி அளித்த எழுத்துப்பூர்வப் பதிலில், "அரக்கோணம்- காஞ்சிபுரம் பகுதியில் ஒப்பந்ததாரர் பிரச்சினை இருக்கிறது. எனவே, அந்தப் பகுதியைத் தவிர மற்ற பணிகள் அனைத்தும் ஜூன் 2026க்குள் நிறைவடையும்" என்றார்.தாமதம்சென்னை பெங்களூர் எக்ஸ்பிரஸ் சாலையைப் பொறுத்தவரை கர்நாடகப் பகுதியின் 71 கிமீ சாலை ஏற்கனவே நிறைவடைந்து மக்கள் போக்குவரத்திற்காகத் திறக்கப்பட்டுவிட்டது. ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டில் நடக்கும் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டப் பணிகளில் தான் தாமதம் ஏற்பட்டு வருகிறது. தமிழ்நாடு மற்றும் ஆந்திராவில் இந்தச் சாலை 191.8 கிமீ செல்லும் நிலையில், அங்கு தான் கட்டுமானம் முடியாமல் இழுத்துக் கொண்டே போகிறது.தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் மொத்தம் ₹13,247 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டு இருந்தது. இதில் ஏற்கனவே ₹9,126 கோடிக்கு மேல் செலவிடப்பட்டுவிட்டதாம். 2025 நவம்பர் 30 நிலவரப்படி, ஆந்திராவில் 87% மற்றும் தமிழ்நாட்டில் 79% கட்டுமானம் முடிந்துள்ளது.சிக்கல் எங்கேஇந்த இரு பகுதிகளிலும் கூட தமிழகத்தில் தான் பல்வேறு சிக்கல்களும் உள்ளதாம். குடிபாலா- வாலாஜாப்பேட்டை பகுதியில் கட்டுமானம் 92 சதவீதம் முடிந்துள்ளது. இங்கு வில் ஸ்ட்ரிங் கர்டர் சாலை மேம்பாலத்திற்கு ஒப்புதல் தர ரயில்வே தாமதித்தது மற்றும் அதிக அளவில் கடினமான பாறைகள் இருந்தது கட்டுமானத்தைத் தாமதப்படுத்தியது. அதேபோல வாலாஜாப்பேட்டை- அரக்கோணம் பகுதி கட்டுமானமும் மின் கம்பிகள் மற்றும் ரயில்வே கட்டிடங்களை மாற்றுவதில் ஏற்பட்ட தாமதங்களால் பாதிக்கப்பட்டது.இதில் குறிப்பாக அரக்கோணம்- காஞ்சிபுரம் பகுதி தான் மிக மோசமான நிலையில் இருக்கிறது. அங்கு வெறும் 54% மட்டுமே கட்டுமானம் முடிந்துள்ளது. இந்த பகுதியை அமைக்க ஒப்பந்தம் எடுத்திருந்த ஒப்பந்ததாரர் ன் நிதி நெருக்கடியில் சிக்கியதால் 2025 மே முதல் பணிகள் அப்படியே நின்றுபோயின. கட்டுமான பணிகள் நடக்காததால் ஒப்பந்தத்தை ரத்து செய்ய மத்திய அரசு கடந்த நவம்பர் 11ல் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அங்கு ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு, மீண்டும் புதிய ஒப்பந்தம் கோரப்பட்டு கட்டுமானம் நடக்கும் என தெரிகிறது.எப்போது நிறைவடையும்அதேபோல ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள இணைப்புச் சாலை பணிகளும் வெறும் 24% மட்டுமே நடந்துள்ளன. ஒப்பந்ததாரரின் மோசமான செயல்பாடுகள், டிசைன் மாற்றங்கள், மழை ஆகியவை இந்தத் தாமத்திற்குக் காரணமாக இருக்கிறது. மறுபுறம் ஆந்திராவைப் பொறுத்தவரை அங்கு பெத்தம்ங்களா-பைரெட்டிபள்ளி பகுதி (96% நிறைவு) பைரெட்டிபள்ளி- பங்காரூபாளையம் பகுதி (80% நிறைவு) சிறப்பாகவே இருக்கிறது. அங்குத் தேசிய வனவிலங்கு வாரிய நிபந்தனைகள், அதி உயர் அழுத்த மின்கம்பிகள் இடமாற்றத்தால் ஏற்பட்ட தாமதம் ஆகியவை கட்டுமானத்தைப் பாதித்து இருந்தது.அரக்கோணம்- காஞ்சிபுரம் பகுதியைத் தவிர மற்ற பணிகள் அனைத்தும் ஜூன் 2026க்குள் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Notifications
Settings
Clear Notifications
No New Notifications
Notifications
Use the toggle to switch on notifications
Block for 8 hours
Block for 12 hours
Block for 24 hours
Don't block
To start receiving timely alerts, as shown below click on the Green “lock” icon next to the address bar
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on the Menu icon of the browser, it opens up a list of options.
Click on the “Options ”, it opens up the settings page,
Here click on the “Privacy & Security” options listed on the left hand side of the page.
Scroll down the page to the “Permission” section .
Here click on the “Settings” tab of the Notification option.
A pop up will open with all listed sites, select the option “ALLOW“, for the respective site under the status head to allow the notification.
Once the changes is done, click on the “Save Changes” option to save the changes.