தெறி மாஸ்! சென்னை- பெங்களூர்- மைசூர் இடையே 2வது வந்தே பாரத் அறிமுகம்.. ரூட் என்ன! டிக்கெட் விலை என்ன
சென்னை: சென்னை-பெங்களூர்- மைசூர் ரூட்டில் ஏற்கனவே ஒரு வந்தே பாரத் ரயில் இயங்கி வரும் நிலையில், இப்போது இதே ரூட்டில் மற்றொரு வந்தே பாரத் ரயில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இந்தியாவில் விரிவான நெட்வோர்க் கொண்ட பொது போக்குவரத்து என்றால் அது இந்தியன் ரயில்வே தான். நாட்டின் எந்த பகுதிக்கும் உங்களால் ரயில் மூலம் எளிதாகப் பயணிக்க முடியும்.

செலவும் குறைவு.. வேகமாகவும் செல்ல முடியும் என்பதால் பொதுமக்கள் பலரும் ரயில்களில் பயணிக்கவே விருப்பம் காட்டுகிறார்கள். அதேநேரம் அதிநவீன வசதிகள் இந்திய ரயில்களில் மிஸ்ஸிங் என்ற புகார் இருந்து கொண்டே இருந்தது.
வந்தே பாரத்: அதற்குப் பதிலளிக்கும் வகையில் இந்தியன் ரயில்வே அறிமுகப்படுத்தியது தான் வந்தே பாரத்.. முற்றிலும் குளிர்சாதன வசதி, தானியங்கி கதவுகள் என வெளிநாடுகளில் இருக்கும் ரயில்களுக்கு இணையாக இந்த வந்தே பாரத் இருக்கிறது. தமிழகத்தைப் பொறுத்தவரைச் சென்னை-பெங்களூர்- மைசூர் ரூட்டில் தான் இந்த வந்தே பாரத் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது முதலே இதற்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது.
சென்னை பெங்களூர் என இரு முக்கிய நகரங்களை இணைப்பதால் இதன் டிக்கெட்கள் படுவேகமாக விற்று தீர்ந்துவிடுகிறது. இதனால் பல பயணிகளுக்கு டிக்கெட் கிடைப்பதில்லை. இதற்கிடையே இந்த ரூட்டில் கூட்டம் அலை மோதும் நிலையில், சென்னை-பெங்களூர்- மைசூர் மார்க்கத்தில் இரண்டாவது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலைத் தென்னக ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது. ஆரஞ்சு நிற வந்தே பாரத் ரயில் இந்த ரூட்டில் இயக்கப்படும் எனத் தெரிகிறது.
இப்போது இயக்கப்படும் வந்தே பாரத் காலையில் சென்னையில் இருந்து கிளம்பி மதியம் மைசூர் அடையும். ஆனால், இப்போது அறிமுகப்படுத்தப்படும் வந்தே பாரத் காலையில் மைசூரில் இருந்து கிளம்பி, மதியம் சென்னை வந்தடையும். இந்த வந்தே பாரத் ரயிலின் டிக்கெட், இப்போது இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலின் டிக்கெட் விலைக்கு இணையாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
மைசூரில் புறப்படும் இந்த ரயில் மாண்டியா - எஸ்எம்விடி பெங்களூரு - கிருஷ்ணராஜபுரம் - ஜோலார்பேட்டை - காட்பாடி ரயில் நிலையங்களில் நின்று செல்லும். கடைசியில் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வரும். மைசூரில் காலை 6 மணிக்குக் கிளம்பும் இந்த வந்தே பாரத், காலை 7.40 மணிக்குப் பெங்களூர் வரும். மதியம் 12.20க்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும்.
மறு மார்க்கமாக 5 மணிக்குக் கிளம்பும் வந்தே பாரத், இரவு 9.30 மணிக்குப் பெங்களூர் சென்றடையும் நிலையில், அது 11.20க்கு மைசூர் செல்லும். சென்னை- பெங்களூர்- மைசூர் இடையே ஏற்கனவே ஒரு வந்தே பாரத் இயக்கப்படும் நிலையில், இப்போது இரண்டாவது வந்தே பாரத் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது இதைப் பிரதமர் மோடி வரும் மார்ச் 12ஆம் தேதி தொடங்கி வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே இந்த ரூட்டில் சென்னை-மைசூர் விபி எக்ஸ்பிரஸ், சென்னை-மைசூர் சதாப்தி, சென்னை-பெங்களூர் சதாப்தி, சென்னை-பெங்களூர் டபுள் டெக்கர், சென்னை-பெங்களூர் ஓவர்நைட் எக்ஸ்பிரஸ் மற்றும் இன்டர்சிட்டி அதிவிரைவு ரயில்கள் என பல ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. மேலும், வட மாநிலங்களில் இருந்து இயக்கப்படும் தினசரி மற்றும் வாராந்திர ரயில்கள் இந்த வழியாகச் செல்லும்.
இத்தனை ரயில்கள் இயக்கப்பட்டாலும் கூட மிக முக்கிய ரூட்டாக இருப்பதால் பல முக்கிய நேரங்களில் டிக்கெட் கிடைக்காது. இதன் காரணமாகவே இப்போது இரண்டாவது வந்தே பாரத் ரயில்களும் இதே ரூட்டில் அறிமுகப்படுத்தப்படுகிறது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications