பெரிய திருப்பம்! அரும்பாக்கம் வங்கிக் கொள்ளையில் இன்ஸ்பெக்டருக்கு தொடர்பு.. 3.5 கிலோ தங்கம் மீட்பு
சென்னை: அரும்பாக்கம் தனியார் வங்கி நகை கொள்ளை விசாரணையில் முக்கிய திருப்பம் அரங்கேறி உள்ளது.
Recommended Video
சென்னையில் அரும்பாக்கம் 100 அடி சாலையில் பெடரல் வங்கி செயல்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு, இந்த வங்கியில் கொள்ளை சம்பவம் அரங்கேறியது.
தலைநகரில் இருக்கும் வங்கியில், அதுவும் பட்டப்பகலிலேயே இப்படியொரு கொள்ளை சம்பவம் நடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து போலீசார் உடனடியாக விசாரணையில் குதித்தனர்.

கொள்ளை
கடந்த வாரம் அரும்பாக்கம் பெடரல் வங்கியின் நகைக்கடன் பிரிவில் ஊழியர்கள் பணியாற்றிக் கொண்டிருந்தனர். இரு சக்கர வாகனத்தில் வாடிக்கையாளர்கள் போல வங்கிக்கு வந்த அவர்கள், முதலில் காவலாளிக்குக் குளிர்பானத்தில் மயக்க மருந்தை கொடுத்துள்ளனர். அவர் மயங்கிய பின்னர், வங்கியில் ஊழியர்களைக் கத்தியைக் காட்டி மிரட்டி கழிவறையில் கட்டிப்போட்டனர்.

நகை
அதைத் தொடர்ந்து லாக்கரை உடைத்து வங்கியில் இருந்த பல கோடி மதிப்பிலான நகைகளைக் கொள்ளை அடித்தனர். சுமார் 32 கிலோ தங்க நகைகள் வங்கியில் இருந்து திருடப்பட்டது தெரிய வந்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணையைத் தொடங்கினர். முதற்கட்ட விசாரணையில் அந்த வங்கியில் பணிபுரிந்த ஊழியரே நண்பர்களுடன் இணைந்து கொள்ளையில் ஈடுபட்டது தெரிய வந்தது.

விசாரணை
இதையடுத்து வழக்கு விசாரணைக்காக மொத்தம் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. வங்கியில் கொள்ளை அடித்த பின்னர், பைக் மூலம் தப்பிச் சென்ற சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணையைத் தொடங்கினர். வழக்கைச் சிறப்பாக விசாரித்த அதிகாரிகள் மிக விரைவில் நான்கு குற்றவாளிகளைக் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து 28 கிலோ தங்கத்தையும் பறிமுதல் செய்தனர்.

போலீஸ் அதிகாரி
இந்தச் சூழலில் இந்தச் சம்பவத்தில் திடீர் திருப்பமாக இந்த கொள்ளை சம்பவத்தில் போலீசாருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. அச்சரபாக்கம் போலீஸ் ஆய்வாளர் அமல்ராஜ் வீட்டில் இருந்து இப்போது 3.5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வங்கி கொள்ளையர்கள் உடன் ஆய்வாளர் அமல்ராஜ் தொடர்பில் இருந்ததும் விசாரணையில் தெரிய வந்தது.
-
காதல் திருமணம் செய்துக்கொண்ட மகள்! பெட்ரோல் குண்டு வீசிய பாசக்கார தந்தை! நெல்லையில் ஷாக்! -
முதல்வர் விஜய் தொகுதியில் சூட்கேஸுக்குள் தலையில்லாத ஆண் சடலம்.. பெரம்பூர் ரயில் நிலையத்தில் ஷாக்! -
ரொம்ப அசால்ட்டா இருந்துருக்காங்க! விசாரணை அதிகாரியின் விசித்திர நடைமுறை! போலீஸை விளாசிய நீதிமன்றம் -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
Kerala: ஒன்றரை வயது குழந்தையின் உடலில் 91 காயங்கள்! 7 எலும்பு முறிவுகள்! துடிதுடித்த திருவனந்தபுரம்! -
காலையில் கஞ்சா பால்.. இட்லிக்கு கஞ்சா சட்னி.. பெட் ரூம் முழுக்க 70 கஞ்சா செடிகள்.. மிரண்ட போலீஸ் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு?












Click it and Unblock the Notifications