73வது சுதந்திர தினம்.. சென்னையில் நீதிபதிகள் & பார் கவுன்சில் உறுப்பினர்கள் கொடி ஏற்றி கொண்டாட்டம்!
சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னையில் வழக்கறிஞர்கள் மற்றும் நீதிபதிகள் தேசிய கொடி ஏற்றி கொண்டாடினார்கள்.
சென்னை: சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னையில் வழக்கறிஞர்கள் மற்றும் நீதிபதிகள் தேசிய கொடி ஏற்றி கொண்டாடினார்கள்.
பலரின் தியாகங்கள், கடும் போராட்டம் மற்றும் அமைதியான அகிம்சை போராட்டத்தால் இந்தியா 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15 தேதி சுதந்திரம் அடைந்தது. இதையடுத்து இந்திய நாட்டின் 73வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். அதேபோல் தமிழக முதல்வர் பழனிச்சாமி சென்னையில் கொடி ஏற்றி வைத்தார். அதேபோல் மாவட்ட தலைநகரங்களில் ஆட்சியாளர்கள் கொடியை ஏற்றினார்கள்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி விஜயா கம்லேஷ் தஹிலரமானி தேசிய கொடியை ஏற்றி வைத்தார். உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள சமநீதி கண்ட சோழன் சிலை அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில், கொடியேற்றி வைத்த பின்னர் மத்திய தொழிலக பாதுகாப்பு படையின் அணிவகுப்பு மரியாதையையும் ஏற்றுக்கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் உயர்நீதிமன்ற நீதிபதிகள், ஓய்வு பெற்ற நீதிபதிகள், டிஜிபி திரிபாதி, சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன், மத்திய மாநில அரசு வழக்கறிஞர்கள், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் நிர்வாகிகள், பல்வேறு வழக்கறிஞர் சங்கங்களின் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
அதேபோல் தமிழ்நாடு பார் கவுன்சில் வளாகத்தில் இன்று தேசிய கொடி ஏற்றப்பட்டு சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது.

இதில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் p.s.அமல்ராஜ் துணை தலைவர் கார்த்திகேயன், இந்திய பார் கவுன்சில் உறுப்பினர் பிரபாகரன், பார் கவுன்சில் உறுப்பினர்கள் மற்றும் பிரிசில்லா பாண்டியன், k.பாலு, மோகனகிருஷ்ணன், அய்யாவு, சரவணன் ஸ்ரீமுருகன் ,பார் கவுன்சில் செயலாளர் மற்றும் நிர்வாகிகள், வழக்கறிஞர் கலந்து கொண்டனர்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications