சென்னை பீச் - எழும்பூர் 4வது வழித்தடம்! பயன்பாட்டுக்கு வருவது எப்போது? ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்
சென்னை: சென்னை கடற்கரை - எழும்பூர் 4-வது வழித்தட பணிகள் கடந்த ஆண்டு செப்டம்பர் தொடங்கிய நிலையில் தற்போது பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த வழித்தட பணிகளால் பறக்கும் ரயில்கள் சிந்தாரிப்பேட்டையில் இருந்து மட்டுமே வேளச்சேரிக்கு இயக்கப்படுகின்றன. இதனால், இந்த வழித்தட பணிகள் எப்போது முடியும் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் பயணிகளுக்கு குட் நியூஸ் ஒன்றை தெற்கு ரயில்வே பொது மேலாளர் வெளியிட்டுள்ளார்.
சென்னையில் புறநகர் மின்சார ரயில்கள் பயணிகளின் போக்குவரத்து தேவையை பெரிதும் தீர்த்து வைக்கின்றன. தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் இந்த ரயில் சேவையை பயன்படுத்துகிறார்கள். புறநகரில் இருந்து சென்னை நகருக்குள் வருவதற்கு மின்சார ரயில்களே பயணிகளுக்கு வரப்பிரசாதம் போல அமைந்துள்ளது.

மின்சார ரயில்கள்: பேருந்துகளில் வந்தால் கடுமையான போக்குவரத்து நெரிசலில் சிக்கி கொள்ள நேரிடும். புறநகரில் இருந்து கிண்டி, எழும்பூர், பிராட்வே உள்ளிட்ட இடங்களுக்கு வரும் பயணிகள் பேருந்துகள் வருவதாக இருந்தால் பயண நேரமும் அதிகமாக இருக்கும். ஆனால், ரயில்களில் சுமார் ஒரு மணி நேரத்திற்குள் வந்துவிடலாம். ரயில்களை பொறுத்தவரை திட்டமிட்ட படி சரியான நேரத்திற்கு வந்து செல்ல முடியும் என்பதால் பயணிகள் பலரும் மின்சார ரயில்களையே விரும்புகிறார்கள்.
சென்னை புறநகர் ரயில் ரூட்டில் சென்னை கடற்கரை- தாம்பரம் மற்றும் சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையேயான வழித்தடங்கள்தான் மிக முக்கியமானதாக உள்ளது. இந்த ரூட்களில் மின்சார ரயில்கள் ஒரு மணி நேரம் பீக் நேரங்களில் ஓடாமல் போனால் மொத்த சென்னையும் ஸ்தம்பித்துவிடும் என்று சொல்லும் அளவிற்கு ரயில் நிலையத்தில் கூட்டம் அலைமோதும்.
4வது வழித்தட பாதை: சென்னை எழும்பூர் - கடற்கரை இடையே தற்போது இரண்டு பாதையில் புறநகர் ரயில்களும், ஒரு பாதையில் எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில்களும் இயக்கப்படுகின்றன. கூடுதல் ரயில் பாதை இல்லாததால், அதிக ரயில்கள் இயக்க முடியாத நிலை உள்ளது. இதையடுத்து சென்னை எழும்பூர் - கடற்கரை வரை 4-வது பாதை ரூ.280 கோடி மதிப்பில் அமைக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்தது.
இதையடுத்து, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நான்காவது வழித்தட பாதைக்கான பணிகள் தொடங்கப்பட்டன. இந்த பணிகளுக்காக கடற்கரை - வேளச்சேரி இடையேயான பறக்கும் ரயில் பாதையில் ரயில் சேவை சிந்தாரிப்போட்டை வரை மாற்றி அமைக்கப்பட்டது. கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 27-ந்தேதி முதல் கடற்கரை- சிந்தாதிரிப்பேட்டை இடையே ரயில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது.
ரயில்வே அதிகாரி பேச்சு: தற்போது வேளச்சேரி செல்லும் மின்சார ரயில்கள், கடற்கரைக்கு பதில் சிந்தாதிரிப்பேட்டையில் இருந்து இயக்கப்படுகின்றன. இதனால், மயிலாப்பூர், திருவான்மியூர், பெருங்குடி, வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
சென்னை கடற்கரை - எழும்பூர் 4-வது வழித்தட பணிகளை முதலில் 6 மாதத்தில் முடிக்க தெற்கு ரெயில்வே திட்டமிட்டு இருந்தது. ஆனால், இந்த பணிகள் திட்டமிட்டபடி முடிக்கப்படவில்லை. தற்போது வரையிலும் பணிகள் முடிவடையதாதால் கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து வேளச்சேரிக்கு பறக்கும் ரயிலை இயக்க முடியாத நிலை உள்ளது. இதனால் பயணிகள் இந்த வழித்தட பணிகள் எப்போது முடியும் என்ற எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
செப்டம்பர் மாதத்தில்: இந்த நிலையில் தான், சென்னை கடற்கரை - எழும்பூர் 4-வது வழித்தட பயணிகள் வரும் செப்டம்பருக்குள் முடிந்துவிடும் என்று தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தெரிவித்துள்ளார். சென்னையில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஆர்.என்.சிங் கூறியதாவது:-
சென்னை கடற்கரை - எழும்பூர் இடையேயான 4-வது வழித்தட பாதை வரும் செபடம்பர் மாதத்தில் முடிவுக்கு வரும் அக்டோபர் 2-வது வாரத்தில் பயன்பாட்டுக்கு வரும்" என்று கூறினார். இந்த வழித்தட பணிகள் முடிந்தால் எழும்பூர் வழியாக கூடுதல் ரயில் இயக்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது.
-
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
இனி கடைசி நேரத்தில் டிக்கெட் கேன்சல் செய்தால் நோ ரீஃபண்ட்.. ரயில் டிக்கெட் ரத்து நடைமுறையில் மாற்றம் -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம்












Click it and Unblock the Notifications