சென்னை கடற்கரை-எழும்பூர் 4வது ரயில் பாதை நிலவரம் என்ன? தெற்கு ரயில்வே சொன்ன நல்ல செய்தி
சென்னை: சென்னை கடற்கரை-எழும்பூர் இடையிலான 4-வது ரயில் பாதை பணி 50 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது. வரும் ஜூலை மாதத்தில் இருந்து ரயில்களை இயக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
சென்னையின் முக்கியமான மின்சார ரயில் வழித்தம் என்றால் அது, தாம்பரம் - கடற்கரை வழித்தடம் தான்,.. இந்த வழித்தடத்தில் மின்சார ரயில்கள் ஒரு மணி நேரம் பீக் அவர்ஸில் ஓடாமல் போனால் மொத்த சென்னையும் ஸ்தம்பித்துவிடும்.. இந்த வழித்தடத்தில் தாம்பரம்-கடற்கரை இடையே 4 ரயில்பாதைகள் இருக்கிறது. ஆனால் எழும்பூர் - சென்னை கடற்கரை வரை 3 வழித்தடங்கள் மட்டுமே இருக்கிறது. இதில் 2 பாதைகளில் புறநகர் மின்சார ரயில்களும், ஒரு பாதையில் வட மாநில எக்ஸ்பிரஸ் ரயில்கள் மற்றும் சரக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன

வடமாநிலங்களுக்கு செல்லும் 90 சதவீதம் ரயில்கள் சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் இருந்து மட்டுமே இயக்கப்படுகின்றன. அதேநேரம் தமிகத்தின் பிறபகுதிகளில் இருந்து சென்னை வழியாக வடமாநிலங்கள் செல்லும் ரயில்கள் சென்டிரல் ரயில் நிலையத்திற்கு பதில் எழும்பூர் வழியாக இயக்கப்படும்.
ஆனால் ஒரே ஒரு பாதை மட்டுமே இருப்பதால் தாம்பரம் வழியாக வடமாநிலங்களுக்கு ரயில்களை இயக்க வேண்டும் என்ற ரயில்வேயின் திட்டம் நிறைவேறாமல் இருந்து வந்தது. அதேநேரம் தற்போதைய நிலையில் சென்ட்ரல் ரயில் நிலையம் எப்போதும் கூட்டம் நிரம்பி வழிகிறது. இந்த கூட்டத்தை குறைக்க விரும்பிய தெற்கு ரயில்வே, தாம்பரத்தில் இருந்து எழும்பூர் ரயில்நிலையம் வழியாக வட மாநிலங்களுக்கு ரயில்கள் இயக்க புதிய பாதை போட விரும்பியது.
இதன்படி, சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே 4.3 கிலோ மீட்டர் தொலைவுக்கு 4-வது புதிய ரயில்பாதை அமைக்க தெற்கு ரயில்வே பரிந்துரை செய்தது. ரூ.279 கோடியில் அமைக்க ரயில்வே வாரியம் உடனடியாக ஒப்புதல் அளித்தது. இந்த பணிகளுக்காக கடற்கரை - வேளச்சேரி இடையேயான பறக்கும் ரயில் பாதையில் ரயில் சேவை சிந்தாரிப்போட்டை வரை மாற்றி அமைக்கப்பட்டது. கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 27-ந்தேதி முதல் கடற்கரை- சிந்தாதிரிப்பேட்டை இடையே ரயில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது.
வேளச்சேரி முதல் பூங்கா சந்திப்பு வரை ரயில்களை இயக்க வேண்டும் என்ற கோரிக்கையை தெற்கு ரயில்வே நிராகரித்தது. தற்போது வேளச்சேரி செல்லும் மின்சார ரயில்கள், கடற்கரைக்கு பதில் சிந்தாதிரிப்பேட்டையில் இருந்து இயக்கப்படுகின்றன. இதனால் ரயில் பயணிகள் பெருமு சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள். சென்னையின் ஐடி நிறுவனங்கள், பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் ஓஎம்ஆர், அடையாறு, பெருங்குடி, கந்தன்சாவடி மற்றும் வேளச்சேரி பகுதிகளில் அமைந்துள்ளதால் சென்னை மக்கள் வேலைக்கு வர, கடற்கரை -வேளச்சேரி ரயில் தான் உதவி வந்தது. இப்போது ரயில்கள் சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் இருந்து இயக்கப்படுவதால், அவர்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகிறார்கள்.
இதனிடையே 4-வது ரயில் வழித்தட பணி காரணமாக சென்னை கடற்கரை - சிந்தாதிரிப்பேட்டை இடையில் பறக்கும் ரயில் சேவை மார்ச் மாதம் வரையில் 7 மாதங்களுக்கு பறக்கும் தற்காலிகாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்தது. 6 மாதத்தில் பணிகள் முடிக்கப்படும் என்று தெற்கு ரெயில் தெரிவித்திருந்த நிலையில் திட்டமிட்டபடி பணிகளை முடிக்கவில்லை.
இதனால், வேளச்சேரியில் இருந்து பாரிமுனை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டிய பொதுமக்கள் சிந்தாதிரிப்பேட்டை ரயில் நிலையத்தில் இறங்கி மாறி சென்று வருகிறார்கள்.. ஜூலை மாதம் வரை இவர்கள் அப்படியே பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஏனெனில் 4-வது வழித்தட பணிகள் 50 சதவீதம் மட்டுமே தற்போது நிறைவு பெற்றுள்ளன
ஏன் தாமதம்: சென்னை எழும்பூர்-கடற்கரை இடையே 4-வது வழித்தட பணியில் ரிசர்வ் வங்கியின் நிலத்தை கையகப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டதால் பணிகளை திட்டமிட்டபடி முடிப்பதில் தாமதம் ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தண்டவாளத்தின் பெரும்பாலான பகுதிகள் கூவம் ஆற்றின் கரையோரம் செல்வதால் ஆற்றின் கரையோரம் தடுப்புகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. பக்கிங்காம் கால்வாயில் 8 சிறிய பாலங்கள் அமைக்கும் பணியில் தற்போது 4 பாலங்களுக்கான பணிகள் முடிந்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
4வது பாதை பணிக்காக சென்னை மருத்துவக் கல்லூரிக்கு சொந்தமான இடங்களை கையகப்படுத்தி பணிகள் நடந்து வருகிறது. 50 சதவீத பணிகள் தற்போது முடிவடைந்த நிலையில், மீதம் உள்ள பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. வரும் ஜூலை மாதத்தில் இந்த வழித்தடத்தில் ரயில்களை இயக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். எனவே வேளச்சேரி -கடற்கரை வழித்தடத்தில் ரயில்கள் வரும் ஆகஸ்ட் மாதம் முதல் இயங்கும் என எதிர்பார்க்கலாம்.
-
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு!












Click it and Unblock the Notifications