சென்னை பீச் - தாம்பரம் ரயில்கள் ரத்து! நாங்க இருக்கோம்! கை கொடுத்த எம்டிசி! ஸ்பெஷல் பஸ்கள் அறிவிப்பு
சென்னை: சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே புறநகர் மின்சார ரயில் சேவை நாளை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தாம்பரம் தாம்பரம் ரயில் நிலையத்தில் நடைமேம்பாலப் பணிகள் நடைபெற இருப்பதால் நாளை காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த நேரத்தில் கூடுதலாக 40 சிறப்பு பஸ்களை அறிவித்து எம்டிசி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சென்னையில் மிக முக்கியமான போக்குவரத்து சேவையாக புறநகர் மின்சார ரயில்கள் உள்ளன. அரக்கோணம், வேளச்சேரி ஆகிய ரூட்களில் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டாலும் பீச் - தாம்பரம் இடையேயான ரூட் தான் எப்போதும் படு பிசியாக காணப்படும் வழித்தடமாக உள்ளது. இந்த ரூட்டில் சில நிமிடம் ரயில் தாமதம் ஆனாலும் பயணிகள் கூட்டம் அலைமோதும்.

அலுவலகம் செல்வோர், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ மாணவிகள் என அனைத்து தரப்பினரும் திண்டாடிப்போவார்கள். சிறிது நேரம் பாதிப்பு ஏற்பட்டால் கூட மொத்த சென்னையே ஸ்தம்பித்து விடும் என்று சொல்லும் அளவுக்க்கு பயணிகள் கூட்டம் அலைமோதும். சமீப காலமாக பராமரிப்பு பணிகள் காரணமாக அடிக்கடி ரயில் சேவைகளை தெற்கு ரயில்வே ரத்து செய்து வருகிறது.
இந்த நிலையில் தான் தாம்பரம் பணிமனையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் சென்னை கடற்கரை - தாம்பரம், தாம்பரம் - சென்னை கடற்கரை இடையே மின்சார ரயில் சேவை நாளை ரத்து செய்யபட்டுள்ளது. தாம்பரம் - சென்னை கடற்கரை இடையேயான புறநகர் மின்சார ரயில் சேவை நாளை (ஜனவரி 5 ஆம் தேதி) காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தாம்பரம் ரயில் நிலையத்தில் நடைமேம்பால பணிகள் நடைபெற உள்ளதால் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ரயில்வே கூறுகையில், "சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே ரயில் ரத்து செய்யப்படும் நேரத்தில் பல்லாவரம் - கடற்கரை, செங்கல்பட்டு - கூடுவாஞ்சேரி இடையே பயணிகள் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.
அதே சமயம் காலை 7 மணி முதல் 11:00 மணி வரை சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டுக்கு மின்சார ரயில்கள் இரு திசைகளிலும் அட்டவணைப்படி இயக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில் சேவை குறைக்கப்பட்டுள்ளதால் நாளை, ஏற்கனவே இயக்கப்படும் சேவைகளோடு கூடுதலாக 40 சிறப்பு பஸ்களை இயக்க சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக எம்.டி.சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
05.01.2025 அன்று தாம்பரம் ரயில் நிலையத்தில் New Foot Over Bridge பணிகள் நடைபெற இருப்பதால் காலை 07.00 மணி முதல் மாலை 16.00 மணி வரை கடற்கரையிலிருந்து தாம்பரத்திற்கு இயக்கப்படும் ரயில்கள் பல்லாவரம் வரையும், அதேபோல் செங்கல்பட்டிலிருந்து சென்னை கடற்கரை செல்லும் இரயில்கள் காலை 11.00 மணி முதல் மாலை 16.00 வரை செங்கல்பட்டிலிருந்து கூடுவாஞ்சேரி வரையும் ரயில்கள் இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
எனவே, அவ்வழித்தடத்தில் பயணம் செய்யும் பயணிகள் நலன் கருதி மா.போ.கழகம் 05.01.2025 அன்று தற்போது இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக பல்லாவரம் பேருந்து நிலையத்திலிருந்து செங்கல்பட்டுக்கு 10 பேருந்துகளையும், பல்லாவரம் பேருந்து நிலையத்திலிருந்து கூடுவாஞ்சேரிக்கு 10 பேருந்துகளையும், தாம்பரம் பேருந்து நிலையத்திலிருந்து தி.நகர் மற்றும் பிராட்வேக்கு கூடுதலாக 20 பேருந்துகள் என மொத்தம் 40 பேருந்துகளை மா.போ.கழகம் இயக்க உள்ளது. மேற்குறிப்பிட்ட நாட்களில் முக்கிய பேருந்து நிலையங்களில் அலுவலர்களை நியமித்து இப்பேருந்துகள் இயக்கத்தினை கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications