தாம்பரத்தை விடுங்க! சென்னை கடற்கரை டூ எழும்பூர் மின்சார ரயில் சேவை இன்று ரத்து!
சென்னை: சென்னை கடற்கரையிலிருந்து எழும்பூர் வரை இயக்கப்படும் மின்சார ரயில் சேவை இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் எளிதாக சென்று வரும் வகையில் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயில்களில் பள்ளி கல்லூரி மாணவர்கள் முதல் வணிகர்கள் வரை அனைத்து தரப்பினரும் பயணிக்கிறார்கள்.
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை கடற்கரை - சென்னை எழும்பூர் இடையே இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 45 மணி முதல் இரவு 7 45 மணி வரையில் பராமரிப்பு பணி நடைபெறுவதால், சென்னை எழும்பூர்- கடற்கரை இடையே மின்சார ரெயில் சேவை ரத்து செய்யப்படுகிறது.

அதே நேரம் இன்று காலை 7 45 மணி முதல் இரவு 7.45 வரையில் சென்னை கடற்கரையில் இருந்து புறப்படும் அனைத்து மின்சார ரெயில்களும் அதற்கு மாற்றாக சென்னை எழும்பூரில் இருந்து இயக்கப்படும். அதேபோல, செங்கல்பட்டு மற்றும் தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை வரும் மின்சார ரெயில்கள் சென்னை எழும்பூர் வரை இயக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஏற்கெனவே தாம்பரம் பராமரிப்பு பணிகளுக்காக பகல் மற்றும் இரவு நேர மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டதில் எந்த மாற்றமும் இல்லை. சென்னை கடற்கரை- சென்னை எழும்பூர் இடையே இரவு 7.45 மணிக்கு பராமரிப்பு பணி முடிவடைந்த பின்னர் வழக்கம் போல் சென்னை கடற்கரை வரை இயக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு வழித்தடத்தில் மின்சார ரெயில் சேவைகள் காலை மற்றும் இரவு நேரங்களில் முன்னதாக வெளியிட்ட அறிவிப்பின்படி ரத்து செய்யப்படுகிறது. நேற்று 55 ரயில்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில் இன்றும் அதே நிலை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்டு 3-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை மின்சார ரெயில் சேவைகள் சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு வழித்தடத்தில் ஏற்கனவே அறிவித்தது போலவே பகல் மற்றும் இரவு நேரங்களில் ரத்து செய்யப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு? -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல!












Click it and Unblock the Notifications