சென்னை பீச், பார்க்குகளில் பொதுமக்களுக்கு இலவச வைஃபை வசதி.. மாநகராட்சி தீவிரம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைகள் மற்றும் பூங்காக்களில் இலவச உயர்வேக வைஃபை (Wi-Fi) வசதியை ஏற்படுத்துவதற்கான அதிரடி நடவடிக்கைகளைச் சென்னை மாநகராட்சி தீவிரப்படுத்தியுள்ளது.

மக்கள் அதிகளவில் வந்து செல்லும் பகுதிகளில் மக்கள் தங்குதடையின்றி இணைய பயன்பாட்டினை மேற்கொள்ளும் வகையில் உயர்தரத்தில் இலவச வைஃபை வசதியினை ஏற்படுத்திட தமிழக முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டு உள்ளார். அதன்படி, கடற்கரைகள், பூங்காக்களில் இலவச வைஃபை வசதி ஏற்படுத்தப்பட உள்ளது.

chennai wifi beach park

பொதுமக்களுக்குத் தடையற்ற டிஜிட்டல் சேவைகளை எளிதாகவும் விரைவாகவும் கொண்டு சேர்க்கும் நோக்கில் இத்திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதன் முதற்கட்டமாக, மெரினா கடற்கரை, பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை, திருவான்மியூர், திருவொற்றியூர் கடற்கரைப் பகுதிகள் மற்றும் மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதான பூங்காக்கள், விளையாட்டுத் திடல்களில் இலவச வைஃபை ஹாட்ஸ்பாட்களை அமைப்பது குறித்து விரிவாகத் திட்டமிடப்பட்டுள்ளது.

இத்திட்டத்தை விரைவாகச் செயல்படுத்தும் வகையில், பாரதி ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ, ஹாத்வே மற்றும் ஏசிடி ஃபைபர்நெட் உள்ளிட்ட முன்னணி இணைய சேவை வழங்குநர்களின் (ISPs) பிரதிநிதிகளுடனான உயர்நிலைக் கலந்தாய்வுக் கூட்டம் சென்னை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ். சமீரன் தலைமையில் ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது. இதில் மாநகராட்சி தலைமைப் பொறியாளர் பாலமுரளி மற்றும் கண்காணிப்புப் பொறியாளர்கள் உள்ளிட்ட பல உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பொதுமக்கள் தங்களின் மொபைல் போன் எண்களைப் பதிவு செய்து, ஒருமுறை பயன்படுத்தும் கடவுச்சொல் (OTP) மூலம் எளிதில் இந்த இலவச இணையச் சேவையைப் பயன்படுத்திக் கொள்ளும் வசதிகள் செய்யப்படவுள்ளன. வேலைநாட்கள் மற்றும் வார இறுதி நாட்களில் கடற்கரைகள் மற்றும் பூங்காக்களுக்கு வரும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு இந்த நடவடிக்கை பெரும் பயனுள்ளதாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+