Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னை-பெங்களூர் வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்! புதிய விதிமுறையால் சுங்க கட்டணம் குறைகிறது!

Subscribe to Oneindia Tamil

சென்னை: வாகன ஓட்டிகளுக்கு சுங்க கட்டணம் என்பதுதான் பெரும் தொல்லை. வாகனம் வாங்கும்போதே, ரோடு டேக்ஸ் என தனியாக வரியை வாங்குகிறார்கள். இருப்பினும் எதற்காக சுங்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது? என்று பலரும் கேள்வி எழுப்புகின்றனர். இப்படி இருக்கையில், சுங்க கட்டணம் குறைப்பு தொடர்பான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இது சென்னை-பெங்களூர் வாகன ஓட்டிகளுக்கு நிம்மதியை ஏற்படுத்தியிருக்கிறது.

தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் எக்ஸ்பிரஸ்வே சாலைகளில் சுங்கக்கட்டண விதிகளில் மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் மாற்றத்தின் கீழ் இந்த கட்டண குறைப்பு அமலுக்கு வருகிறது.

Chennai Bengaluru

கட்டண குறைவு

திருத்தப்பட்ட விதிகளின்படி, ஒரு தேசிய எக்ஸ்பிரஸ்வே முழுமையாகச் செயல்படாத பட்சத்தில், இயங்கும் பகுதிக்கு மட்டுமே சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படும். மேலும், இந்த கட்டணம் குறைந்த தேசிய நெடுஞ்சாலை சுங்கக் கட்டண விகிதத்திலேயே இருக்கும். அதாவது எக்ஸ்பிரஸ்வே முழுமையாக பயன்பாட்டுக்கு வராத நிலையில், அந்த சாலையில் பயணிக்கும் வாகனங்களுக்கு சாதாரண தேசிய நெடுஞ்சாலைகளுக்கான குறைந்தபட்ச கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும்.

தமிழக மக்களுக்கு எப்படி பலன் தரும்?

தற்போது சென்னையிலிருந்து பெங்களூர் போக வேண்டும் எனில், மொத்தம் 326 கி.மீ தூரம் இருக்கிறது. இந்த சாலை வாலாஜா, வேலூர், ஆம்பூர், வாணியம்பாடி, கிருஷ்ணகிரி வழியாக செல்கிறது. மொத்தம் 7 மணி நேரம் வரை பயணிக்க வேண்டும். இந்த தேசிய நெடுஞ்சாலையில் (NH48) சாலையில் உள்ள சுங்கச்சாவடிகளில் ஒரு வழி பயணத்திற்கு ரூ.500-650 வரை வாகனங்களை பொறுத்து கட்டணம் செலுத்த வேண்டும். ஆனால், இந்த பாதைக்கு மாற்றாக NE7 எனும் எக்ஸ்பிரஸ்வே சாலை கட்டுமானத்தில் இருக்கிறது.

சென்னை-பெங்களூர் வாகன ஓட்டிகள்

இந்த சாலை அமைக்கப்பட்டால் வெறும் 3 மணி நேரத்தில் பெங்களூர் போய்விட முடியும். இந்த சாலை பகுதி பகுதியாக கட்டமைக்கப்பட்டு வருகிறது. இதில் பயணிக்க ரூ.650-850 வரை கட்டணமாக வசூலிக்கப்படும். ஆனால், இந்த சாலையின் முதல் பகுதி அதாவது சென்னையிலிருந்து வாலாஜா வரை கட்டுமானம் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு வருகிறது எனில், அதை பயன்படுத்த எக்ஸ்பிரஸ்வே கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. மாறாக, NH48 சாலைக்கான கட்டணம் மட்டும் செலுத்தினால் போதும். எப்போது முழு சாலையும் பயன்பாட்டுக்கு வருகிறதோ அப்போது முழு கட்டணம் செலுத்தினால் போதும்.

எக்ஸ்பிரஸ்வே சாலைகளுக்க கூடுதல் கட்டணம் ஏன்?

எக்ஸ்பிரஸ்வே சாலைகள் மேம்பட்ட பயண அனுபவத்தை வழங்குகின்றன. எனவே வழக்கமான தேசிய நெடுஞ்சாலைகளை விட 25 சதவீதம் கூடுதலாக வசூலிக்கப்படுகிறது. தேசிய எக்ஸ்பிரஸ்வே சாலைகள் சுங்கக் கட்டணம், முழுமையடையாத பகுதிகளிலும் கூட வழக்கமான அளவில் வசூலிக்கப்பட்டு வருகின்றன.

விதிகளில் மாற்றம்

இப்படி இருக்கையில், புதிய விதிகளின்படி, ஒரு தேசிய எக்ஸ்பிரஸ்வே முழுமையாகத் திறக்கப்படாத நிலையில், பூர்த்தி செய்யப்பட்ட பகுதிக்கு குறைந்த தேசிய நெடுஞ்சாலை கட்டணமே விதிக்கப்படும். சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் இது குறித்த தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது, "பகுதி அளவில் மட்டுமே செயல்படும் தேசிய எக்ஸ்பிரஸ்வே சாலைகளை பயன்படுத்துவோருக்காக, இந்திய அரசு தேசிய நெடுஞ்சாலைகள் கட்டணம் (விகிதங்கள் மற்றும் வசூலிப்பைத் தீர்மானித்தல்) விதிகள், 2008-ல் ஒரு திருத்தம் குறித்து அறிவித்துள்ளது.

பழைய சாலை

தேசிய விரைவுச் எக்ஸ்பிரஸ்வே சாலைகளை பயன்படுத்த மக்களை ஊக்குவிப்பதே இந்தத் திருத்தத்தின் நோக்கம். இதன் மூலம், எக்ஸ்பிரஸ்வே சாலைகளுக்கு இணையாக உள்ள பழைய தேசிய நெடுஞ்சாலைகளில் நெரிசல் குறைந்து, தளவாட மற்றும் பயணிகள் போக்குவரத்து விரைவாகும், அத்துடன் பழைய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசல் காரணமாக ஏற்படும் மாசுப்பாடும் குறையும்" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த புதிய விதிமுறை, திருத்தம் அமலுக்கு வந்த தேதியிலிருந்து ஒரு வருடம் வரை அல்லது விரைவுச்சாலை முழுமையாக இயங்கும் வரை - இவற்றுள் எது முன்னரோ அதுவரை - செல்லுபடியாகும் என்றும் அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. இந்த கட்டண விதிமுறைகள் இன்று முதல் அமலுக்கு வருகின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+