காதலி நிஷாவை பிரித்து விடுவார்களோ... பயத்தில் ரஞ்சித் செய்த காரியம்.. அலறிப்போன குன்றத்தூர் போலீஸ்!
சென்னை: சென்னையை அடுத்த குன்றத்தூரில் வீட்டைவிட்டு ஓடி வந்து தன்னை திருமணம் செய்த காதலியை பிரித்து விடுவார்கள் என்ற பயந்த காதலன்: போலீசார் கண்முன் பிளேடால் அறுத்துக் கொண்டதால் போலீஸ் ஸ்டேசனில் பரபரப்பு ஏற்பட்டது.
இதனிடையே பெற்றோருடன் செல்ல விருப்பம் இல்லை. காதலனுடன் வாழ விரும்புவதாக, காதலி தெரிவித்ததா நன்றாக இருங்கள் என்று வாழ்த்தி காதல் ஜோடியை சேர்த்து வைத்து வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். பெண்ணின் பெற்றோர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் அடுத்த கோவூர், தண்டலம் பகுதியை சேர்ந்தவர் நிஷா (20). திடீரென வீட்டை விட்டு வெளியேறிய நிஷா, வீடு திரும்பவில்லை. நிஷாவை பெற்றோர் பல இடங்களில் தேடியும் எந்த தகவலும் இல்லை.

விசாரணையில் தகவல்
இதையடுத்து, குன்றத்தூர் போலீசில் நிஷாவின் பெற்றோர் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தார்கள் அதில், அதே பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் (25) என்ற இளைஞரை காதலித்து வந்ததும், அவருடன் நிஷா சென்றுவிட்டதும் தெரியவந்தது.

பயத்தில் செய்த காரியம்
இதையடுத்து போலீசார், திருநெல்வேலியில் இருந்த நிஷா மற்றும் ரஞ்சித்தை மீட்டு காவல் நிலையம் கொண்டு வந்தனர். நேற்று காதல் ஜோடியிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது ரஞ்சித், தன்னிடம் இருந்து காதலியை போலீசார் பிரித்து விடுவார்களோ என்ற பயத்தில், திடீரென மறைத்து வைத்திருந்த பிளேடால் கையை அறுத்துக்கொண்டார். அவருக்கு ரத்தம் கொட்டத்தொடங்கியது.

பதிவு திருமணம்
இதை கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார், உடனடியாக அவருக்கு மீட்டு, தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் போலீசாரின் விசாரணையில், சில ஆண்டுகளாக காதலித்து, கடந்த சில மாதங்களுக்குமுன் பதிவு அவர்கள் திருமணம் செய்து கொண்டதும், தற்போது வீட்டை விட்டு சென்றதும் தெரியவந்தது.

விருப்பம் இல்லை
நிஷாவுக்கு, பெற்றோருடன் செல்ல விருப்பம் இல்லை. காதலனுடன் வாழ விரும்புவதாக கூறினார். இதையடுத்து, இருவரையும் பாதுகாப்புடன் போலீசாரின் வாகனத்திலேயே அனுப்பிவைத்தனர். விசாரணையின்போது, காவல் நிலையத்தில் காதலன் பிளேடால் தன்னைத்தானே கையை அறுத்து கொண்ட சம்பவம் குன்றத்தூர் போலீசாரை அதிர்ச்சி அடைய வைத்தது.
-
நள்ளிரவு ‘பவர் கட்’.. சென்னையில் தொடர் மின்தடைக்கு பின்னணியில் இருக்கும் 3 ‘ஷாக்’ காரணங்கள்! -
1 BHK வீடு கட்டும் செலவில் கட்டிமுடிக்கப்பட்ட எழும்பூர் ரயில் நிலையம்.. இப்போ புத்தம் புதுசா மாறப்போகுது! -
சென்னை முழுக்க மினி மால்.. அடி தூள்.. இனி வீட்டு பக்கத்திலேயே ஷாப்பிங், தியேட்டர், ஆபீஸ்! -
வேளச்சேரி ஷாக்.. பாட்டியுடன் சென்ற 4 வயது குழந்தை பட்டப்பகலில் காரில் கடத்தல்.. இறுதியில் ட்விஸ்ட்! -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
சென்னையில் சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்து.. தாம்பரம் அருகே பரபரப்பு -
3 லட்சம் சதுரடி! வருது 13 மினி மால்.. சென்னை மெட்ரோ 2ம் கட்ட ஸ்டேஷன்களில் சுவாரசியம்! தரமான பிளானிங் -
சென்னை மக்களே! ரேஷன் அட்டையில் திருத்தம் செய்யணுமா? செம சான்ஸ்.. இன்னைக்கு மிஸ் பண்ணாதீங்க! -
4 மணி நேர மின்வெட்டு.. சென்னை ஆவடியில் கொந்தளித்த மக்கள்! சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு! -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்!












Click it and Unblock the Notifications