ஆங்காங்கே முளைத்த சாமியானா பந்தல்.. சென்னையில் பல இடங்களில் பேருந்து நிறுத்தங்கள் மாற்றம்.. ஏன்?
சென்னை: சென்னையில் பல்வேறு இடங்களில் பேருந்து நிறுத்தங்கள் தற்காலிகமாக மாற்றப்பட்டு உள்ளன. சாமியானா பந்தல் போடப்பட்டு தற்காலிகமாக நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
சென்னையில் 2ம் கட்ட மெட்ரோ 3 வழித்தடங்களில் கொண்டு வரப்பட உள்ளது. 118.9 கிமீ தூரத்திற்கு இந்த மெட்ரோ பாதை கொண்டு வரப்பட உள்ளது. முதல் கட்டத்திற்கு ஆலந்தூர் எப்படி மையமாக இருந்ததோ இரண்டாம் கட்டத்திற்கு ஓஎம்ஆர் மையமாக இருக்கும். இந்த நிலையில்தான் ஓஎம்ஆர் சாலையில் அமைக்கப்படும் மெட்ரோ 2 பணிகள் முடிந்து 2027ல் இங்கே போக்குவரத்து தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. 2027க்குள் சிறுசேரி முதல் பெருங்குடியில் உள்ள நேரு நகர் வரை மெட்ரோ இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இதில் 20-கிமீ நீளம் கொண்ட மாதவரம் முதல் சிப்காட் வரை - 45.4 கிமீ பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. இங்கு நேரு நகர், கந்தஞ்சாவடி, பெருங்குடி, தொரைப்பாக்கம், மேட்டுக்குப்பம், பிடிசி காலனி, ஒக்கியம்பேட்டை, காரப்பாக்கம், ஒக்கியம் தொரைப்பாக்கம், சோழிங்கநல்லூர், சோழிங்கநல்லூர் ஏரி I மெட்ரோ, சோழிங்கநல்லூர் ஏரி II மெட்ரோ, செம்மஞ்சேரி 1 மெட்ரோ, செம்மஞ்சேரி 2 மெட்ரோ, காந்தி நகர், நாவலூர் மெட்ரோ, சிறுசேரி, சிறுசேரி SIPCOT I மெட்ரோ மற்றும் சிறுசேரி SIPCOT II மெட்ரோ ஆகிய நிலையங்கள் இந்த பாதையில் அமைக்கப்படும். மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 44.6 கிமீ நீளம் (காரிடார் 5) மற்றும் லைட் ஹவுஸ்-பூந்தமல்லி வரையிலான 26.1 கிமீ ஆகியவை இரண்டாம் கட்ட திட்டத்தில் உள்ள மற்ற இரண்டு வழித்தடங்களாகும்.
இந்த மெட்ரோ வழித்தடம் காரணமாக பல்வேறு இடங்களில் பேருந்து நிலையங்கள் இடிக்கப்பட உள்ளன. மெட்ரோ நிறுத்தங்களுக்கு அருகே இந்த பேருந்து நிறுத்தங்கள் மாற்றப்பட உள்ளன. இதற்காக தற்போது உள்ள பேருந்து நிறுத்தங்கள் மூடப்பட்டு உள்ளன. சென்னையில் பல்வேறு இடங்களில் பேருந்து நிறுத்தங்கள் தற்காலிகமாக மாற்றப்பட்டு உள்ளன. சாமியானா பந்தல் போடப்பட்டு தற்காலிகமாக நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
கேள்வி: இதற்கு இடையே சென்னை பூந்தமல்லி - போரூர் இடையிலான மெட்ரோ பணிகள் மெதுவாக நடந்து வருகின்றன. இதையடுத்து மெட்ரோ நிர்வாகம் அது தொடர்பாக ஒப்பந்ததாரர்களிடம் கேள்வி எழுப்பி உள்ளது.
இதில் மாதவரம் மற்றும் தரமணி இடையே பாதை அண்டர் கிரவுண்ட் பாதையாகவும், சிறுசேரியில் உள்ள சிப்காட்டின் கடைசி நிலையம் வரை மேலே பாலம் அமைக்கப்பட்ட உயரமான பாதையாகவும் இருக்கும். அண்டர் கிரவுண்ட் பாதை அமைக்க அதிக நேரம் எடுக்கும். இன்னொரு பக்கம் மேலே பாலம் அமைக்கும் பணிகள் வேகமாக முடியும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
புதிய நிலையங்கள்: இந்த நிலையில் சென்னையில் மெட்ரோ ரயில் வழித்தடம் 3ல் புதிய ரயில் நிலையங்கள் அமைக்க ரூ.4,058.20 கோடியில் 3 ஒப்பந்தங்கள் கையெழுத்து போடப்பட்டு உள்ளது. புதிய மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்க ரயில் விகாஸ் நிகாம் நிறுவனத்துடன் மெட்ரோ ரயில் நிர்வாகம் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது.
தாம்பரம்: தாம்பரத்திலிருந்து வேளச்சேரி வரை மெட்ரோவில் பயணம் மேற்கொள்வது விரைவில் சாத்தியம் ஆக போகிறது மக்களே. ஆம் இது விரைவில் நிஜமாகலாம்.
சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் நேற்று SYSTRA MVA என்ற நிறுவனத்துடன் இணைந்து தாம்பரத்தில் இருந்து வேளச்சேரி வரையிலான 24 கிமீ மாஸ் ரேபிட் டிரான்ஸ்போர்ட் சிஸ்டத்தை கிண்டி அல்லது லிட்டில் மவுண்ட் வரை நீட்டிக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இதற்கான ஆய்வுகள் நடக்க உள்ளது. அதாவது மெட்ரோவை இது வரை நீடிக்கும் 24 கிமீ தூரத்திற்கான ஏற்பாடுகள் நடக்க உள்ளன.












Click it and Unblock the Notifications