கால் பாய் சர்வீஸ்.. ஒரு இரவுக்கு 5000! நம்பிப் போன இளைஞருக்கு காத்திருந்த ட்விஸ்ட்! ஆப் மூலம் ஆப்பு!
சென்னை: பெண்களுடன் தனிமையில் உல்லாசமாக இருக்கலாம் எனவும், அதற்கு 5000 ரூபாய் சம்பளமாக வழங்கப்படும் என டெலிகிராம் ஆப் மூலம் சென்னைக்கு வேலை தேடி வந்த இளைஞரை ஏமாற்றி உள்ளது ஒரு மோசடி கும்பல். ஐயாயிரம் ரூபாய் பணத்துக்கு ஆசைப்பட்டு ஆயிரக்கணக்கில் பணத்தை இழந்த இளைஞர் ஆவடி காவல் ஆணையாகத்தில் சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் தெரிவித்திருக்கிறார்.
தொழில்நுட்பம் வளர்ந்து விட்ட நிலையில் மோசடிகள் சம்பவங்களும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சபல பேர்வழிகளை குறிவைத்து டேட்டிங் ஆட்கள் மூலம் ஆயிரக்கணக்கில் பணம் மோசடி செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் கால் பாய் மோசடி தற்போது சென்னையில் மீண்டும் அரங்கேற ஆரம்பித்திருக்கிறது.
தென் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் வேலை தேடி சென்னைக்கு வந்திருக்கிறார். அம்பத்தூர் அருகே அயப்பாக்கம் பகுதியில் தங்கியிருந்து வேலை தேடி வந்ததாக கூறப்படுகிறது. சமூக வலைதளங்களில் பகுதி நேர வேலை கிடைக்குமா என அவர் தேடி இருக்கிறார்.

டெலிகிராம் மோசடி
அப்போது டெலிகிராம் அப்ளிகேஷன் மூலம் கால் பாய் வேலை இருக்கிறது. ஒரு பெண்ணுடன் உல்லாசமாக இருந்தால் 5 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்படும் என ஒருவர் மெசேஜ் அனுப்பி இருக்கிறார். வறுமையோடு சபலமும் சேர்ந்து கொள்ள குறிப்பிட்ட எண்ணை தொடர்பு கொண்டிருக்கிறார் அந்த இளைஞர். இனிமேல் உங்கள் வாழ்க்கையில் கஷ்டமே கிடையாது.. கால் பாய் வேலை இருக்கிறது. ஒரு பெண் கஸ்டமரை அட்டென்ட் செய்தால் 5 ஆயிரம் ரூபாயை அவர்களே உங்களுக்கு தருவார்கள் எனக்கூறி இருக்கிறார்கள்.
கால் பாய் மோசடி
இதனால் மகிழ்ச்சி அடைந்த அந்த இளைஞன் ஒரு நாளைக்கு இரண்டு பெண்களிடம் சென்றால் கூட பத்தாயிரம் ரூபாய் கிடைக்குமே என ஆசைப்பட்டு சரி நான் வருகிறேன் என கூறியிருக்கிறார். அதற்கு முதலில் ரெஜிஸ்ட்ரேஷன் செய்ய வேண்டும். அதற்காக 500 ரூபாயை ஜிபேவில் அனுப்ப வேண்டும் எனக் கூறியிருக்கிறார்கள். அந்த பணத்தையும் அனுப்ப, ஒரு லொகேஷனை அனுப்பி அங்கே வாங்க என சொல்லி இருக்கிறார். அங்கே சென்றதும் இன்னொரு 500 ரூபாய் ஜிபி செய்தால் கஸ்டமர் இருக்கும் லொகேஷன் உங்களுக்கு அனுப்பப்படும் என எனக் கூறியுள்ளார்.
ஒரு இரவுக்கு 5000
குறிப்பிட்ட லொகேஷனுக்கு சென்றதும் 500 ரூபாயை அனுப்பிய நிலையில், கஸ்டமர் என ஒரு பெண்ணின் நம்பர் வந்திருக்கிறது. அந்த எண்ணுக்கு தொடர்பு கொண்ட போது சினுங்கல் குரலில் பேசி இருக்கிறார் அந்த பெண். அப்போது தொலைபேசி இணைப்பு திடீரென துண்டிக்கப்பட்டு இருக்கிறது. மீண்டும் தொடர்பு கொண்ட அந்த கும்பல் அந்தப் பெண்ணுக்கு உங்கள் மீது நம்பிக்கை இல்லை இருந்த போதும் நாங்கள்தான் பேசி சரி செய்து வைத்திருக்கிறோம். உங்கள் மீது நம்பிக்கை வர வேண்டும் என்றால் ஒரு ஆயிரம் ரூபாயை அனுப்பி வையுங்கள் எனக் கூறியிருக்கிறார்.
ஜிபேயில் பணம்
இதை நம்பி அவர் ஆயிரம் ரூபாயை அனுப்பி உள்ளார். தொடர்ந்து ஒரு இளம் பெண்ணின் புகைப்படத்தை அனுப்பி இந்த பெண்தான் உங்களுடன் தங்கப் போகிறவர் என பேசிப் பேசியே 11,500 வரை வாங்கி இருக்கின்றனர். தொடர்ந்து அம்பத்தூர் பெட்ரோல் பங்க் அருகே அந்த இளைஞரை வரவழைத்த அவர்கள் மீண்டும் மீண்டும் பணம் கேட்டுக் கொண்டே இருந்திருக்கின்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த இளைஞர் பெண் கஸ்டமர் இன் லொகேஷனை கேட்க, குறிப்பிட்ட நபரின் செல்போனில் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டது.
சைபர் கிரைம்
தொடர்ந்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த இளைஞர் ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் தெரிவித்திருக்கிறார். வறுமைக்காக வேலை தேடி வந்த இளைஞரின் சபலத்தை பயன்படுத்தி மோசடி செய்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். அதே நேரத்தில் உழைத்துச் சாப்பிடாமல் ஓசியில் பணம் கிடைக்கும் என நினைப்பவர்களுக்கு இது ஒரு பாடம் என கூறும் சமூக ஆர்வலர்கள், மோசடி கும்பல்கள் எந்த அளவு ஆபத்தானவர்களோ அதே போல சபல டேட்டிங் ஆப்புகள் மூலம் ஏமாறுபவர்களும் குற்றவாளிகளே என்கின்றனர்.












Click it and Unblock the Notifications