மத்திய சென்னை தொகுதி களம்: 4-வது முறையாக வென்று புதிய சரித்திரம் எழுதுவாரா திமுகவின் தயாநிதி மாறன்?
சென்னை: மத்திய சென்னை லோக்சபா தொகுதியானது திமுகவின் கோட்டைகளில் ஒன்று. இத்தொகுதியில் 4 முறை போட்டியிட்டு 3 முறை வென்ற திமுகவின் தயாநிதி மாறன் 5-வது முறையாக இம்முறையும் களம் காண்கிறார். அதேநேரத்தில் தயாநிதி மாறனுக்கு கடும் போட்டியை உருவாக்க கூடிய வகையில் பாஜகவும் நேரடியாக மோதுகிறது.
மத்திய சென்னை லோக்சபா தொகுதிக்குட்பட்ட சட்டசபை தொகுதிகள்: வில்லிவாக்கம், எழும்பூர் (தனி), துறைமுகம், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்கு, அண்ணா நகர். 2021 சட்டசபை தேர்தலில் இந்த 6 தொகுதிகளிலுமே திமுகதான் வென்றது.

மத்திய சென்னை வாக்காளர்கள்: 13,43,167 ; ஆண்கள்: 6,64,076, பெண்கள்: 6,78,658; 3-ம் பாலினத்தவர் 433.
மத்திய சென்னை தொகுதி வரலாறு: மத்திய சென்னை தொகுதி தேர்தல்களில் திமுகதான் அதிக முறை வென்றிருக்கிறது. அதாவது 7 முறை திமுக, 2 முறை காங்கிரஸ், ஒரே ஒரு அதிமுக, ஜனதா கட்சி வென்ற தொகுதி மத்திய சென்னை.
திமுகவின் முதுபெரும் தலைவர்கள் கலாநிதி, முரசொலி மாறன், காங்கிரஸ் மூத்த தலைவர் இரா. அன்பரசு ஆகியோர் வென்ற தொகுதி. 1996, 1998, 1999 ஆகிய 3 தேர்தல்களில் அடுத்தடுத்து ஹாட்ரிக் வெற்றி பெற்றவர் முரசொலி மாறன். அவரது மகன் தயாநிதி மாறன் 2004, 2009 தேர்தல்களில் வென்றார். ஆனால் 2014 தேர்தலில் தயாநிதி மாறன் தோல்வியடைந்தார். 2019-ல் தயாநிதி மாறன் மீண்டும் வென்றதுடன் இம்முறையும் களம் காண்கிறார்.
மத்திய சென்னை பிரச்சனைகள்: நாட்டின் அடையாளங்களில் முக்கியமான ஒன்று சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் . ஆனால் இன்னமும் அடிப்படை வசதிகளுக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் ஏங்கித்தான் கிடக்கிறது. அதேபோல தென் தமிழ்நாட்டி மக்களின் மிக முக்கியமான எழும்பூர் ரயில் நிலையம் மேம்படுத்தப்பட வேண்டும். மத்திய சென்னையின் பிரதான பிரச்சனையே போக்குவரத்து நெரிசல்தான். பயன்பாட்டுக்கு வராத வில்லிவாக்கம் கண்ணாடி நடை பாலம், எப்போது பாண்டிபஜார் போல அகலமாக மாறுவோம் என காத்திருக்கும் பாரிமுனை, பூக்கடை பகுதிகள்.. என பட்டியலிட்டு சொல்ல ஏராளம் மத்திய சென்னையில் இருக்கின்றன.
2004-ம் ஆண்டு லோக்சபா தேர்தல் முடிவுகள்
தயாநிதி மாறன் (திமுக) - 3,16,329
பாலகங்கா (அதிமுக) - 1,82,151
2009-ம் ஆண்டு தேர்தல் முடிவுகள்
தயாநிதி மாறன்( திமுக) 2,85,783
முகமது அலி ஜின்னா (அதிமுக)2,52,329
இராமகிருட்டிணன்(தேமுதிக)38,959
ஹைதர்அலி (மனிதநேய மக்கள் கட்சி) 13,160
2014-ம் ஆண்டு லோக்சபா தேர்தல் முடிவுகள்
விஜயகுமார்(அதிமுக) 3,33,296
தயாநிதிமாறன்(திமுக) 2,87,455
ரவீந்திரன்(தே.மு.தி.க)1,14,798
மெய்யப்பன்(காங்) 25,981
ஜெ. பிரபாகர் (ஆம் ஆத்மி)19,553
2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தல் முடிவுகள்
தயாநிதி மாறன்(திமுக) 4,48,911
சாம்பவுல்(பாமக) 1,47,391
கமீலா நாசர் (மக்கள் நீதி மய்யம்) 92,249
கார்த்திகேயன்(நாம் தமிழர் கட்சி) 30,886
2024-ம் ஆண்டு களம் காண்பவர்கள்
தயாநிதி மாறன் (திமுக)
பார்த்தசாரதி(தேமுதிக)
வினோஜ் செல்வம்பாஜக)
டாக்டர் கார்த்திகேயன் (நாம் தமிழர் கட்சி
மத்திய சென்னை களம் எப்படி இருக்கு? 2 முறை வென்ற திமுகவின் தயாநிதி மாறனை 2014-ல் தோற்கடித்த மத்திய சென்னைதான் 2019-ல் சுமார் 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அவரை வெற்றியும் பெற வைத்தது. பாஜகவின் வேட்பாளராக வினோஜ் செல்வம் போட்டியிடுகிறார். அதிமுக அணியில் தேமுதிகவின் பார்த்தசாரதி களம் காண்கிறார். நாம் தமிழர் கட்சி வேட்பாளராக மீண்டும் டாக்டர் கார்த்திகேயன் போட்டியிடுகிறார். மத்திய சென்னையில் திமுகவுக்கான அபரிதமான செல்வாக்கை கடந்த தேர்தல்கள் வெளிப்படுத்தி இருக்கின்றன. இம்முறை அதிமுக, பாமக போன்ற கட்சிகள் போட்டியிடாமல் பாஜக, தேமுதிக களம் காண்பதும் திமுக வெற்றியை பறிக்க எளிதாக இருக்கும் என்கின்றனர் தொகுதிவாசிகள்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications