சென்னை சென்ட்ரலை இனி அண்ணாந்து பார்ப்பீங்க.. வருகிறது பிரம்மாண்ட ப்ராஜெக்ட்.. தீவிரமடைந்த பணிகள்
சென்னை: சென்னை நகரின் அடையாளமாக அமையவுள்ள புதிய மத்திய சத்துக்கு கோபுர (New Central Squre Tower) திட்டத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த அடிக்கல் நாட்டினார். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே உள்ள மத்திய சதுக்கத்தின் இந்த பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. தற்போது வரியா குறிப்பிட்ட அளவு கட்டுமானம் நிறைவு பெற்றுள்ளது.
27 மாடிகள் கொண்ட இந்த வணிக வளாகம், ரூபாய் 350 கோடி மதிப்பில் கட்டப்பட உள்ளது. சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL) மற்றும் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (TIDCO) இணைந்து உருவாக்கியுள்ள சென்னை மெட்ரோ சொத்து மேலாண்மை நிறுவனம் இதை செயல்படுத்தும்.

சென்னை சென்ட்ரல் ஸ்கொயர்
14,280 சதுர மீட்டர் பரப்பளவில் அமையவுள்ள இந்த 120 மீட்டர் உயர கோபுரம், நவீன சில்லறை வணிகம், அலுவலகங்கள் மற்றும் வணிக இடங்களின் கலவையாக இருக்கும். தரைத்தளம் முதல் நான்காம் தளம் வரை சில்லறை மற்றும் வணிகக் கடைகள் அமையும்.
5 முதல் 24-ஆம் தளங்கள் அலுவலக இடங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. 25-வது தளம் சேவை வசதிகளுக்காகவும், மேல் இரண்டு தளங்கள் பிரீமியம் வணிக இடங்களாகவும் செயல்படும். நான்கு அடுக்கு அடித்தளத்தில் வாகன நிறுத்தம் மற்றும் பிற வசதிகள் இருக்கும்.
சென்னை சென்ட்ரல் ஸ்கொயர்: எப்போது பணிகள் முடியும்?
கடந்த பிப்ரவரி மாதம் இதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. அடிக்கல் நாட்டு விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, தலைமைச் செயலாளர் என். முருகானந்தம், சென்னை மெட்ரோ ரயில் நிர்வாக இயக்குநர் எம்.ஏ. சித்திக் உள்ளிட்ட முக்கிய அரசு அதிகாரிகள் பங்கேற்றனர். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே உள்ள மத்திய சதுக்கத்தின் இந்த பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. தற்போது வரியா குறிப்பிட்ட அளவு கட்டுமானம் நிறைவு பெற்றுள்ளது.
மத்திய கோபுரம் சென்னையின் பொருளாதார வளர்ச்சிக்கு உந்துசக்தியாகவும், நகரத்தின் கவர்ச்சியை மேம்படுத்தும் ஒரு முக்கிய வணிக மையமாகவும் மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது நகரின் முக்கிய போக்குவரத்து மையமான மத்திய சதுக்கத்தில் அமைந்துள்ளது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், புறநகர் சென்ட்ரல் ரயில் முனையம், பார்க் ரயில் நிலையம், பார்க் டவுன் ரயில் நிலையம் (MRTS), சென்னை மெட்ரோ நிலையம், ரிப்பன் கட்டிடங்கள் மற்றும் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை போன்ற போக்குவரத்து மையங்களை இணைக்கிறது.
Status of the Chennai Central Square Tower... #Chennai #Projects 🏗️🌇
— Chennai Updates (@UpdatesChennai) November 9, 2025
P.C : Nambi Vallavan (YT) pic.twitter.com/g6OxDCwltN
தினசரி 5,00,000 பாதசாரிகளுக்கு சேவை செய்யும் சென்னை சென்ட்ரல், ஆறு ரயில் வழித்தடங்களின் சந்திப்பில் அமைந்துள்ளது. இதில் ஒரு MRTS, மூன்று புறநகர் மற்றும் இரண்டு மெட்ரோ ரயில் வழித்தடங்கள் அடங்கும்.
மத்திய சதுக்கத் திட்டம் செப்டம்பர் 2015-ல் முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதாவால் முன்மொழியப்பட்டது. இருப்பினும், கடலோர மண்டல அனுமதி மற்றும் வடிவமைப்பு மாற்றங்கள் காரணமாக திட்டம் தாமதமானது குறிப்பிடத்தக்கது. அடுத்த வருடம் இறுதிக்குள் கட்டுமானம் முடிந்து கட்டிடம் முழுமையாக திறக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
சென்னை மெரினாவிற்கு வரும் ‘ரோப் கார்'.. இனி வானில் பறந்து கொண்டே பீச்சை ரசிக்கலாம்.. குட்நியூஸ் -
விஜய் அதிரடி உத்தரவு.. சென்னை அடையாளம் தெரியாத அளவுக்கு மாறப்போகுது.. 3வது மாஸ்டர் பிளான்! -
சென்னை வாடகைதாரர்கள் கவனத்திற்கு! 2026 புதிய வாடகை சட்டத்தில் மாற போகும் அந்த 5 முக்கிய விதிகள் என்ன -
பொதுப்பணித்துறை டெண்டர்களில்.. இனி முறைகேடு நடக்காது! தமிழ்நாடு அரசு எடுத்த அதிரடி மாற்றம்! -
சென்னை அம்பத்தூரில் பரபரப்பு.. 2 சிறுமிகள் கடத்தப்பட்ட வழக்கில் வாலிபர்கள் இருவர் அதிரடி கைது -
அதிகரிக்கும் பாலியல் வன்கொடுமை! கொஞ்சம் கூட பொறுப்பே இல்லையே! லதா ரஜினிகாந்த் வேதனை! -
சென்னை டாஸ்மாக் கடையில் ‘ஏ.ஐ.’ மேஜிக்! குப்பையாகும் பாட்டில்களை கொடுத்தால் கொட்டும் சில்லறை! -
எழும்பூர் டாஸ்மாக் கடையில் பாட்டிலுக்கு 10 ரூபாய் தரும் இயந்திரம்.. எப்படி வேலை செய்கிறது? -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு












Click it and Unblock the Notifications