சென்னையில் இருந்து திருப்பதி போக பிளான் பண்றீங்களா.. தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பை உடனே பாருங்க
சென்னை: பெங்களூர்- ஜோலார்பேட்டை வழித்தடத்தில் பராமரிப்பு பணி மற்றும் என்ஜினீயரிங் வேலை நடைபெற இருப்பதால், சென்னை சென்ட்ரல் - திருப்பதி, பெங்களூர், மைசூர் ரயில் சேவைகள் குறிப்பிட்ட சில நாட்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னையில் இருந்து ஏராளமான பெருமாள் பக்தர்கள் திருப்பதிக்கு ரயிலில் சென்று வருவது வழக்கம்.. அவர்கள் கீழ்கண்ட நாட்களில் திருப்பதி செல்வதாக இருந்தால் மாற்றிக்கொள்ளலாம். ஏனெனில் திருப்பதி செல்லும் ரயில்கள் பிப்ரவரி 27, 28 மற்றும் மார்ச் 12, 13 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது.

பெங்களூரு - ஜோலார்பேட்டை வழித்தடத்தில் பராமரிப்பு பணி மற்றும் என்ஜினீயரிங் வேலை நடைபெற இருப்பதால் திருப்பதி எக்ஸ்பிரஸ் மற்றும் மைசூர் எக்ஸ்பிரஸ் , பெங்களூர் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட சில எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியுள்ளதாவது: திருப்பதியிலிருந்து காலை 6.25 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்ட்ரல் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்.16204) வரும் 27, 28 மற்றும் மார்ச் 12, 13 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கமாக, சென்னை சென்ட்ரலில் இருந்து மாலை 4.35 மணிக்கு புறப்பட்டு திருப்பதி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (16203) வரும் 27, 28 மற்றும் மார்ச் 12, 13 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது.
இதேபோல் சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 9.15 மணிக்கு புறப்பட்டு மைசூரு செல்லும் காவேரி எக்ஸ்பிரஸ் ரயில் (16021) வரும் பிப்ரவரி 26, 27 மற்றும் மார்ச் 11, 12 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கமாக, மைசூரில் இருந்து இரவு 9 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்ட்ரல் செல்லும் காவேரி எக்ஸ்பிரஸ் ரயில் (16022) வரும் 27, 28 மற்றும் மார்ச் 12, 13 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது.
இதேபோல, பெங்களூருவில் இருந்து இரவு 10.40 மணிக்கு புறப்பட்டு சென்னைசென்ட்ரல் செல்லும் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில் (12658) வரும் பிப்ரவரி 26, 27 மற்றும் மார்ச் 11, 12 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கமாக, சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 10.50 மணிக்கு புறப்பட்டு பெங்களூரு செல்லும் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில் வரும் பிப்ரவரி 27, 28 மற்றும் மார்ச் 12, 13 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது" இவ்வாறு தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications