சென்னை சென்ட்ரல்- திருப்பதி இடையே வந்தே பாரத் ரயில் எப்போது தொடக்கம்.. முழு விவரம் இதோ!
சென்னை: சென்னை சென்ட்ரல்- திருப்பதி இடையே வந்தே பாரத் ரயில் சேவை தொடங்க திட்டமிட்டுள்ளது. இதன் சிறப்புகள் என்ன என்பதை பார்க்கலாம்.
சென்னை ஐசிஎஃப் எனும் ரயில் பெட்டி தொழிற்சாலை உள்ளது. இந்த லோகோவில் வந்தே பாரத் ரயில் தயாரிக்கப்படுகிறது. இதுவரை 25 வந்தே பாரத் ரயில்கள் தயாரித்து வழங்கப்பட்டுள்ளது.

வந்தே பாரத் ரயிலின் சேவை டெல்லி- வாரணாசி இடையே கடந்த 2019ஆம் ஆண்டு பிப்ரவரி 15 இல் தொடங்கியது. இதைத் தொடர்ந்து ஐசிஎப்பில் தயாரிக்கப்பட்ட 23 வந்தே பாரத் ரயில்கள், பல்வேறு வழித்தடங்களில் தினமும் 46 சர்வீஸ்களாக இயக்கப்படுகிறது.
தமிழகத்தில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து மைசூரு, கோவை இடையே தலா ஒரு வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது. இது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. சென்னை எழும்பூர்- நெல்லை இடையேயும் சென்னை சென்ட்ரல் - திருப்பதி இடையேயும் தலா ஒரு வந்தே பாரத் ரயிலை இயக்க வேண்டும் என பயணிகளால் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
வந்தே பாரத் வகை ரயில்களுக்கு பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. ஆகஸ்ட் மாதம் இறுதிக்குள் 75 வந்தே பாரத் ரயில்களை தயாரித்து இயக்க ரயில்வே திட்டமிட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி கடந்த 27 ஆம் தேதி ஒரே நேரத்தில் பல்வேறு வழித்தடங்களில் 5 வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்தார்.
தற்போது 24 மாநிலங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. சென்னை சென்ட்ரல்- திருப்பதி வழித்தடத்தில் வந்தே பாரத் ரயில் இயக்க தேவை உள்ளது. இதற்காக வந்தே பாரத் ரயில் இயக்க வாரியத்திடம் பரிந்துரைக்கப்பட்டது. இந்த வழித்தடத்தில் அதிகபட்சமாக 130 கி.மீ. வேகத்தில் செல்ல ரயில் பாதைகள் தயாராக உள்ளது. ஆனால் இதுவரை ரயிலை இயக்க அனுமதி கொடுக்கப்படவில்லை. எனினும் இந்த ரயில் ஜூலை மாதம் முடிவதற்குள் இயக்கப்படும் என தெரிகிறது.
ரயில்வே வாரியம் ஒப்புதல் கிடைத்த பிறகு சென்னை- திருப்பதி வந்தே பாரத் ரயிலுக்கான கால அட்டவணை, கட்டணம், பயண நேரம் உள்ளிட்ட விவரங்கள் அறிவிக்கப்படும் என ரயில் நிர்வாகம் தரப்பில் இருந்து கூறப்படுகிறது. வந்தே பாரத்தில் ஏசி எக்ஸிகூட்டிவ் சேர் கார், ஏசி எக்கனாமி சேர் கார் ஆகிய இரு வகுப்புகள் உள்ளன.
இந்த ரயில்கள் மணிக்கு 180 கி.மீ. வேகத்தில் செல்லும். இதில் சென்றால் பயண நேரம் மிச்சாகும். பாதுகாப்பு அம்சங்களும் அதிகம். ஜிபிஎஸ் டிராக்கிங், கேமரா, ஒலிபெருக்கி மூலம் அடுத்தடுத்த நிறுத்தங்கள் குறித்த அறிவிப்பு, உணவு உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. இந்த ரயில்கள் பயண நேரத்தை 25 சதவீதம் முதல் 45 சதவீதம் வரை குறைக்கின்றன. ஆகஸ்ட் மாதம் இறுதியில் 75 வந்தே பாரத் ரயில்களை தயாரிக்கவும் இயக்கவும் ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
-
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான்












Click it and Unblock the Notifications