சென்னையில் மின்சார ரயிலில் செல்வோர் கவனத்துக்கு.. இன்று முதல் 5 நாட்கள் ரயில்சேவைகள் மாற்றம்
சென்னை: சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரியில் ரயில்வே தண்டாவளத்தில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் இன்று முதல் 5 நாட்களுக்கு அதாவது நவம்பா் 11-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதன்படி சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையே இரவு 8.01, 9.18 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் தாம்பரம்-செங்கல்பட்டு இடையே ரத்து செய்யப்படுகிறது.
இந்த ரயில்கள் கடற்கரை-தாம்பரம் வரை மட்டும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இரவு ரயில்கள்
அதேபோல் மறுமார்க்கமாக செங்கல்பட்டு-சென்னை கடற்கரை: இரவு 10.15, 11.10 மணிக்குச் செல்லும் ரயில்கள் செங்கல்பட்டிலிருந்து இயங்காது என்றும் தாம்பரத்திலிருந்து புறப்பட்டு கடற்கரை செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகாலை ரயில்கள்
இதேபோல் சென்னை கடற்கரையில் செங்கல்பட்டுக்கு அதிகாலை 3.55, 4.35, 5.15, 5.50, காலை 6.05, 6.43 மாலை 5.18, இரவு 8.01, 9.18 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் ரயில்கள் தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அதிகாலை ரயில்கள்
இதேபோல் சென்னை கடற்கரையில் செங்கல்பட்டுக்கு அதிகாலை 3.55, 4.35, 5.15, 5.50, காலை 6.05, 6.43 மாலை 5.18, இரவு 8.01, 9.18 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் ரயில்கள் தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தாம்பரத்தில் இருந்து
இதேபோல் செங்கல்பட்டு-சென்னை கடற்கரை இடையே அதிகாலை 3.55, 4.35, 4.50, காலை 6.40, 6.55, இரவு 7.25, 10.15, 11.10 ஆகிய நேரங்களில் இயக்கப்பட்டு வந்த ரயில்கள் செங்கல்பட்டிலிருந்து இயங்காது என்றும் தாம்பரத்தில் இருந்து தான் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

காலை 8.40 ரயில்
இதனிடையே செங்கல்பட்டு-சென்னை கடற்கரை இடையே காலை 8.40 மணிக்கு இயக்கப்படும் செமி பாஸ்ட் மின்சார ரயில் செங்கல்பட்டு -சென்னை கடற்கரை இடையே ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

5 நாட்கள் சேவை ரத்து
செங்கல்பட்டுக்கான இரவு மற்றும் அதிகாலை நேர ரயில் சேவைகள் ரத்து என்பது நவம்பர்11ம் தேதி இன்று தொடங்கி நவம்பர் 15ம் தேதி வரை 5நாட்கள் அமலில் இருக்கும். பாரமரிப்பு பணிமுடிந்ததும் 16ம் தேதி முதல் வழக்கமான ரயில்சேவை தொடங்கும் என தெற்கு ரயில்வே கூறியுள்ளது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications