44 சிகரெட்டுகளை பிடிப்பதற்கு இணையாக அதிகரித்த காற்று மாசு! சென்னை மக்களே உஷார்!
சென்னை: பழையன கழிதலும், புதிய புகுதலும்தான் போகியின் தத்துவம். பழையன கழிய வேண்டும் என்பதற்காக, பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்களை போட்டு எரித்ததால், சென்னையில் தற்போது கடும் புகை மூட்டம் ஏற்பட்டிருக்கிறது. சென்னையில் காற்று மாசு 952 என்கிற அளவில் அதிகரித்துள்ளது. இது 44 சிகரெட்டுகளை பிடிப்பதற்கு இணையாக காற்று மாசு என சூழலியலாளர்கள் எச்சரிக்கின்றனர்.
புகை மூட்டம் காரணமாக வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர். சுவாச பிரச்சனை உள்ளவர்கள், முதியவர்கள், குழந்தைகள் புகை மூட்டம் காரணமாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

காற்று மாசு
வழக்கமாக தீபாவளி அன்றுதான் இப்படியான புகை மூட்டம் உருவாகியிருக்கும். ஆனால், போகி திருநாளான இன்றும் இதேபோன்ற புகைமூட்டம் ஏற்பட்டிருக்கிறது. புகையில்லா போகியை கொண்டாட வேண்டும் என்று பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு இருந்தாலும், புகை மூட்டம் ஏற்பட்டிருப்பது சூழலியல் ஆர்வலர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் காற்று மாசு எப்படி இருக்கிறது?
பொதுவாக காற்று மாசு AQI எனப்படும் அளவீடுகளால் அளக்கப்படுகிறது. சென்னை முழுவதும், 15 இடங்களில் மாசு கட்டுப்பாட்டு வாரியம், காற்று மாசு அளவிடும் கருவிகளை பொருத்தியிருக்கிறது. இந்த கருவிகள் காற்றில் உள்ள தூசி மற்றும் PM2.5, PM10, NO2, SO2 போன்ற நச்சு வாயுக்கள் போன்றவற்றை அளவீடு செய்கிறது. இதன் அளவீடுகள் விரைவில் வெளியாகும்.
எச்சரிக்கை மக்களே
முன்னதாக சில தனியார் காற்று மாசு அளவீடு கருவிகள், சென்னையில் 952 வரை காற்று மாசு பதிவாகியிருப்பதாக தெரிவித்திருக்கிறது. காற்று மாசுபாட்டை பொறுத்தவரை,
0-50 நல்லது
51-100 திருப்திகரமானது
101-200 மிதமானது
201-300 மோசமானது
301-400 மிக மோசமானது
401-500 கடுமையானது
யாருக்கு பாதிப்பு?
என வரையறுக்கப்பட்டு இருக்கிறது. இதில் 0-50 என்கிற நிலையில் காற்று மாசு இருந்தால், பெரிய பாதிப்பு ஏதும் இருக்காது. 51-100 என்கிற அளவில் காற்று மாசு இருந்தால் சுவாச பிரச்சனை உள்ளவர்களுக்கு லேசான பாதிப்புகள் ஏற்படலாம். 101-200 எனில், நுரையீரல் பாதிப்பு, இதய பிரச்சனை உள்ளவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படும். 201-300 இந்த அளவுக்கு காற்று மாசு இருந்தால், எந்த பிரச்சனையும் இல்லாதவர்களாக இருந்தாலும் நீண்ட நேரம் வெளியில் இருந்தால் மூச்சு திணறல் ஏற்படும்.
கடும் எச்சரிக்கை
301-400 இந்த அளவுக்கு காற்று மாசு இருக்கிறது எனில், கடுமையான சுவாச நோய்கள் உண்டாகும். நீண்ட கால ஆரோக்கிய பாதிப்பு ஏற்படும். 401-500 இந்த நிலை என்பது, ஆரோக்கியமானவர்களையும் பாதிக்கும். இந்த நிலையில் காற்று மாசு இருக்கிறது எனில், கடும் எச்சரிக்கை கொடுக்கப்பட்டிருக்கிறது என்று அர்த்தம்.
44 சிகரெட்டுகள்
சிம்பிளாக சொல்வதெனில், காற்று மாசு 200க்கு மேல் சென்றால் வெளியில் சென்று உடற்பயிற்சி செய்வதை தவிர்க்க வேண்டும். அதுவே 300க்கு மேல் மாசு அதிகரித்தால், கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். அப்படியெனில் 952 என்கிற அளவில் காற்று மாசு இருக்கிறது எனில், இந்த நிலை மிகவும் ஆபத்தானதாகும். இந்த அளவு மாசுபட்ட காற்றை நீங்கள் 24 மணி நேரமும் சுவாசிக்கிறீர்கள் எனில், 40-44 சிகரெட்டுகளை பிடிப்பதற்கு சமமான பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது என சூழலியலாளர்கள் எச்சரிக்கின்றனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications