கிளாம்பாக்கத்தை மிஞ்சுதே.. அடியோடு கலர் மாறும் "வடசென்னை"..முத்து முத்தாக அறிவித்த தமிழக அரசு.. மாஸ்
சென்னை: வடசென்னையே உச்சக்கட்ட பூரிப்பில் உள்ளதாம்.. அப்படியென்ன மகிழ்ச்சி தகவலை சொன்னார் திமுக அமைச்சர் சேகர் பாபு தெரியுமா?
சென்னை மாநகர போக்குவரத்து கழகமும் (MTC), சென்னை பெருநகர வளர்ச்சி குழுமமும் (CMDA) சென்னைவாசிகளுக்கு, குறிப்பாக மாநகர பேருந்து போக்குவரத்தை சார்ந்திருக்கும் மக்களுக்கு ஒரு மகிழ்ச்சிகரமான செய்தியை அளித்திருக்கின்றன.

கிளாம்பாக்கம்: கிளாம்பாக்கத்தில் வடிகால் வசதி பணிகள் நடந்து கொண்டிருப்பதால், பஸ் ஸ்டாண்டு திறப்பது தள்ளிப்போயுள்ளது.. மற்றொருபக்கம், கிளாம்பாக்கத்தில் ரூ.20 கோடி செலவில் புதிய ரெயில் நிலையம் அமைக்கும் பணி தொடங்கப்போவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு நடுவில், பஸ் ஸ்டாண்டையும், ரயில்வே ஸ்டேஷனையும் இணைக்கும்படியான, 'ஸ்கைவாக்' தயாராக போவதாகவும் அதிகாரிகள் சொல்லி உள்ளனர். ஆக, இந்த மும்முனை பணிகள் தீவிரம் எடுத்து வரும்நிலையில், கிளாம்பாக்கம் பஸ் முனையம், உடனடியாக திறக்கப்பட வாய்ப்பில்லை என தெரிகிறது. அதேசமயம், பொதுமக்களுக்கு இந்த தாமதமானது ஏமாற்றமாகவும் இருந்துவருகிறது.
அவசரப்பட்டு பஸ் ஸ்டாண்டை திறந்துவைத்துவிட்டால், இதனால் பாதிக்கப்படுவது பொதுமக்கள்தான் என்பதால், அரசு இந்த விஷயத்தில் படுகவனத்துடன் செயல்பட்டுவருகிறது.
போக்குவரத்து முனையம்: எனினும், சென்னையிலுள்ள பல போக்குவரத்து முனையங்களின் தரம் மிகவும் விமர்சனத்துக்குரியது. காரணம், பஸ் டெர்மினஸ்களில் உள்ள தரைகள், மேற்கூரைகள், பெயர்ந்து வரும் டைல்ஸ்கள், குறைவான லைட் வசதி, படுமோசமான பாத்ரூம் வசதி, சிசிடிவி கேமராக்கள் இல்லாதது, பெண்களுக்கு போதிய பாதுகாப்பின்மை என பல்வேறு கட்டமைப்பு குறைபாடுகள் நீண்டகாலமாகவே நிலவிகொண்டு வருகிறது.
இந்த குறைகளை எல்லாம் போக்குவதற்காகவே, தமிழக அரசு அடுத்த அதிரடியை ஆரம்பித்துவிட்டது.. சென்னையின் பல்வேறு பகுதிகளில் உள்ள 6 பஸ் முனையங்களை, அனைத்துவிதமான வசதிகளுடன் தரமாக மேம்படுத்தி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு விரைவில் கொண்டுவர போகிறதாம் தமிழக போக்குவரத்துதுறை.
குறிப்பாக, திருவிக நகர், தண்டையார்பேட்டை, கண்ணதாசன் நகர், முல்லை நகர், பெரியார் நகர் மற்றும் அம்பத்தூர் எஸ்டேட் ஆகிய 6 இடங்களில், இந்த பேருந்து முனையங்கள் வரப்போகிறதாம். இதற்கு பிறகு, பிற முனையங்களிலும் எதிர்காலத்தில் கொண்டு வரப்படலாம் என்று தெரிகிறது.
தரமான மேற்கூரைகள்: தரமான மேற்கூரைகள், சூரிய ஒளி தகடுகள், மிகவும் தூய்மையான கழிப்பிட வசதி, அமர்ந்திருக்கும் வசதியுடன் காத்திருக்கும் அறைகள், சுத்தமான குடிநீர் வசதி, 24 மணி நேர கண்காணிப்பு கேமரா வசதி, அத்தியாவசிய பொருட்களை வாங்க கடைகள் உட்பட பல்வேறு வசதிகள் இந்த மேம்படுத்துதல் திட்டத்தின் கீழ் அமைக்கப்படும் என்று சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது.
அதுமட்டுமல்ல, திருவிக நகர் மற்றும் அம்பத்தூர் முனையங்களுக்கான ஒப்பந்த புள்ளிகள் ஏற்கெனவே கோரப்பட்டுள்ள நிலையில், இதற்காக வளர்ச்சி குழுமத்தால் தேர்வு செய்யப்பட்டுள்ள கட்டிடக்கலை வடிவமைப்பாளர்கள் தங்கள் வரைபட பணிகளையும் தயாரித்து முடித்துவிட்டார்களாம்.
அமைச்சர் சேகர் பாபு: முதல் கட்டமாக இந்த 2 முனையங்களும் 2024-ல் மக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளதாகவும், வட சென்னையின் வளர்ச்சிக்கான பல திட்டங்களில் ஒன்றாக இந்த பேருந்து முனையங்களை சீர்படுத்துதலும் அடங்கும் என்றும் அமைச்சர் சேகர்பாபு, பெருத்த நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பை கேட்டதுமே வடசென்னை மக்கள் படுகுஷியில் உள்ளார்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு












Click it and Unblock the Notifications