சென்னையில் “பயங்கரம்”.. காதலியை ரயிலில் தள்ளிவிட்ட காதலன்! கல்லூரி மாணவியின் தலை துண்டான கொடூரம்
சென்னை: பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவியை சக மாணவர் ஓடும் ரயில் முன் தள்ளிவிட்டதில் அவர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
சென்னை கிண்டியை அடுத்துள்ள ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சத்யா (20). இவர் தனியார் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வந்து இருக்கிறார். இந்த நிலையில் இவரும் ஆதம்பாக்கம் பகுதியை சேர்ந்த சதீஷ் (23) என்ற இளைஞரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இருவரும் இன்று வழக்கம்போல் சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் நின்று பேசிக்கொண்டு இருந்து உள்ளனர். அப்போது இருவருக்கும் திடீரென சண்டை ஏற்பட்டு வாக்குவாதம் முற்றியது. கோபத்தின் உச்சிக்கு சென்ற சதீஷ் (23) ரயில் முன்பு சத்யாவை தண்டவாளத்தில் தள்ளிவிட்டுள்ளார்.
அந்த சமயத்தில் பரங்கிமலை ரயில் நிலையத்திற்கு வந்த மின்சார ரயிலில் மோதிய சத்யா உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். ரயில் நிலையத்தில் காத்திருந்த ரயில் பயணிகள் இதனை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே போலீசார் உடலை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். கல்லூரி மாணவியை ரயில்முன் தள்ளிவிட்டு கொலை செய்த சதீஷ் அங்கிருந்து தப்பிச்சென்றார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சதீஷை தேடி வருகின்றனர்.
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
Rooster பொஷிஷனில் மனைவிக்கு ‘டார்ச்சர்'.. வீட்டுக்குள் சிறை வைத்து கணவர் செய்த வெறிச்செயல் -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?












Click it and Unblock the Notifications