சென்னை மதுரவாயல் கல்லூரி மாணவி.. வீட்டில் இருந்து 20 லட்சம் திருடி காதலனுக்கு தந்த காஸ்ட்லி கிப்ட்
சென்னை: சென்னை மதுரவாயலில் உள்ள பிரபல கல்லூரியில் பயிலும் மாணவி அதே கல்லூரியில் பயிலக்கூடிய மாணவரை காதலித்து வந்திருக்கிறார். கார் வாங்க வேண்டும் என காதலன் விருப்பம் தெரிவித்துள்ளார். இதனால் அந்த மாணவி, வீட்டில் இருந்து ரூ.20 லட்சத்தைத் திருடி தாராளமாக வழங்கினாராம். ஆனால் பணத்தை வாங்கிக் கொண்டு காதலன் 'கம்பி' நீட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து தந்தையுடன் சேர்ந்து மாணவி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
காதலி, காதலனுக்கு பரிசு தருவது என்பது புதிது அல்ல.. அதேபோல் காதலன் காதலிக்கு பரிசு தருவதும் புதியது அல்ல.. ஆனால் காதலனுக்கு காதலியும், காதலிக்கு காதலனும் வீட்டில் இருந்து திருடி காஸ்ட்லி கிப்ட் தருவார்கள்.. அப்படி தரும் கிப்ட்கள் பணமாக இருக்கலாம் பொருளாக இருக்கலாம்.. அதை வாங்கியவர் கம்பி நீட்டிவிட்டால், கடைசியில் காவல் நிலையத்தில் தான் புகார் அளிக்க வேண்டிய நிலை பெற்றோருக்கு ஏற்படுகிறது. 2 கே கிட்ஸ் காதல்களும் சரி, 2ஜென் கிட்ஸ் காதல்களும் சரி, காஸ்ட்லியான காதல்களாக இருக்கின்றன. இன்றைக்கு காதலை பள்ளி காதல், கல்லூரி காதல் என்று இரண்டு வகைப்படுத்தலாம்.

பள்ளி காதல்
பள்ளியில் 9வது, 10ம் வகுப்பு படிக்கும் போதே காதலிக்க தொடங்கி விடுகிறார்கள். சிலர் 11ம் வகுப்பிலும், சிலர் 12ம் வகுப்பிலும் காதல் வலையில் சிக்கிவிடுகிறார்கள். ஆனால் காதல் வலையில் சிக்காதவர்கள், கல்லூரி காலத்தில் சிக்கி கொள்கிறார்கள். அதிலும் சிக்காதவர்கள் வேலை செய்யும் இடத்தில் காதல் வலையில் விழுகிறார்கள். ஆண் அல்லது பெண் இருவருமே இந்த வலையில் விழுந்திருப்பார்கள்.
காதல் என்ற பெயரில் காஸ்ட்லி கிப்ட்
ஒட்டுமொத்தமாக பார்த்தால் காதல் வலையில் விழாதவர்கள் சொற்ப எண்ணில் தான் இருப்பார்கள். இதில் அறிய வேண்டிய முக்கியமான விஷயம், காதலில் தோற்றவர்கள், காதலை வேண்டாம் என்று பிரிந்தவர்கள் எண்ணிக்கை தான் மிகமிக அதிகமாக இருக்கும். இன்றைக்கு சில டீன்ஏஜ் பெண்கள், இனக்கவர்ச்சியை காதல் என்று தவறாக புரிந்து கொண்டு, காதலனுக்காக எதையும் செய்கிறார்கள். அப்படித்தான் ஒரு டீன் ஏஜ் மாணவி ஒருவர், கல்லூரியில் படித்த மாணவனுக்கு காதல் என்ற பெயரில் காஸ்ட்லி கிப்ட் தந்துள்ளார். அவர் கம்பி நீட்டிவிட்டார். அதுபற்றி பார்ப்போம்.
மதுரவாயல் கல்லூரி
சென்னை மதுரவாயலில் மிகப் பிரபலமான கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த கல்லூரியில் ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள் படிக்கிறார்கள். அங்கு படிக்கும் மாணவி அதே கல்லூரியில் பயிலக்கூடிய மாணவரை காதலித்து வந்திருக்கிறார். காதல் மிகுதியில் பரிசுகளை பரிமாறுவது இயல்பான ஒன்று. இந்நிலையில் கல்லூரி மாணவனான காதலன், கார் வாங்க வேண்டும் என காதலியான மாணவியிடம் விருப்பம் தெரிவித்துள்ளார்.
20 லட்சம் திருடினார்
இதனால் அந்த மாணவி, வீட்டில் இருந்து ரூ.20 லட்சத்தைத் திருடி தாராளமாக வழங்கினாராம். ஆனால் பணத்தை வாங்கிக் கொண்டு காதலன் 'கம்பி' நீட்டினாராம். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி, வீட்டில் உண்மையை சொல்லியிருக்கிறார். இறுதியில் தந்தையுடன் சேர்ந்து மாணவி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் மாணவ மாணவியரின் நலன் கருதி பெயர் விவரங்களை வெளியிடவில்லை.. விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நெட்டிசன்கள் கருத்து
இதுபற்றி ஊடகங்களில் செய்தி வெளியான நிலையில், நெட்டிசன்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். ஒரு நெட்டிசன் கூறுகையில், "இந்த சம்பவத்தை 30 வயசுல இதே பொண்ணு இதை நினைச்சு பாத்தா அவளுக்கு சிரிப்பு தான் வரும்.. பணம் சம்பாதிக்கிறது எவ்ளோ கஷ்டம் தெரியுமா? 20 வயசுல தான் ஒரு பொண்ணு அவளோட பெற்றோர் மேல எவ்ளோ லாயல் ஆக இருக்கான்னு தெரியும்" என்று கூறியுள்ளார். இன்னொரு நெட்டிசன் கூறுகையில், "காதலிக்கும் பெண்ணுக்கு கஷ்டப்பட்டு உழைத்து கார் வாங்குடானா.. காதலிக்கிற பெண்ணையே திருட வைக்கிறான். இதற்கு பெயர் காதல் இல்லடா களவுதனம்" இவ்வாறு கூறியுள்ளார்.
-
சர்க்கரை அட்டை உங்களிடம் இருக்கா? சென்னை மக்களுக்கு ஒரே நாளில் பெயர் மாற்றத் தீர்வு தரும் தமிழக அரசு -
4 மணி நேர மின்வெட்டு.. சென்னை ஆவடியில் கொந்தளித்த மக்கள்! சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு! -
வரலாறு படைக்கும் Zoho.. டேட்டா சென்டர்களுக்கு உதவ புது சர்வர் உருவாக்கிய சென்னை நிறுவனம்! -
பெங்களூருக்கு வேட்டு! இந்தியாவிலேயே அதிக சம்பள உயர்வு கிடைக்கும் நகரம் எது தெரியுமா? -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
இதுதான் மாற்றமா? சென்னை அரசு மருத்துவமனையில்.. இளம்பெண்ணுக்கு நடந்த சோகம்! மக்கள் ஷாக் -
சென்னை ஃபுல்லா மாறப் போகுது.. போக்குவரத்து நெரிசலுக்கு பெரும் தீர்வு! ஐடிஎஸ்-ஐ கையிலெடுத்த ஆபீசர்ஸ் -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி












Click it and Unblock the Notifications