குமரகுருபரன் ஐஏஎஸ் வந்த.. 10 நாளில் எதிர்பார்க்காத மாற்றம்.. அதுவும் இந்த அறிவிப்பு.. சென்னை ஹாப்பி!
சென்னை: சென்னை மாநகராட்சி ஆணையராக பொறுப்பேற்றுள்ள குமரகுருபரன் ஐஏஎஸ் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அந்த வகையில் அவர் தற்போது எடுத்துள்ள முக்கியமான நடவடிக்கை ஒன்று பெரிய அளவில் வரவேற்புகளை பெற்றுள்ளது.
அதன்படி சென்னையில் உள்ள பொது கழிப்பறைகள் அனைத்தையும் இனி தனியார் நிர்வகிக்க உள்ளனர். அனைத்து பொது மற்றும் சமூக கழிப்பறைகளை அவுட்சோர்ஸ் முறையில் பராமரிக்க சென்னை மாநகராட்சி ஒப்புதல் பெற்றுள்ளது. தற்போது சோதனை அடிப்படையில் 372 கழிப்பறைகளுக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது.

முதல் தொகுப்பில், 372 இடங்களில் கழிப்பறைகளின் வடிவமைப்பு மற்றும் அணுகல் வசதி மேம்படுத்தப்பட்டு, அக்டோபர் மாத இறுதிக்குள் திட்டம் முடிவடையும் என்று மாநகராட்சி ஆணையர் தெரிவித்தார்.
கிரேட்டர் சென்னை கார்ப்பரேஷன் (ஜிசிசி) அனைத்து பொது மற்றும் சமூக கழிப்பறைகளின் செயல்பாடு மற்றும் பராமரிப்பு (ஓ&எம்) அவுட்சோர்ஸ் செய்ய அரசாங்கத்தின் ஒப்புதலைப் பெற்றுள்ளது. ஜிசிசி கமிஷனர் ஜே.குமரகுருபரன் கூறுகையில், தற்போது 372 கழிவறைகள் சோதனை அடிப்படையில் டெண்டர் விடப்பட்டு வருகின்றன.
நகரம் முழுவதும் 853 இடங்களில் பொது கழிப்பறைகளை குடிமை அமைப்பு மேற்பார்வை செய்கிறது. முதல் தொகுப்பில், 372 இடங்களில் கழிப்பறைகளின் வடிவமைப்பு மற்றும் அணுகல் வசதி மேம்படுத்தப்படும், அக்டோபர் இறுதிக்குள் பணிகள், திட்டம் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கழிப்பறைகளை சுத்தமாக வைத்துக்கொள்வது, எல்லோரும் முறையாக பயன்படுத்தும் வகையில் வைத்துக்கொள்வது போன்ற விஷயங்களை மனதில் வைத்து தனியாரிடம் ஒப்படைக்க முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.
அதிரடி குமரகுருபரன்: சென்னை மாநகராட்சி ஆணையராக பொறுப்பேற்றுள்ள குமரகுருபரன் ஐஏஎஸ் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். முக்கியமாக வெறும் ஒரு வாரத்தில் சென்னையில் அதிரடி ஆக்சன்களை மேற்கொண்டு வருகிறார்.
நங்கநல்லூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மொத்தம் 9 கால்நடைகள் பிடிக்கப்பட்டு கிடங்கில் அடைக்கப்பட்டன. மேலும், பள்ளிக்கரணையில் இருந்து 2 மாடுகளை பிடித்து பறிமுதல் செய்தனர். சென்னை முழுவதும் கால்நடைகள் தேடி பிடிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படுகிறது.
அதோடு இல்லாமல் தற்போது சென்னையில் உள்ளே பெரும்பாலான பகுதிகளில் சுத்தம் செய்யும் பணிகளும் நடக்கின்றன. இரவு நேரத்தில் சென்னையை முழுக்க சுத்தம் செய்யும் பணிகள் ஒரு பக்கம் நடக்கின்றன. டன் கணக்கில் மணல் அள்ளப்படுகிறது. அதோடு இல்லாமல் சென்னையில் சாலை ஓரம் நிறுத்தப்பட்டு அப்படியே விடப்பட்ட வாகனங்கள் நீக்கப்படுகின்றன. வந்த ஒரு வாரத்தில் குமரகுருபரன் அதிரடியை காட்டி வருகிறார்.
அதிரடி காட்டும் குமரகுருபரன்: ஜே. குமரகுருபரன், ஐ.ஏ.எஸ்., நல்ல அனுபவம் கொண்டவர். 2004 ஆம் ஆண்டு அனுபவ இந்திய நிர்வாகப் பணியைச் சேர்ந்தவர். தமிழக அரசின் பல்வேறு முக்கிய பதவிகளில் 19 ஆண்டுகள் பணியாற்றியவர். 19 வருட ஆட்சியில் முதல் 4-5 வருடங்கள் திமுக ஆட்சிக்கு கீழ்தான் இவர் ட்ரெயினிங் எடுத்தார்.
அதன்பின் பல்வேறு துறைகளில் இவர் செயலாளர் பொறுப்புகளை வகித்து இருக்கிறார். இப்படிப்பட்ட நிலையில்தான் தற்போது சென்னை மாநகராட்சி ஆணையராக இவர் பதவி ஏற்றுள்ளார். ராதாகிருஷ்ணன் இந்த பதவியில் இருந்து இன்று மாறிய நிலையில் குமரகுருபரன் பதவி மாறி உள்ளார். இப்படி வரிசையாக சென்னை மாநகராட்சி ஆணையராக குமரகுருபரன் ஐஏஎஸ் பதவி ஏற்றுள்ள நிலையில் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.












Click it and Unblock the Notifications