"மேஜிக் நம்பர்".. 0.7 டிபிஆரை தொட்ட சென்னை.. கொரோனா தடுப்பில் அசாத்திய சாதனை.. எப்படி சாத்தியமானது?
சென்னை: சென்னையில் டிபிஆர் எனப்படும் கொரோனா பாசிட்டிவிட்டி சதவிகிதம் 0.7 என்ற அளவை எட்டியுள்ளது. சென்னை முதல்முறையாக இவ்வளவு குறைவான டிபிஆர் சதவிகிதத்தை எட்டியுள்ளது.
தமிழ்நாட்டில் ஏப்ரல் மாத இறுதியில் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வந்தது. முக்கியமாக சென்னையில் தினசரி கேஸ்கள் 7000 வரை தினமும் பதிவாகி வந்தது.
சென்னையில் மட்டும் பலி எண்ணிக்கை 100 வரை தினமும் பதிவாகி வந்தது. ஏப்ரல் - மே மாதங்களில் கொரோனா பரவிய வேகத்தை பார்த்த போது கண்டிப்பாக சென்னை மிகமோசமான நிலையை அடையும் என்றே எதிர்பார்க்கப்பட்டது.

சென்னை
முக்கியமாக ஆக்சிஜன் தேவை அதிகம் இருந்தது, டெல்டா வகை கொரோனா மோசமாக பரவியதும் சென்னையில் பலி எண்ணிக்கையை உயர்த்தும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியது. அதேபோல் மே மாதத்தில் தினசரி கேஸ்கள் குறையாமல் அதிக அளவில் பதிவாகி வந்தது. 5000க்கும் அதிகமாக சென்னையில் தினமும் கேஸ்கள் பதிவாகி வந்தது. சென்னை இந்தியாவின் அடுத்த எபிசென்டர் ஆகிவிடுமோ என்ற அச்சம் நிலவியது.

பலி எண்ணிக்கை
ஆனால் சென்னை அப்படி ஒரு ஆபத்தை சந்திக்காமல் கொரோனா பரவலில் இருந்து மீண்டு வந்துள்ளது. சென்னையில் புதிய கேஸ்களும் மொத்தமாக குறைந்துள்ளது. அதேபோல் தினசரி பதிவாகும் பலி எண்ணிக்கையும் குறைந்துள்ளது. சென்னையில் தற்போது கொரோனா பாதிப்பு சதவிகிதம் 0.8% என்ற அளவில் உள்ளது. ஒரு காலத்தில் 5%க்கும் அதிகமாக இருந்த சதவிகிதம் 0.8 ஆக குறைந்துள்ளது.

குறைவு
அதாவது சென்னையில் தற்போது 100 பேரை சோதனை செய்தால் அதில் 0.8% பேருக்கு மட்டுமே கொரோனா ஏற்படுகிறது. ஒருவருக்கும் குறைவான அளவிலேயே கொரோனா ஏற்படுகிறது. சரியாக சொல்லவேண்டும் என்றால் 500 பேரை சோதனை செய்தால் 4 பேர் மட்டுமே சென்னையில் பாசிட்டிவ் ஆக இருக்கிறார்கள். இந்தியாவின் மெட்ரோ நகரங்களில் இந்த டிபிஆர் சதவிகிதம் மிக மிக குறைவு ஆகும்.

பாசிட்டிவ்
சென்னையில் கொரோனா கேஸ்கள் முறையான தடுப்பு நடவடிக்கைகள் மூலம் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. இது எதோ ஒரு நாளில் ஏற்பட்ட மாற்றம் கிடையாது. கடந்த இரண்டு மாதமாக மிக சிறப்பான கட்டுப்பாடுகள், கண்காணிப்புகள் மூலம் சென்னையில் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. வேகமான சோதனைதான் இதற்கு முக்கிய காரணம்.

காய்ச்சல்
காய்ச்சல் முகாம்கள் மூலம் உடனடியாக நோயாளிகளை கண்டுபிடித்து அவர்களுக்கு தொடக்கத்திலேயே சிகிச்சை கொடுத்த காரணத்தால் நோயின் வீரியம் குறைந்தது. இது மருத்துவமனையில் பலியாகும் நபர்களின் எண்ணிக்கையை குறைத்தது. நோயாளிகள் சீரியஸ் ஆகும் முன்பே சிகிச்சை பெற்று குணமடைவதற்கு டெஸ்டிங் உயர்த்தப்பட்டது முக்கிய காரணம் ஆகும்.

தினமும் அதிகம்
தமிழ்நாட்டில் சென்னையில் மட்டும் தினமும் அதிக பட்ச கொரோனா சோதனை, தீவிர கட்டுப்பாடு, காய்ச்சல் முகாம், தயார் நிலையில் வைக்கப்பட்ட மருத்துவமனைகள், துரிதமான நடவடிக்கைகள் ஆகியவைதான் சென்னையில் டிபிஆர் சதவிகிதம் குறைய காரணம் ஆகும். சென்னையில் நேற்று 171 கேஸ்கள் மட்டுமே பதிவானது. ஆக்டிவ் கேஸ்கள் 1661 ஆக குறைந்துள்ளது.

அரியலூர்
தமிழ்நாட்டில் தற்போது அரியலூரில் 3.6, கோவையில் 3.4, நீலகிரியில் 4, சிவகங்கையில் 3.9, தஞ்சையில் 3.7, திருப்பூரில் 3.5 டிபிஆர் உள்ளது. இந்த மாவட்டங்களில் மட்டுமே கொரோனா பரவல் கொஞ்சம் அதிகமாக உள்ளது. இந்த மாவட்டங்களில் மட்டும் பரவலை கொஞ்சம் தடுத்துவிட்டால் தமிழ்நாடு முற்றிலுமாக கொரோனா பரவலில் இருந்தே தப்பித்துவிடும். சென்னையை போலவே இங்கும் வரும் நாட்களில் கேஸ்கள் வேகமாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications